என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Thoothukudi gun shoot"
- லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு அரசு செயலாளர், டிஜிபி ஆகியோர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
- உயிருக்கு பயந்து ஓடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை ஜீரணித்துக் கொள்ள முடியாது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தபோது பணியில் இருந்த காவல்துறை, வருவாய் துறை அதிகாரிகளின் சொத்து விவரங்கள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய 3 மாதம் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிகாரிகள் தங்கள் சொத்து விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்றும் அந்த சொத்துக்களை வாங்குவதற்கான வருவாய் ஆதாரங்களை லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரிக்க வேண்டியுள்ளது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு அரசு செயலாளர், டிஜிபி ஆகியோர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், உயிருக்கு பயந்து ஓடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை ஜீரணித்துக் கொள்ள முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கொடுத்து வழக்கை முடித்து வைத்தது எப்படி நியாயம் ஆகும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஒரு தனி நபரின் கட்டுப்பாட்டில் அரசு இயந்திரம் செல்வது சமூகத்துக்கு மோசமானது. அனுமதி இன்றி தொழிற்சாலை செயல்பட்டது அரசுக்கு தெரிவித்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? எல்லோரும் எங்கு இருந்தார்கள் என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.