search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruvalla Court"

    இருமுடி கட்டுடன் சபரிமலை சென்றபோது கைதான கேரள மாநில பா.ஜ.க. பொதுச் செயலாளர் சுரேந்திரனை ஜாமினில் விடுதலை செய்யுமாறு திருவல்லா கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. #SabarimalaTemple #KSurendran
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்து வருகிறது. இதனால், ஐயப்பன் கோவில் அமைந்திருக்கும் சபரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது

    இந்நிலையில், கடந்த 17-ம் தேதி கேரள மாநில பா.ஜ.க. பொதுச் செயலாளர் சுரேந்திரன் தனது காரில் மேலும் இருவருடன் ஐயப்பனை தரிசிப்பதற்காக இருமுடி கட்டுடன் சென்று கொண்டிருந்தார்.

    அவரை நிலக்கல் அருகே பத்தினம்திட்டா போலீஸ் சூப்பிரண்டு யாதிஷ் சந்திரா தடுத்து நிறுத்தினார். ஐயப்பன் கோயிலுக்கு செல்வதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் கார் நுழைவுக்கான அனுமதி சீட்டும், தரிசனத்துக்காக கோவில் நிர்வாகத்திடம் ரசீதும் பெற்றிருக்கும் எங்களை ஏன் தடை செய்கிறீர்கள்? என்று போலீசாரிடம் சுரேந்திரன் வாக்குவாதம் நடத்தினார்.

    வாக்குவாதம் முற்றிய நிலையில் சுரேந்திரனை கைது செய்த போலீசார், பத்தினம்திட்டா மாவட்ட மாஜிஸ்திரேட் இல்லத்தில் மறுநாள் அதிகாலை சுரேந்திரனை ஆஜர்படுத்தினர். அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் அடைக்குமாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதைதொடர்ந்து, சுரேந்திரன் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.



    சுரேந்திரன் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பா.ஜ.க.வினர் கடந்த இருநாட்களாக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையில், சுரேந்திரனை ஜாமினில் விடுதலை செய்யுமாறு கோரி திருவல்லா நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் மனு தாக்கல் செய்தார். இம்மனு மீது இன்று விசாரணை நடத்திய நீதிபதி சுரேந்திரனுக்கு ஜாமின் அளித்து உத்தரவிட்டார். #SabarimalaTemple #KeralaBJPleader #KSurendran 
    ×