search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruvannamalai ATM"

    • சென்னையில் பதுங்கி இருந்த நிஜாமுதீன் என்பவரை தனிப்படை போலீசார் இன்று காலை கைது செய்தனர்.
    • திருவண்ணாமலைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12-ந் தேதி 4 ஏடிஎம்களை கியாஸ் வெல்டிங் மெஷின் மூலம் உடைத்து ரூ.73 லட்சத்தை மர்மகும்பல் கொள்ளையடித்தது.

    இதுதொடர்பாக வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் 5 மாவட்ட எஸ்பிக்கள் கொண்ட 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. கர்நாடகம், குஜராத், ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கு தப்பிய கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படையினர் முகாமிட்டனர்.

    இதில், கொள்ளை கும்பலின் மூளையாக செயல்பட்ட அரியானா மாநிலத்தை சேர்ந்த முகமது ஆரிப்(வயது 35), ஆஜாத்(37) ஆகிய 2 பேரை துப்பாக்கி முனையில் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.3 லட்சம் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.

    அதேபோல் கர்நாடக மாநிலம் கோலாரில்(கேஜிஎப்), ஒரு லாட்ஜில் கொள்ைள கும்பல் தங்கியிருந்து கொள்ளைக்கு திட்டமிடவும், பண பறிமாற்றம் செய்யவும் உதவியாக இருந்த கொள்ளை கும்பலை சேர்ந்த கோலார் மகாலட்சுமி லேஅவுட் பகுதியை சேர்ந்த குர்தீஷ் பாஷா(43), அசாம் மாநிலம் லாலாப்பூரை சேர்ந்த அஷ்ரப் உசேன்(26) ஆகியோரையும் கைது செய்தனர்.

    போலீஸ் விசாரணையில் ரூ. 70 லட்சம் பதுக்கி வைத்திருக்கும் இடம் குறித்து தகவலை தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து தனிப்படையினர் அரியானா மாநிலத்திற்கு விரைந்தனர். அங்கு பணம் பதுக்கி உள்ள நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்நிலையில் ஏடிஎம் கொள்ளை சம்பவம் தொடர்பாக சென்னையில் பதுங்கி இருந்த நிஜாமுதீன் என்பவரை தனிப்படை போலீசார் இன்று காலை கைது செய்தனர்.

    அவரை திருவண்ணாமலைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×