என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » thoothukudiincident
நீங்கள் தேடியது "thoothukudiincident"
துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஆவணங்கள் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 5 வழக்குகள் பதிவு செய்தனர். #ThoothukudiShooting
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் கடந்த 22-ந் தேதி நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் இறந்தனர். இது தொடர்பாக தூத்துக்குடி வடபாகம், தென்பாகம் மற்றும் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் துப்பாக்கி சூடு உள்ளிட்ட 5 வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டி.ஜி.பி.ராஜேந்திரன் உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணை அதிகாரியாக நெல்லை சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் துப்பாக்கி சூடு உள்ளிட்ட 5 வழக்குகளுக்கான ஆவணங்கள் அனைத்தும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மூலம் நேற்று முன்தினம் சி.பி.சி.ஐ.டி. போலீசிடம் ஒப்படைக்கப்பட்டது. உடனடியாக அந்த ஆவணங்கள் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 5 வழக்குகள் பதிவு செய்தனர்.
இதற்கு குற்ற எண் 4 முதல் 8 வரை வழங்கப்பட்டு உள்ளது. இந்த முதல் தகவல் அறிக்கை சம்பந்தப்பட்ட கோர்ட்டிலும் நேற்று ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்குமார் இன்று (திங்கட்கிழமை) தூத்துக்குடிக்கு வர உள்ளார். இதனால் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணை முடுக்கி விடப்பட்டு உள்ளது. #ThoothukudiShooting

×

X