என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » thirumavalavan birthday
நீங்கள் தேடியது "thirumavalavan birthday"
இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
- இம்மண்ணில் ஆழ விதைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் கருத்துகளைத் தனது பேச்சாலும் செயல்களாலும் வளப்படுத்திடும் அன்புச் சகோதரர்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
இம்மண்ணில் ஆழ விதைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் கருத்துகளைத் தனது பேச்சாலும் செயல்களாலும் வளப்படுத்திடும் அன்புச் சகோதரர் தொல். திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனின் 56-வது பிறந்த நாளை முன்னிட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் 25 வி.சி.க. பொறுப்பாளர்கள் ரத்ததானம் செய்தனர்.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனின் 56-வது பிறந்த நாளை முன்னிட்டு கட்சியின் தொகுதி செயலாளர் இலக்கியதாசன் தலைமையில் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையுடன் இணைந்து 25 வி.சி.க. பொறுப்பாளர்கள் ரத்ததானம் செய்தனர்.
அதன்பின்னர் அக்கட்சியின் ஊடகப்பிரிவு சுந்தர் தலைமையில் உள்நோயாளிகள் மற்றும் பார்வையாளர்கள் என 100 நபர்களுக்கு இலவசமாக பிரட், மற்றும் வேட்டி, சேலைகள், வழங்கினர்.
அதனை தொடர்ந்து திருச்சி -சிதம்பரம் சாலையில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் பாரதி முன்னிலை வகித்தார். முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் மற்றும் காமராஜ் லோகநாதன், சிவா சக்கராயுதம், சின்னராசா, குமாரவேல், ராஜா, கருணா, சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். மருத்துவமனை டாக்டர் ரவிசங்கர் தலைமையில், டாக்டர் மோகன் அரியலூர் அரசு மருத்துவமனை ரத்த வங்கி குழுவினர் ரத்ததானம் செய்பவர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட ரத்தத்தினை கொண்டு சென்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X