என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "threatening"

    • கடவூர் தாசில்தாருக்கு, தொழிலாளி ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்
    • அவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    கரூர்,

    குளித்தலை அடுத்த, கடவூர் தாசில்தார் முனிராஜ்.இவர், கவுண்டம்பட்டி அரசு தொடக்கப்பள்ளி அருகே, நத்தம் புறம்போக்கு நிலம் வழியாக, காத்தான் தெரு, சோப்புலான் தெரு, கொம்பு காரன் தெரு ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பாதையில், தடுப்பு ஏற்படுத்தியவரிடம் விசாரித்து கொண்டிருந்தார். அப்போது, தொண்டமான் பஞ்., கவுண்டம் பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி கிருஷ்ணன் (வயது 55) என்பவர், தாசில்தாரை பணி செய்ய விடாமல் தடுத்து, மிரட்டியுள்ளார். இதுகுறித்து, தாசில்தார் கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார், கிருஷ்ணன் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • காந்தி மார்க்கெட் வியாபாரியிடம் ரூ.1 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • போனில் தொடர்பு கொண்டு

    திருச்சி:

    ஸ்ரீரங்கம் ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை (வயது 65) இவர் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில்மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இவரது செல்போனுக்கு

    மர்ம ஆசாமி ஒருவர் தொடர்பு கொண்டு சின்னதுரையிடம் பேசி ரூ.1 லட்சம் பணம் கடன் கேட்டுள்ளார் அதற்கு சின்னதுரை மறுப்பு தெரிவிக்கவே அவரை அசிங்கமாக திட்டிக் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து சின்னதுரை

    ஸ்ரீரங்கம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து

    சின்ன துரையை செல்போனில் மிரட்டிய மர்ம ஆசாமி யார் ?என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்சென்னை பெண்ணிடம் விசாரணை

    கே.கே. நகர், 

    திருச்சி விமான நிலையத்திலிருந்து இலங்கை, மலேசியா, மஸ்கட் ஓமன் துபாய், சிங்கப்பூர், உள்ளிட்ட பல்வேறு வெளி நாடுகளுக்கும் அதே போன்று பெங்களூர் சென்னை புதுடெல்லி உள்ளிட்ட பெரு நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    நாள்தோறும் 34 விமான சேவைகள் உள்ளதால் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயணிகளும் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் இன்று அதிகாலை 2.32 மணிக்கு திருச்சி விமான நிலைய முனைய மேலாளர் தொலைபேசி எண்ணுக்கு வாட்ஸ்அப் மெசேஜ் வந்தது.

    சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த சங்கீதா வேலப்பன் என்ற பெண் அந்த மெசேஜை அனுப்பியிருந்தார். அதில் அவர் திருச்சி விமான நிலையத்திற்கு வரும் 34 விமானங்களில் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களும், வெடிகுண்டுகளும் இருப்பதாகவும் உடனடியாக சோதனை மேற்கொள்ளுங்கள் என மிரட்டல் விடுக்கும் வகையில் குறிப்பிட்டிருந்தார்.

    இதனையடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் வெடிகுண்டு நிபுணர்களுடன் விமான நிலையம் முழுவதும் சோதனை மேற்கொண்டனர்.

    ஆயினும் வெடிகுண்டு ஏதும் கண்டறியப்படவில்லை. இதை தொடர்ந்து வாட்சப் மெசேஜ் அனுப்பிய சங்கீதா வேலப்பனிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிய வந்தது.

    இதையடுத்து அவர் மீது வழக்கு ஏதும் பதிவு செய்யாமல் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிய வருகிறது. ஏற்கனவே கடந்த சில மாதங்களூக்கு முன்பு இதுபோன்று மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜான் கருப்பசாமி நவராஜனுக்கு ரூ.80 ஆயிரம் கடனாக கொடுத்தார்.
    • ஆத்திரம் அடைந்த நவராஜன், பணம் கேட்டால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

    களக்காடு:

    வள்ளியூர் அருகே உள்ள சண்முகபுரத்தை சேர்ந்தவர் தேவதாசன் மகன் நவராஜன். இவர் கடந்த 2021-ம் ஆண்டு களக்காடு அருகே மேலக்காடுவெட்டி கிறிஸ்தவ ஆலயத்தில் சபை ஊழியராக வேலைபார்த்து வந்தார்.

