search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thevaaram Elephant"

    தேவாரம் பகுதியில் மக்னா யானை மீண்டும் அட்டகாசம் செய்வதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    உத்தமபாளையம்:

    தேவாரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் வனப்பகுதியில் மக்னா யானை சுற்றித்திரிகிறது. இந்த யானை அடிக்கடி குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் சில உயிரிழப்புகளும் நேரிட்டுள்ளது.

    எனவே இந்த யானையை வனத்துறையினர் விரட்டவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். இதற்காக பொள்ளாச்சியில் இருந்து தனிப்படை வந்தது. இருந்தபோதும் உயர் அதிகாரிகளின் உத்தரவுக்காக காத்திருக்கின்றனர்.

    தற்போது இந்த மக்னா யானையின் அட்டகாசம் மீண்டும் அதிகரித்துள்ளது.

    தேவாரம் அருகே மீனாட்சிபுரத்தை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் தோட்டத்திற்குள் புகுந்த மக்னாயானை மாமரங்களை பிடுங்கி வீசியது. அப்பகுதியில் இருந்த மாட்டுக் கொட்டகையை சேதப்படுத்தி சென்றுவிட்டது.

    இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வன அலுவலர் ஜீவனா தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர்.

    மக்னா யானையின் அட்டகாசத்தால் விவசாயிகள் தூக்கத்தை தொலைத்துள்ளனர். எனவே இந்த யானையை விரைந்து பிடிக்கவேண்டும் என வலியுறுத்திஉள்ளனர்.

    பொதுமக்களை மிரட்டி வரும் மக்னா யானையை பிடிக்க வேட்டை தடுப்பு காவலர்கள் வனப்பகுதியில் முகாமிட்டுள்ளனர்.

    உத்தமபாளையம்:

    தேவாரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பெரம்பட்டி, சாக்கலூத்து ஆகிய பகுதிகளில் மக்னா யானை விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் புகுந்து சேதப்படுத்தி வருகிறது.

    யானையின் அட்டகாசம் அதிகரித்து வருவதால் உடனே பிடித்து கேரளாவில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். இதற்காக பொள்ளாச்சியில் இருந்து வேட்டை தடுப்பு காவலர் குழு வந்துள்ளது.

    இவர்கள் முதல் கட்டமாக யானையின் நடமாட்டம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். கால் தடம், சத்தம், இரை நடைவேகம், சாணம் ஆகியவற்றை வைத்து ஒற்றை யானை மக்னா யானை அல்ல. பெண் யானை என முடிவு செய்துள்ளனர். ஆனால் யானை எதற்காக ஆக்ரோ‌ஷமாக சுற்றித் திரிகிறது. என்பது குறித்து தீவிரமாக ஆய்வு மேற் கொண்டுள்ளனர்.

    ஒற்றை யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். இதற்காக தேனி மாவட்ட கலெக்டர், வன அதிகாரி ஆகியோர் எடுத்த முடிவின் படி மத்திய வன அதிகாரியின் உத்தரவுக்காக இந்த வேட்டை தடுப்பு குழுவினர் காத்திருக்கின்றனர். உத்தரவு கிடைத்தவுடன் யானையை மயக்க ஊசி போட்டு பிடிப்பதற்கான நடவடிக்கை தொடங்கும் என வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

    தேவாரம் அருகே விளைநிலங்களில் புகுந்து மக்னா யானை நாசம் செய்தது.

    உத்தமபாளையம்:

    தேனி அருகே தேவாரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தென்னை, வாழை, மரவள்ளிகிழங்கு உள்ளிட்டவைகளை பயிரிட்டுள்ளனர்.

    மேற்குதொடர்ச்சி வனப்பகுதியில் வசித்து வரும் மக்னாயானை அடிக்கடி விளைநிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்கு புகுந்த மக்னா யானை சோளப்பயிர்களை நாசப்படுத்தியது. இதனால் விவசாயிகள் கடும் நஷ்டமடைந்தனர். இரவு நேரத்தில் தோட்டக்காவலுக்கும் செல்ல அச்சமடைந்தனர்.

    இதனால் பெரம்புட்டிஓடை, சாக்கலூத்துமெட்டு பகுதியில் வனத்துறையினர் வெடிவெடித்தும், ஓசைஎழுப்பியும் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். இருந்தபோதும் மக்னா யானை அட்டகாசம் அதிகரித்து வருகிறது. தற்போது மீண்டும் இங்குள்ள விளைநிலங்களில் புகுந்து 20 தென்னைமரங்கள் மற்றும் மரவள்ளி கிழங்குகளை சூறையாடிச்சென்றது.

    இதைபார்த்து விவசாயிகள் கண்ணீர் விட்டனர். இதுகுறித்து உத்தமபாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனஅலுவலர் ஜீவனா தலைமையில் ஊழியர்கள் விரைந்து வந்து சேதமடைந்த பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதுகுறித்து விவசாயிகள் தெரிவிக்கையில், மக்னா யானையால் தினமும் அவதியடைந்து வருகிறோம். காவலுக்கு செல்லக்கூட முடியாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளோம். இதேநிலை தொடர்ந்தால் விவசாயம் செய்வது பெரும் சவாலாகிவிடும். எனவே வனத்துறையினர் மக்னா யானையை நிரந்தரமாக வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

    ×