என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thirukalyanam"

    • சோழவந்தான் அகிலாண்டேசுவரி அம்பாள் சமேத மூலநாத சுவாமி கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.
    • இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பாலமுருகன் உள்ளிட்ட ஆலய பணியாளர்கள் மற்றும் பிரதோஷ கமிட்டியினர் செய்திருந்தனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அகிலாண்டேசுவரி அம்பாள் சமேத மூலநாத சுவாமி கோவிலில் வள்ளி-தெய்வானை சமேத பாலசுப்பிரமணியருக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. இங்கு சூரசம்கார விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கி பின்னர் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. நேற்று திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

    தென்கரை இரட்டை அக்ரகாரத்தில் இருந்து நவநீதகிருஷ்ண பெருமாள் சீர்வரிசை சுமந்து வர, நாகேசுவர சிவம் மாப்பிள்ளை வீட்டாராகவும், முகேஷ் சிவம் பெண் வீட்டாராகவும் மாலை மாற்றி மேளதாளம் முழங்க வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண வைபவத்தை கிருஷ்ணமூர்த்தி வாத்தியார் நடத்தி வைத்தார். செந்தில் தீபாராதனை காட்டினார். கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என்று பக்தர்கள் பக்தி பெருக்குடன் வழிபட்டனர். தொடர்ந்து மஞ்சள் கயிறு, குங்குமம் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டு அன்னதானம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பாலமுருகன் உள்ளிட்ட ஆலய பணியாளர்கள் மற்றும் பிரதோஷ கமிட்டியினர் செய்திருந்தனர்.

    • திருவனந்தபுரம் விமான நிலையம் இன்று 5 மணி நேரம் மூடப்படுகிறது.
    • மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை விமானங்கள் புறப்படவும், இறங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற பத்மநாபசுவாமி கோவில் உள்ளது.

    இக்கோவிலில் நடைபெறும் ஐப்பசி திருவிழாவின் போது பரிவேட்டை நிகழ்ச்சி மற்றும் ஆராட்டு விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா தொடங்கி நடந்து வருகிறது. நேற்று பரிவேட்டை விழா நடந்தது.

    இன்று ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. அப்போது பத்மநாபசுவாமி கோவிலில் இருந்து சுவாமி சிலைகள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் ஊர்வலமாக எடுத்து செல்லப்படும்.

    ஊர்வலத்தில் பத்மநாபசுவாமி, நரசிங்கமூர்த்தி, கிருஷ்ணன் விக்கிரங்கள் இடம் பெறும். ஒவ்வொரு ஆண்டும் இந்த ஊர்வலம் திருவனந்தபுரம் விமான நிலைய ஓடுபாதை வழியாக செல்லும்.

    இதற்கு காரணம் இந்த ஊர்வலம் செல்லும் பாதையில் தான் 1932-ம் ஆண்டு விமான நிலையம் அமைக்கப்பட்டது. அப்போது கோவில் ஊர்வலம் நடைபெறும்போது, விமான நிலையம் மூடப்பட்டு ஊர்வலத்திற்கு வழிவிடப்படும் என்றும் ஊர்வலம் சென்றபின்பே விமான நிலையத்தில் விமானங்கள் இறங்கவும், புறப்படவும் அனுமதி வழங்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

    அப்போது முதல் ஒவ்ெவாரு ஆண்டும் பத்மநாபசுவாமி கோவிலில் ஐப்பசி மற்றும் பங்குனி மாத திருவிழாக்களின் போது விமான நிலையத்தின் ஓடு பாதை மூடப்படுவது வழக்கம்.

    அந்த வகையில் ஐப்பசி திருவிழா ஆராட்டு ஊர்வலத்தையொட்டி இன்று திருவனந்தபுரம் விமான நிலைய ஓடுபாதை 5 மணி நேரம் மூடப்படுகிறது.இன்று மாலை 4 மணிக்கு மூடப்படும் ஓடுபாதை இரவு 9 மணிக்கு மேல் தான் திறக்கப்படும்.

