search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "three times more"

    நாடு முழுவதும் தனிநபர்களின் வருடாந்திர வருமானம் ரூ.1,25,397 ஆக உள்ள நிலையில், டெல்லியில் வாழும் மக்களின் வருமானம் மட்டும் ரூ.3,65,529 ஆக இருப்பதாக தெரியவந்துள்ளது. #Delhipercapitalincome #nationalaverage #DelhiEconomicSurvey #Manishsisodia
    புதுடெல்லி:

    நாட்டின் யூனியன் பிரதேசங்களில் ஒன்றான டெல்லி அரசின் செயல்பாடுகளைப் பற்றி எடுக்கப்பட்ட பொருளாதார கணக்கெடுப்பு பட்டியலை டெல்லி துணை முதல் மந்திரி மணிஷ் சிசோடியா இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார்.

    கடந்த 2018-19 நிதியாண்டின் நிலவரப்படி நாடு தழுவிய அளவில் எடுக்கப்பட்ட புள்ளிவிவரக் கணக்கெடுப்பின்படி அனைத்து பகுதிகளிலும் தனிநபர்களின் வருடாந்திர வருமானம் ரூ.1,25,397 ஆக உள்ள நிலையில் டெல்லியில் வாழும் மக்களின் தனிநபர் வருமானம் ரூ.3,65,529 ஆக இருப்பதாக தெரியவந்துள்ளது. மற்ற பகுதிகளைவிட இது மூன்று மடங்கு அதிகமாகும் என மணிஷ் சிசோடியா குறிப்பிட்டார்.

    டெல்லியின் உள்நாட்டு உற்பத்தி திறன் 7,79,652 கோடி ரூபாயாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், இந்த வளர்ச்சி கடந்த நிதியாண்டை காட்டிலும் 12.98 சதவீதம் அதிகமென்றும் அவர் தெரிவித்தார்.



    அரசின் நிதிநிலை அறிக்கையில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு மொத்த ஒதுக்கீட்டு தொகையில் 27.36 சதவீதம் கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 

    இதற்கு அடுத்தபடியாக சமூக பாதுகாப்பு மற்றும் நலத்திட்டங்களுக்கு 16.63 சதவீதம் நிதியும், மருத்துவம் மற்றும் ஆரோக்கியம்சார்ந்த திட்டங்களுக்கு 14.81 சதவீதம் நிதியும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி திட்டங்களுக்கு 14.12 சதவீதம் நிதியும், பொது போக்குவரத்துக்காக 11.67 சதவீதம் நிதியும், குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் பணிகளுக்காக 10.68 சதவீதம் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மணிஷ் சிசோடியா இன்று தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2016-17 நிதியாண்டில் 3.03 சதவீதமாக இருந்த அரசின் வரி வசூல் கடந்த நிதியாண்டில் 14.70 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும், அரசின் உபரி நிதி இருப்புத்தொகை படிப்படியாக உயர்ந்து 4,913 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. #Delhipercapitalincome #nationalaverage #DelhiEconomicSurvey #Manishsisodia
    ×