    அப்போது, இவரும், இவரது மனைவி எல்சிராணியும், மேலக்காடு வெட்டியை சேர்ந்த தொழிலாளி ஜான் கருப்பசாமியிடம் (வயது46) சொந்த வீடு கட்டுமான பணி நடைபெறுவதாகவும், அதற்காக கடன் வாங்கியுள்ளதாகவும், கடன் கொடுத்தவர் பணத்தை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுப்பதாகவும் கூறி, அதற்காக ரூ.80 ஆயிரம் கேட்டுள்ளார்.

    இதை நம்பிய ஜான் கருப்பசாமி நவராஜனுக்கு ரூ.80 ஆயிரம் கடனாக கொடுத்தார். இதுபோல அதே ஊரைச் சேர்ந்த சாமுவேல் மனைவி பொன்னுத்தாயிடம் 6 பவுன் தங்க நகைகளை நவராஜனும், அவரது மனைவி எல்சிராணியும் கடனாக பெற்றுள்ளனர்.

    பின்னர் பணத்தையும், தங்க நகைகளையும், திரும்ப கொடுக்கவில்லை. இந்நிலையில் சம்பவத்தன்று ஜான் கருப்பசாமி களக்காடு புதிய பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நவராஜனிடம், ஜான் கருப்பசாமி பணத்தை திரும்ப கேட்டார்.

    அதற்கு ஆத்திரம் அடைந்த நவராஜன், பணத்தை தர முடியாது, இனிமேல் பணம் கேட்டால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் மற்றும் போலீசார் இதுதொடர்பாக சபை ஊழியர் நவராஜன், அவரது மனைவி எல்சிராணி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2019 ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை ரூ.70 லட்சம் மதிப்பில் நூல் வாங்கி உள்ளார்.
    • நூல் தரத்தில் வேறுபாடு மற்றும் குறைபாடு.

    பல்லடம் :

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாணிக்காபுரம் ரோடு பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது40). இவர் அதே பகுதியில் விசைத்தறி ஜவுளி உற்பத்தி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் ஜவுளிநிறுவனத்திற்கு தேவையான நூலை ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் சிலுக்குரிப் பேட்டையில் செயல்பட்டு வரும் இடுப்பிலபாடு காட்டன் மில்லில் இருந்து கடந்த 2019 ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை ரூ.70 லட்சம் மதிப்பில் நூல் வாங்கி உள்ளார். இதில் ரூ.44 லட்சம் வரை பணம் செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நூல் தரத்தில் வேறுபாடு மற்றும் குறைபாடு ஏற்பட்டதால் இது குறித்து நூல் மில்லுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் முறையாக பதில் தராததால் மீதி தொகை ரூ.26 லட்சத்தை தராமல் நிறுத்தி வைத்து கொண்டதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் நேற்று முன்தினம் நூல் வியாபார இடைத்தரகர்கள் அர்பித் ஜெய் மற்றும் சின்னசாமி ஆகியோருடன் ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த ரவிக்குமார், வெங்கடகிருஷ்ணா, வெங்கடேஷ்வரலூ மற்றும் ஆந்திரா மாநில போலீஸ் கோபி உள்ளிட்ட 6 பேர் பல்லடம் போலீஸ் நிலையத்திற்கு வந்து ஆந்திர மாநிலம் குண்டூரில் இருந்து வருவதாகவும், இடுப்பிலபாடு காட்டன் மில்லில் நூல் கொள்முதல் செய்ததில் ரூ.26 லட்சம் பல்லடத்தை சேர்ந்த விசைத்தறி ஜவுளி உற்பத்தி நிறுவன உரிமையாளர் தமிழ்செல்வன் தராததால் சிலுகுரிப்பேட் முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், கோர்ட் உத்தரவுப்படி பிடிவாரண்ட் பெற்று உரிமையாளர் தமிழ்செல்வனை போலீஸ் உதவியுடன் அழைத்து சென்று கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தனர்.