    இந்த ஊர்வலத்தில் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தின் இப்போதைய தலைவர் ஆதித்ய வர்மா உடைவாளுடன் முன்செல்ல ஊர்வலம் நடைபெறும். இது பற்றி விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, விமான நிலைய ஓடுபாதை மூடப்படும் தகவலை ஒருவாரத்திற்கு முன்பே அனைத்து நாடுகளின் விமான நிறுவனங்களுக்கும் தெரிவித்து விட்டோம்.

    இன்று விமான நிலைய ஓடுபாதை வழியாக சுவாமி ஊர்வலம் நடைபெறும்போது மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு அளிப்பார்கள். ஊர்வலம் சென்ற பின்பு விமான நிலைய ஓடுபாதை மீண்டும் திறக்கப்படும், என்றார்.

    • பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா ஒவ்வொரு நாளும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது
    • சுவாமிக்கும் அம்பாளுக்கும் திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த மாதம் 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் சிறப்பு அபிஷேகம், உச்சிகால பூஜை, தீபாராதனை நிகழ்ச்சியும் நடைபெற்று வந்தது.

    சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை முன்னிட்டு கும்பஜெபம், மூலமந்திரஹோமம், யாகசாலை பூஜை, சஷ்டி ஹோமம், தீபாராதனையும் நடந்தது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கீழப்பாவூர், பாவூர்சத்திரம், செட்டியூர், பனையடிப்பட்டி, செல்வவிநாயபுரம், திப்பணம்பட்டி, ஆவுடையானூர், அரியப்புரம், நாட்டார்பட்டி, கல்லூரணி உட்பட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர் . தொடர்ந்து அம்மன் தபசு மண்டபம் செல்லுதல், பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை, தீபாராதனையும், மாலை 6 மணிக்கு பக்தர்கள் சுவாமி காட்சி அருளுதல், இரவு 8 மணிக்கு சுவாமிக்கும் அம்பாளுக்கும் திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்திலிருந்து பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பாவூர்சத்திரம் விவேகானந்தர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.

    • திருக்கல்யாணத்தை தொடர்ந்து சாமி ஊஞ்சலில் எழுந்தருளும் வைபவம் நடந்தது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தஞ்சை மாவட்டம் சுவாமிமலையில் சுவாமிநாதசுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் 4-ம் படை வீடாக கருதப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் கந்த சஷ்டி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா கடந்த 24-ந் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. 25-ந் தேதி சந்திரசேகரர், வள்ளி, தெய்வானை, வீரகேசரி, வீரபாகுவுடன் சண்முகர் மலைக்கோவிலில் இருந்து படியிறங்கி உற்சவம் மண்டபத்தில் எழுந்தருளினார்.

    இதைத்தொடர்ந்து தினமும் இரு வேளை சாமி வீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் கடந்த 30-ந் தேதி நடந்தது. அன்று சண்முகருக்கு 108 சங்காபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து ஆட்டுக்கிடா வாகனத்தில் எழுந்தருளிய சண்முகர் அம்மனிடம் சக்திவேல் வாங்கி கஜமுக சூரன், சிங்கமுக சூரன், சூரபத்மன் ஆகியோரை வதம் செய்தார்.

    விழாவில் நேற்று முன்தினம் சண்முகர் காவிரி ஆற்றில் குருதி கழுவுதல் நிகழ்ச்சி்யும் தெய்வானை திருக்கல்யாணமும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருக்கல்யாணத்தை தொடர்ந்து சாமி ஊஞ்சலில் எழுந்தருளும் வைபவம் நடந்தது. கந்த சஷ்டி விழாவையொட்டி கோவிலில் சுவாமிநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், சண்முகார்ச்சனையும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் உமாதேவி மற்றும் கோவில் கண்காணிப்பாளர், பணியாளர்கள் செய்து இருந்தனர்.

    • சுப்பிரமணிய சுவாமி- தெய்வானை அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவிலில் கந்த சஷ்டியை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி- தெய்வானை அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து சங்கரநாராயணர் சன்னதி முன்பு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்பாளுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவில் துணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், சைவ சித்தாந்த சபை செயலாளர் சண்முகவேல் ஆவுடையப்பன், சைவ சித்தாந்த பேரவை தலைவர் திருமலை வேலு, கோவில் ஊழியர் கணேசன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • சென்னியாண்டவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
    • 5000-க்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

    கோவையை அடுத்த கருமத்தம்பட்டி அருகே பிரசித்தி பெற்ற விராலிக் காடு சென்னியாண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த மாதம் 25-ம் தேதி தொடங்கியது. அதனை தொடர்ந்து தினசரி சென்னியாண்டவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. தொடர்ந்து திருக்கல்யாண திருவிழா நடைபெற்றது.

