search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thirumangalam metro station"

    திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் பயணிகளுக்காக 15 வாடகை கார் வசதி அமைக்கப்பட்டுள்ளது. ரூ.5 ஆயிரம் செலுத்தி கார்களை தானாகவே ஓட்டிச் செல்லாம். #MetroTrain
    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காகவும் விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் வசதி அமைக்கப்பட்டுள்ளது.

    கோயம்பேடு-ஆலந்தூர், சின்னமலை-விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம்-சென்ட்ரல், சைதாப்பேட்டை-டி.எம்.எஸ். வரை சுரங்கப் பாதையிலும் மெட்ரோ ரெயில் சேவை தற்போது நடந்து வருகிறது.

    பயணிகள், பொதுமக்கள் வரவேற்பை தொடர்ந்து சென்னை முழுவதும் மெட்ரோ ரெயில் சேவை விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது.

    மெட்ரோ ரெயில் பயணிகளை கவரும் விதமாக பல்வேறு சிறப்பு வசதிகளை மெட்ரோ ரெயில்நிர்வாகம் உருவாக்கி வருகிறது. வாடகை சைக்கிள், வாடகை மோட்டார்சைக்கிள், வாடகை கார் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில் மேலும் பயணிகளை கவரும் விதமாக வாடகை கார்களை சொந்த பொறுப்பில் தானாகவே ஓட்டிச் செல்லும் திட்டத்தை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிமுகப்படுத்தி உள்ளது.

    திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இதற்காக 15 கார் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரெயில் பயணிகள் ரூ.5 ஆயிரம் முன்பணம் செலுத்தி கார்களை தானாக ஓட்டிச் செல்லலாம்.

    ‘போர்டு பிகோ’, ‘டாடா ஹெஷா’ வகை கார்கள் வாடகைக்கு விடப்படுகிறது. தினசரி அல்லது வாரம் அடிப்படையில் இந்த கார்களை ‘ஜும் கார்’, ‘மொபைல் ஆப்’, ‘வெப்சைட்’ மூலம் புக் செய்து ரூ.5 ஆயிரம் செலுத்தி பயணிகள் எடுத்துச் செல்லலாம்.

    டிரைவிங் லைசென்ஸ் காப்பி இணைத்து செல்லும் இடம், தூரம், எரிபொருள் மற்றும் பேக்கேஜ் வசதிகளை பயணிகள் பதிவு செய்து கொள்ளலாம்.

    இந்த கார்கள் அனைத்திலும் ‘ஜி.பி.எஸ்.’ மற்றும் பாதுகாப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் வரவேற்பை தொடர்ந்து மேலும் பல மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் இந்த வாடகை கார் வசதி உருவாக்கப்படும் என மெட்ரோ ரெயில் அதிகாரிகள் தெரிவித்தனர். #MetroTrain
    ×