    இதனை அடுத்து தமிழ்செல்வனுக்கு பல்லடம் போலீசார் தகவல் அளித்தனர். தகவலை அடுத்து ஆஜரான தமிழ்செல்வன் கோர்ட் உத்தரவு குறித்து சந்தேகம் அடைந்து தனது வழக்கறிஞருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனிடையே கோர்ட்டு ஆர்டர் போலியாக தயாரிக்கப்பட்டதை கண்டறிந்த வழக்கறிஞர் இது குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலை அடுத்து உஷாரான போலீசார் புகார் கொடுக்க வந்த 3பேரை சுற்றி வளைத்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். இதற்குள் ஆந்திர போலீஸ் கோபி அங்கிருந்து தலைமறைவானார்.

    பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் பிடிபட்ட 3 பேரிடம் கிடுக்கிபிடி விசாரணை மேற்கொண்டதில் போலியாக கோர்ட்டு ஆவணங்கள் தயாரித்து இது போன்று வராக்கடன்களை வசூலிக்க தொழில் அதிபர்களை அழைத்துச்சென்று மிரட்டி பணத்தை வசூலிப்பதாகவும் தெரிவித்தனர்.மேலும் தமிழகம் மட்டுமின்றி மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் இது போன்று வசூலிக்க போலி ஆவணங்கள் தயாரித்துள்ளதும், பல்லடத்தில் மட்டும் 5 தனியார் நிறுவனங்களில் இது போன்று வராக்கடனை வசூலிக்க திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து போலி கோர்ட்டு ஆவணங்கள் தயார் செய்து மோசடியில் ஈடுபட்ட குண்டூரை சேர்ந்த முடலபடி ரவிக்குமார், குண்சாலா வெங்கடகிருஷ்ணா, டாகிபார்த்தி வெங்கடேஷ்வரலு ஆகியோரை கைது செய்து பல்லடம் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள நூல்மில் உரிமையாளர் பிரம்மநாயுடு, மேலாளர் சத்தியநாராயணராவ், ஆந்திர போலீஸ் கோபி ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • கூடுதல் வட்டி கேட்டு பெண் உட்பட 2 பேருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
    • வாழைப்பழம் விற்பனை செய்து வருகிறார்

    திருச்சி:

    திருச்சி உரையூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் ரோஸி. இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உறையூரைச் சேர்ந்த துரைராஜ் என்பவரிடம் ரூ.70 ஆயிரம் பணம் கடனாகப் பெற்றார். பின்னர் அவர் 1 லட்சத்தி 50 ஆயிரம் வட்டியாக மட்டும் திருப்பிக் கொடுத்து உள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 8ஆம் தேதி இரவு துரைராஜ் கூடுதலாக வட்டி கேட்டு ரோஸியை மிரட்டியுள்ளார். இதுகுறித்து ரோஸி தில்லை நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் துரைராஜ் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதே போல் திருச்சி மாவட்டம் காந்தி மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் சார்லஸ் இவர் தள்ளுவண்டியில் வாழைப்பழம் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார் . இவர் கைலாஷ் நகர் பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவரிடம் 10 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கி உள்ளார்.

    இந்நிலையில் கடந்த 14ம் தேதி இரவு கூடுதல் வட்டி கேட்பதோடு அவரை தகாத வார்த்தையால் திட்டி மிரட்டி உள்ளார். இதுகுறித்து சார்லஸ் காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



    திருமணம் செய்து கொள்வதாக பெண்ணிடம் உல்லாசமாக இருந்து விட்டு கொலை மிரட்டல் விடுத்த வியாபாரியை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் சொசைட்டி காலனியைச் சேர்ந்தவர் முத்துராஜா (வயது 42). இவர் தாராபுரம் சாலையில் உள்ள ஒரு மளிகை கடையில் வேலை பார்த்து வந்தார். அதே கடையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கே.அத்திக்கோம்பையைச் சேர்ந்த அன்னாள் ஞானசுந்தரி என்பவர் வேலைக்கு சேர்ந்தார்.

    இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில் ஞானசுந்தரியை காதலிப்பதாக முத்துராஜா கூறினார். மேலும் அவரை பல இடங்களுக்கு தனியாக அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துள்ளார்.

    இது மட்டுமின்றி ஞானசுந்தரியிடம் ரூ.5 லட்சம் பணம் வாங்கி முத்துராஜா தனது கடனை அடைத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஞானசுந்தரி கேட்கவே தனக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பதாக அவர் கூறினார்.

