search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "There is a commotion"

    • வனப்பகுதியில் கரடிகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.
    • கரடி ஒன்று சாலையில் நடமாடியதை கண்டு அச்சமடைந்து காரை ஓரமாக நிறுத்தினர்.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான் காட்டெருமை உள்பட பல்வேறு வன விலங்குகள் அதிகம் வசித்து வருகின்றன.

    இதில் குறிப்பாக தலமலை, கேர்மாளம் வனப்பகுதியில் கரடிகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று திம்பம்-தலமலை வனச்சாலையில் சத்தியமங்கலத்தை சேர்ந்த சிலர் காரில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கரடி ஒன்று சாலையில் நடமாடியதை கண்டு அச்சமடைந்து காரை ஓரமாக நிறுத்தினர்.

    சாலையில் கார் வருவதை கண்ட கரடி சாலையில் இருந்து வனப் பகுதிக்குள் வேகமாக சென்று மறைந்தது. கரடி நடமாட்டத்தை காரில் சென்றவர்கள் தங்களது செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து அதை வாட்ஸ்- அப், பேஸ்புக், உட்பட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

    இதையடுத்து அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    இந்நிலையில் திம்பம்- தலமலை வனச்சாலையில் பகல் நேரத்தில் கரடி நடமாடுவதால் பயணிகள் வாகனத்தை விட்டு கீழே இறங்க வேண்டாம் எனவும் எச்சரிக்கையாக இருக்கும் மாறும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். 

    • பெரியகொடிவேரி அருகே உள்ள பகுதியில் கோபி வருவாய்த்துறையினருக்கு சொந்தமான அரசு புறம்போக்கு நிலம் 40 ஏக்கர் உள்ளது.
    • பட்டா வழங்கிய இடத்தில் ஆக்கிரமிப்பு செய்ய வேண்டாம் என கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பங்களாப்புதூர் போலீசார் கூடியிருந்த மக்களை கேட்டு கொண்டதன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.

    டி.என்.பாளையம்:

    பெரியகொடிவேரி கிராமம் சென்றாயன்பாளையம் மலை மாதேஸ்வரன் கோவில் அருகே உள்ள பகுதியில் கோபி வருவாய்த்துறையினருக்கு சொந்தமான அரசு புறம்போக்கு நிலம் 40 ஏக்கர் உள்ளது.

    இந்த நிலத்தில் பெரிய கொடிவேரி கிராமங்களை சேர்ந்த நிலம் இல்லாத 508 நபர்களுக்கு வருவாய்த்துறையினர் சார்பில் ஏற்கனவே பட்டா வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கே.என்.பாளையம், நரசாபுரம், நாலிட்டேரி பகுதியை சேர்ந்த 80-க்கும் மேற்பட்டோர் ஏற்கனவே பட்டா வழங்கிய இடத்தில், குடிசை அமைத்து ஆக்கிரமிப்பு செய்ய வந்ததாக தெரிகிறது.

    இச்சம்பவம் குறித்து வருவாய்த்துறையினர் மற்றும் பங்களாப்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு கூடியிருந்த மக்களிடம் வருவாய் துறையில் முறையாக விண்ணப்பம் அளித்தால் மட்டுமே, தகுதி உள்ள நபர்களுக்கு பட்டா வழங்கப்படும்.

    ஏற்கனவே பட்டா வழங்கிய இடத்தில் ஆக்கிரமிப்பு செய்ய வேண்டாம் என கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பங்களாப்புதூர் போலீசார் கூடியிருந்த மக்களை கேட்டு கொண்டதன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர், இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

    ×