    அதனையொட்டி சென்னியாண்டவர் வள்ளி-தெய்வானையுடன் மயில் வாகனத்தில் திருமணக்கோலத்தில் காட்சி அளித்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் கருமத்தம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த 5000-க்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

    இதே போல் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் உள்ள கோவையின் பழனி என்று அழைக்கப்படும் முருக தலத்தில் கந்தசஷ்டி விழாவும் அதனை தொடர்ந்து நேற்று திருக்கல்யாண திருவிழாவும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வள்ளி-தெய்வானையுடன் மலர் அலங்காரத்தில் வீற்றிருந்த முருகனை நீண்ட வரிசையில் நின்று தரிசித்து சென்றனர்.

    • விழவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சேர்ந்த அகில பாரதிய சன்னியாசிகள் சங்கத்தின் சார்பில் ஐப்பசி மாதம் 1-ம் தேதி குடகு மலையில் காவிரி அம்மன் சிலைக்கு சிறப்பு பூஜை செய்யப்படும். பின்னர் அங்கிருந்து தொடங்கி காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஈஸ்வரன் கோவில்களில் சிறப்பு அபிஷேகங்கள் செய்து சிறப்பு வழிபாடு ஐப்பசி மாதம் 30-ந் தேதி வரை காவிரி கடலில் கலக்கும் பூம்புகார் வரை நடைபெறும்.

    அதன்படி அகில பாரதிய சன்னியாசிகள் சங்கத்தின் சார்பில் மொடக்குறிச்சியை அடுத்த காங்கேயம்பாளையம் காவிரி ஆற்றின் நடுவில் அமைந்து உள்ள நட்டாற்றீஸ்வரர் கோவிலில் அகத்திய மகரிஷி லோபமித்ரா காவிரி அம்மன் உற்சவ சிலைக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் கோவில் செந்தில் குருக்கள், குகநாதன் குருக்கள் மற்றும் சிவாலய நல அறக்கட்டளை தலைவர் சந்திரசேகர், செயலாளர் காந்தி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • பக்தர்கள் கோவிலுக்கு கல்யாண சீர்வரிசை எடுத்து வந்தனர்.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பாபநாசம் அருகே நல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவிலில் சுப்பிரமணியசுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. விழாவை முன்னிட்டு சுப்பிரமணியனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன.

    இதனை தொடர்ந்து பக்தர்கள் கோவிலுக்கு கல்யாண சீர்வரிசை எடுத்து வந்தனர். அதன் பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க ஐதீக முறைப்படி திருக்கல்யாணம் நடந்தது.

    இதில் முன்னாள் அமைச்சர் காமராஜ் எம்.எல்.ஏ., கோவில் கண்காணிப்பாளர் கார்த்தி, ஆய்வாளர் குணசேகரன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சங்கர், பாஸ்கர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • பைரவேஸ்வரருக்கும், மகா பைரவிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பனந்தாள் அருகே சோழபுரத்தில் பைரவேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பைரவர் ஜெயந்தியை முன்னிட்டு மகா பைரவேஸ்வரருக்கும், மகா பைரவிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.

    முன்னதாக மாலை மாற்றும் நிகழ்ச்சி்யும், பட்டு வஸ்திரங்கள் சமர்பித்தல், சீர்வரிசை தட்டுக்கள் சமர்பித்தல் ஆகியவை நடந்தது. அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் ஹோமம் வளர்த்து பைரவேஸ்வரருக்கும், மகா பைரவிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • சபரிமலை அய்யப்பனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது
    • தர்ம சாஸ்தா பக்த ஜனசங்கம் சார்பில்

    திருச்சி

    திருச்சி திருவானைக்காவல் ஸ்ரீதர்ம சாஸ்தா பக்த ஜனசங்கம் சார்பில் சபரிமலை அய்யப்பனுக்கு அபிஷேகம், ஆராதனை, லட்சார்ச்சனை மற்றும் ஸ்ரீ தர்ம சாஸ்தாவுக்கும் பூர்ணாம் பாளுக்கும், புஷ்கலாம்பாளுக்கும் திருக்கல்யாணம் திருச்சி திருவானைக்காவல் விபூதி பிரகாரத்தில் உள்ள ஸ்ரீசுமங்கலி மஹாலில் நேற்று நடைபெற்றது.