    இதை கேட்டதும் அதிர்ச்சியடைந்த ஞானசுந்தரி தான் கொடுத்த ரூ.5 லட்சத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் பணத்தை தர மறுத்ததுடன் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஞானசுந்தரி புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் முத்துராஜா, அவரது மனைவி ஈஸ்வரி ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவட்டாரில் போலீசார் வாகனசோதனையில் ஈடுபட்டனர். அப்போது சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

    திருவட்டார்:

    திருவட்டார், காங்கரை பகுதியில் நேற்று சப்- இன்ஸ்பெக்டர் சத்திய சோபன் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிள் வேகமாக வந்தது. அதில் 2 வாலிபர்கள் இருந்தனர். மோட்டார் சைக்கிளை நிறுத்தும்படி போலீசார் சைகை காட்டியும் அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் கூச்சலிட்டபடி வேகமாக சென்றனர்.

    உடனே போலீசார் அந்த மோட்டார் சைக்கிளை துரத்தி சென்றனர். திருவட்டார் பஸ் நிலையம் அருகே மோட்டார் சைக்கிளை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    பிடிப்பட்டவர்கள் குலசேகரம் பகுதியை சேர்ந்த பிரேம் விஜில் ராஜ் (வயது 33), இன்னொருவர் ஆற்றூரை சேர்ந்த மகேஷ் குமார் (31) என தெரியவந்தது.

    அவர்களிடம் போலீசார் வாகனத்தை அதிவேகத்தில் ஓட்டி சென்றது ஏன்? என்று கேட்டு விசாரித்தனர். அப்போது வாலிபர்கள் இருவரும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் சப்-இன்ஸ்பெக்டர் சத்திய சோபனையும் மிரட்டினர்.

    இது பற்றி சப்-இன்ஸ்பெக்டர் சத்திய சோபன் திருவட்டார் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வாலிபர்கள் பிரேம் விஜில் ராஜ், அவரது நண்பர் மகேஷ்குமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், மிரட்டல் விடுத்தது என பல்வேறு பிரிவுகளில் வழக்குபதிவு செய்தனர்.

    கைதான பிரேம் விஜில் ராஜ் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். விடுமுறையில் இப்போது ஊருக்கு வந்துள்ளார்.

    திருமங்கலத்தில் காதலித்த பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    பேரையூர்:

    திருமங்கலம் பயோனியர் காலனியைச் சேர்ந்த வாவாபக்ருதீன் மகள் அஷீமா பானு (வயது 22). இவர் திருமங்கலம் நகர் போலீசில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:-

    உசிலம்பட்டி அருகே உள்ள விக்கிரமங்கலத்தை சேர்ந்த பிரேம்குமார் (22) என்பவருடன் பள்ளி படிப்பு காலம் முதல் பழக்கம் இருந்தது. இது காதலாக மாறியது.

    கடந்த ஆண்டு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த நிலையில் எனக்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சயமாகி உள்ளது. இதனை அறிந்த பிரேம்குமார் எனது வீட்டுக்கு வந்து நட்பு ரீதியாக எடுத்த போட்டோவை காண்பித்து மிரட்டல் விடுத்தார்.

    என் மீது ஆசிட் வீசிவிடுவேன் என்றும் எச்சரித்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து பிரேம்குமார் கைது செய்யப்பட்டார்.

    போடி பஸ் நிலையத்தில் பயணிகளை மன நோயாளிகள் மிரட்டி வருகிறார்கள்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி நகராட்சி பஸ் நிலையத்துக்கு தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள். இங்கு நிரந்தரமாக 15 மனநோயாளிகள் மற்றும் பிச்சைக்காரர்கள் தங்கி உள்ளனர். பயணிகள் நிற்கும், இளைப்பாறும் இடத்தில் அவர்கள் படுத்துக்கொண்டும், அதே இடத்தில் இயற்கை உபாதைகளை கழித்தும் வருகின்றனர்.

    இதனால் பயணிகள் நிற்கும் இடத்தில் துர்நாற்றம் வீசி மழைக்கு கூட ஒதுங்க முடியாத நிலை உள்ளது. மனநோயாளிகள் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகளை கம்பால் துரத்தி தாக்கி வருகிறார்கள். இதனால் பஸ் நிலையத்துக்குள் வருவதற்கே பயணிகள் அச்சம் அடைந்து வருகிறார்கள். மேலும் இரவு நேரங்களில் மது அருந்தி அதே இடத்தில் வாந்தி எடுத்து அசுத்தம் செய்து வருகின்றனர்.

