search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tiffin boxes"

    பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றுவழியாக சென்னை ஓட்டேரி பகுதியில் ஒரு டீக்கடை உரிமையாளர் தனது வாடிக்கையாளர்களுக்கு நூற்றுக்கணக்கான டிபன் கேரியர்களை இலவசமாக அளித்து வருகிறார். #Teastallowner #ChennaiTeastall #Tiffinboxesgift
    சென்னை:

    தமிழ்நாடு முழுவதும் பிளாஸ்டிக் உறைகள், கேரி பேக் எனப்படும் தூக்குப்பைகள் உள்ளிட்ட மக்காத பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. இதைமீறி செயல்படும் வர்த்தக நிறுவனங்களில் சோதனை நடத்தி அபராதம் விதிக்கும் அதிகாரம் அந்ததந்த பகுதியில் உள்ள அரசு பணியாளர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    இதனால், மளிகைக்கடை, ஓட்டல், டீக்கடைகள், இறைச்சி கடைகள் மற்றும் மீன் மார்கெட் உள்ளிட்ட இடங்களில் பிளாஸ்டிக் உறைகள் மற்றும் கேரி பேக் நடமாட்டம் முற்றிலுமாக தடைபட்டுள்ளது.

    முன்னர் வீட்டில் இருந்து கையை வீசியவாறு கடைகளுக்கு சென்றவர்கள் கேரி பேக் கவர்களின் பொருட்களை வாங்கிவந்து பழக்கப்பட்டு விட்டனர். சிலர் அலுவலகங்களில் இருந்து வரும் வழியில் காய்கறி, பலகாரங்கள் உள்ளிட்ட பொருட்களை கேரிபேக்குகளில் வைத்து வீட்டுக்கு கொண்டு சென்று கொண்டிருந்தனர்.

    மேலும், இட்லி மாவு, டீ,காபி போன்ற பொருட்களும் முன்னர் கவர்களில் கட்டிக்கொடுக்கப்பட்ட நிலையில் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான் இந்த தடை தமிழக மக்களை திக்குமுக்காட வைத்துள்ளது.

    இந்த குறையை போக்கும் வகையில் சென்னை ஓட்டேரி பகுதியில் ஒரு டீக்கடை உரிமையாளர் தனது வாடிக்கையாளர்களுக்கு நூற்றுக்கணக்கான டிபன் கேரியர்களை இலவசமாக அளித்து வருகிறார்.

    சென்னை ஓட்டேரி, புதிய வாழைமாநகர் பகுதியில் சுமதி டீ ஸ்டால் என்ற பெயரில் டீக்கடை நடத்திவரும் ரங்கசாமி என்பவர், தனது நிரந்தர வாடிக்கையாளர்கள் மற்றும் புதிதாக டீ, காபி வாங்கவரும் வாடிக்கையாளர்களுக்கு தூக்கிச் செல்லும் வகையில் பிடியுடன் கூடிய எவர்சில்வர் டிபன் கேரியர்களை இலவசமாக அளித்து வருகிறார்.

    இதுவரை சுமார் 300 பேருக்கு டிபன்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த டீக்கடை உரிமையாளர் ரங்கசாமி, சுமார் 70 ரூபாய் விலையுள்ள டிபன் கேரியர் என்பதால் எனக்கு ஏன் இன்னும் கொடுக்கவில்லை? என பல வாடிக்கையாளர்கள் தொடர்ந்து படை எடுத்து வருகிறார்கள்’ என்கிறார்.

    அதனால், விடுபட்டு போன மேலும் பலருக்கு அளிப்பதற்காக தற்போது ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கு அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். #Teastallowner #ChennaiTeastall #Tiffinboxesgift #plasticcoverban

    ×