search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "third summit"

    வடகொரிய தலைவரை 3-வது முறையாக சந்தித்து பேச டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா சரியான அணுகுமுறையுடன் வரவேண்டும் கிம் ஜாங் அன் நிபந்தனை விதித்துள்ளார். #Trump #KimJongUn
    சியோல்:

    அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் எதிரிகளாக திகழ்ந்து, வார்த்தை யுத்தம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் சற்றும் எதிர்பாராத வகையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந்தேதி சிங்கப்பூரில் உச்சிமாநாடு நடத்தி சந்தித்து பேசினர். கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்ற ஒப்புக்கொண்டு ஒப்பந்தம் போட்டனர்.

    அதைத்தொடர்ந்து இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 27, 28-ந்தேதிகளில் வியட்நாம் தலைநகர் ஹனோயில் இரண்டாவது உச்சிமாநாடு நடத்தி சந்தித்து பேசினர். ஆனால் இந்த பேச்சுவார்த்தை, ஒப்பந்தம் ஏதுமின்றி தோல்வியில் முடிந்தது.

    அணு ஆயுதங்களை ஓரளவுக்கு கைவிடவே, தன் மீதான பொருளாதார தடைகளை எல்லாம் அகற்ற வேண்டும் என்று வடகொரிய தலைவர் கிம் கூறியதே, பேச்சுவார்த்தை தோல்விக்கு காரணம் என அமெரிக்கா கூறியது.

    ஆனால் வடகொரியாவோ, தங்கள் வாழ்வாதாரத்துக்காக பொருளாதார தடைகளில் ஒரு பகுதியையாவது விலக்கிக்கொள்ள வேண்டும் என்றுதான் கூறினோம் என தெரிவித்தது.

    இந்த நிலையில், இப்போது 3-வது முறையாக கிம் ஜாங் அன்னை சந்தித்து பேச அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விருப்பம் வெளியிட்டுள்ளார்.

    இதை வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் ஏற்றுக்கொண்டுள்ளார். அதே நேரத்தில் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா சரியான அணுகுமுறையுடன் வரவேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளார்.

    இதுபற்றி வடகொரிய பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் அவர் பேசும்போது, ‘‘இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அம்சங்களுடனும், சரியான அணுகுமுறையுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அமெரிக்கா முன்வந்தால், 3-வது உச்சி மாநாடு நடத்தி சந்திக்க நாங்கள் விரும்புகிறோம்’’ என குறிப்பிட்டார். #Trump #KimJongUn
    ×