    கடந்த சில ஆண்டுக்கு முன்பு பஸ் நிலையத்தில் மனநோயாளிகளாக சுற்றி திரிந்த பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு அவர்கள் கர்ப்பம் அடைந்து உயிரிழந்தனர். மீண்டும் அதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்கவும், மனநோயாளிகள் மற்றும் பிச்சைக்காரர்களை கோடாங்கிபட்டியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று பயணிகளும், பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

    சேலம் புதிய பஸ்நிலையத்தில் இளம்பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டிய திருநங்கை கைது செய்யப்பட்டார்.
    சேலம்:

    சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், பிற மாநிலங்களுக்கும் தினமும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் நேற்று ஈரோடு மாவட்டம் பவானிக்கு செல்லும் பஸ்சில் பயணிகள் அமர்ந்திருந்தனர். அப்போது ஒரு திருநங்கை அந்த பஸ்சிற்கு வந்து அங்கிருந்த பயணிகளிடம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இதைப்பார்த்த அந்த பஸ்சில் இருந்த மாஜிஸ்திரேட்டு ஒருவர், திருநங்கையிடம் ஏழை, எளிய மக்களிடம் இவ்வாறு பணம் கேட்டு தொந்தரவு செய்ய கூடாது என அறிவுரை கூறினார். இதைகேட்காமல் அந்த திருநங்கை மாஜிஸ்திரேட்டிடம் தகராறு செய்துள்ளார். இதையடுத்தும் சேலம் குகை பகுதியை சேர்ந்த சத்யா (வயது 28) என்ற பெண்ணிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்தார்.

    இதைத்தொடர்ந்து சத்யா பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் அந்த திருங்கையை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர், பெரமனூர் நாகம்மாள் தோட்டம் பகுதியை சேர்ந்த திருநங்கையான ஜாவீத் (27) என்பதும், பயணியிடம் பணம் கேட்டு மிரட்டியதும் தெரியவந்தது. பின்னர் அவரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோகன் கைது செய்தார்.

    இதுகுறித்து பயணிகள் கூறுகையில், சேலம் புதிய பஸ்நிலையத்தில் இருந்து வெளியூர், பிற மாவட்டங்களுக்கு செல்வதற்காக தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு வரும் பயணிகளிடம் சிலர் பணம் கேட்டு மிரட்டுகிறார்கள். இரவு நேரத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளிடம் தொந்தரவு செய்து வருகின்றனர். எனவே பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 
    பிரதமர் நரேந்திர மோடி மீது ரசாயன தாக்குதல் நடத்துவேன் என மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். #Modi #Threatening #ChemicalAttack
    மும்பை:

    டெல்லியில் உள்ள தேசிய பாதுகாப்பு படை கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த வெள்ளிக்கிழமை அழைப்பு ஒன்று வந்தது. அதில், பேசிய நபர், ‘பிரதமர் நரேந்திர மோடி மீது ரசாயன தாக்குதல் நடத்துவேன்’ என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். இதைக்கேட்டு கட்டுப்பாட்டு அறையில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்தநிலையில், மிரட்டல் விடுத்த ஆசாமி மும்பையில் இருந்து கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு பேசியது கண்டறியப்பட்டது.

    இதுபற்றி தேசிய பாதுகாப்பு படையினர் மும்பை போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து போலீசார் செல்போன் எண் அலைவரிசை மூலம் மர்மஆசாமி இருக்கும் இடத்தை ஆராய்ந்தனர். இதில், அவர் மும்பை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருப்பது தெரிய வந்தது. போலீசார் அங்கு விரைந்து சென்று குறிப்பிட்ட அந்த நபரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    விசாரணையில், அவரது பெயர் காசிநாத் மண்டல் (வயது22) என்பதும், ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அவர், மும்பை வால்கேஸ்வர் பகுதியில் வசித்து வருவதும் தெரியவந்தது.

    அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு போலீஸ் காவலில் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.   #Modi #Threatening #ChemicalAttack
    ×