    புதுக்கோட்டை ஸ்ரீ புவனேஸ்வரி பீடம் பூஜ்யஸ்ரீ ப்ரணவானந்தா சுவாமிகள் தலைமையிலும் வில்லிவாக்கம் பிரம்மஸ்ரீஸ்ரீ விஸ்வநாதசர்மா ஆசியுடன் சென்னை வில்லிவாக்கம் ஸ்ரீ அய்யப்ப பஜனை சங்கம் சிவராஜ் சர்மா தலைமையிலும் ஸ்ரீ பூர்ண புஷ்கலாம்பாள் சமேத ஸ்ரீ ஹரிஹர புத்தரரின் திருக்கல்யாணம் நடைபெற்றது.

    விழா ஏற்பாடுகளை ஜம்புநாதன் (எ) ஸ்ரீதர், நாகநாதர் கேட்டரிங் குமார், ராஜகோபாலன், ராமச்சந்திரன், வேங்கடரமணி, ஸ்ரீதர், மணிகண்ட சாஸ்திரிகள், நாராயண ஐயர், டி.பி.ஆர்.ஜி.சக்தி. பொன்ராஜ், ராஜகோபால் ஆகியோர் செய்து இருந்தனர். முன்னதாக கணபதி ஹோமம், அபிஷேக ஆராதனை, லட்சார்ச்சனை, தீபாரதனை, அய்யப்பன் வீதி உலா நடைபெற்றது.

    மாலை ஆஞ்சநேய உற்சவம் நடைபெற்றது. மதியம் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    • மாங்கல்ய தாரணம், வாரணமாயிரம் மற்றும் ஆரத்தி நடந்தது.
    • பலர் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கடப்பா மாவட்டம் புரதட்டூரில் உள்ள 2-டவுன் போலீஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் சீனிவாச கல்யாண உற்சவம் நடந்தது. ஏழுமலையான் கோவிலின் தலைமை அர்ச்சகர்களில் ஒருவரான கிருஷ்ண சேஷாசல தீட்சிதர் தலைமையில் அர்ச்சகர்கள் மற்றும் வேத பண்டிதர்கள் அடங்கிய குழு சீனிவாச கல்யாணத்தை நடத்தியது. அதில் புண்யாஹவச்சனம், விஸ்வக்சேன ஆராதனை, அங்குரார்ப்பணம், மஹா சங்கல்பம், கன்யாதானம், மாங்கல்ய தாரணம், வாரணமாயிரம் மற்றும் ஆரத்தி நடந்தது.

    நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. சிவபிரசாத்ரெட்டி, தேவஸ்தான அறக்காவலர் குழு உறுப்பினர் மாருதிபிரசாத், பறக்கும்படை அதிகாரி பாலிரெட்டி, சுவேத பவன் இயக்குனர் பிரசாந்தி, கல்யாண திட்ட உதவி அதிகாரி ராமுலு, கண்காணிப்பாளர் கிராந்திகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது
    • இதில் விநாயகர் பூஜை மாங்கல்ய பூஜை, ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தன.

    கரூர்:

    கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசனத்தையொட்டி நேற்று காலை திருக் கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக கோவில் மண்டபத்தில் அலங்காரவல்லி சவுந்தரநாயகி உடன் மணக்கோலத்தில் பசுபதீஸ்வரர் எழுந்தருளினார். இதில் விநாயகர் பூஜை மாங்கல்ய பூஜை, ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தன.

    பின்னர் பசுபதீஸ்வரருக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர், வேதமந்திரங்கள் முழங்க திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அப்போது அங்கிருந்த பக்தர்கள் பூக்களை துாவி, சுவாமியை வழிபட்டனர். தொடர்ந்து இன்று நடராஜருக்கு விசேஷ அபிஷேகமும், ஆராதனையும், பின்னர், ஆருத்ரா தரிசன நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    ×