என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Tindivanam accident"
- 2 பேரும் தனது மோட்டார் சைக்கிளில் எறையனூரில் உள்ள டீ கடையில் டீ குடித்துவிட்டு வீடு திரும்பினர்.
- விபத்து குறித்து திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய டிரைவரை வலை வீசி தேடி வருகின்றனர்.
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ரோஷனை பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ் ஓய்வுபெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர். இவரது மகன் புவனேஷ் (வயது 23). இவரது நண்பர் பூந்தோட்ட பகுதியைச் சேர்ந்த மகபுல் அரசு பள்ளி ஆசிரியர். இவரது மகன் சையத் முபாரக்.
புவனேஷ், முபாரக் ஆகிய இருவரும் நண்பர்கள். 2 பேரும் தனது மோட்டார் சைக்கிளில் எறையனூரில் உள்ள டீ கடையில் டீ குடித்துவிட்டு வீடு திரும்பினர். அப்போது திண்டிவனம் இ.பி அலுவலகம் அருகே வரும்போது நல்லாளம் பகுதியில் இருந்து திண்டிவனம் நோக்கி வந்த டிப்பர் லாரி இவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் புவனேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த முபாரக் திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதனையடுத்து புதுவை ஜிப்மருக்கு செல்லும் வழியிலேயே முபாரக் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய டிரைவரை வலை வீசி தேடி வருகின்றனர்.
சென்னை ஆவடியை சேர்ந்தவர் அனஸ் (வயது 20). இவர் மினி வேன் டிரைவர்.
இவரும் அதே பகுதியை சேர்ந்த அப்துல்பாஷித் (20), பீர்முகைதீன் (24) ஆகியோர் ஒரு மினி வேனில் திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொள்ள சென்றனர்.
மாநாடு முடிந்ததும் நேற்று நள்ளிரவு அவர்கள் மினி வேனில் சென்னைக்கு புறப்பட்டனர். வேனை அனஸ் ஓட்டி வந்தார்.
இன்று அதிகாலை 4 மணிக்கு அவர்கள் வந்த மினி வேன் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த சாரம் சாலையில் சென்று கொண்டிருந்தது.
அப்போது திருச்சியில் இருந்து சென்னைக்கு சென்ற ஆம்னி பஸ் முன்னால் சென்ற மினிவேன் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் மினி வேன் கவிழ்ந்தது. வேனில் இருந்த அனஸ் என்பவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
மேலும் இந்த விபத்தில் வேனில் இருந்த அப்துல்பாஷித், பீர்முகைதீன் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஒலக்கூர் போலீசார் விரைந்து சென்று விபத்தில் காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் இருந்து நேற்று இரவு அரசு பஸ் ஒன்று திருவண்ணாமலை புறப்பட்டது. அந்த பஸ்சை டிரைவர் அய்யப்பன் (வயது 36) ஓட்டி சென்றார்.
இன்று அதிகாலை 2 மணி அளவில் அந்த பஸ் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சலவாதி மெயின் ரோட்டில் வந்து கொண்டிருந்தது.
அந்த பஸ் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து புறவழி சாலைக்கு திரும்பியபோது கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுவிட்டு சென்னை திரும்பி கொண்டிருந்த வேன் மீது திடீரென்று மோதியது.
இந்த விபத்தில் பஸ் நிலைதடுமாறி ரோட்டில் கவிழ்ந்தது. உள்ளே இருந்த பயணிகள் கூச்சல்போட்டு அலறினர். அதேபோல் விபத்தில் சுற்றுலா வேனும் பலத்த சேதம் அடைந்தது. இதில் சுற்றுலாவேனில் பயணம் செய்த சென்னை புரசைவாக்கம் பகுதியை சேர்ந்த ஜிதேந்திரகுமார் (39) சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். அதுபோல் சுற்றுலா வேனில் பயணம் செய்த 13 பேரும், பஸ்சில் பயணம் செய்த 6 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால் தலைமையில் ரோசனை போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று மீட்புபணியில் ஈடுபட்டனர். விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு காயம் அடைந்த 19 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சிலர் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கும், சென்னைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
பஸ்சும், சுற்றுலா வேனும் மோதியதால் அந்த பகுதியில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. உடனே போலீசார் விபத்தில் சிக்கிய பஸ்சையும், வேனையும் அப்புறப்படுத்தினர். அதன்பின்பு போக்குவரத்து சரிசெய்யப்பட்டது.
தென்காசியில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு ஆம்னி பஸ் ஒன்று நேற்று இரவு சென்னை நோக்கி புறப்பட்டது.
அந்த பஸ் இன்று அதிகாலை 5.30 மணிக்கு விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த சாரம் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது.
அந்த பஸ்சுக்கு முன்னால் டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை முந்தி செல்வதற்காக ஆம்னி பஸ் டிரைவர் முயன்றார்.
அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பஸ் தாறுமாறாக ஓடி முன்னால் சென்ற டேங்கர் லாரி மீது மோதியது. இதைத்தொடர்ந்து டேங்கர் லாரியும், ஆம்னி பஸ்சும் சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தன.
இந்த விபத்தில் ஆம்னி பஸ்சில் பயணம் செய்த விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் பகுதியை சேர்ந்த தொழிலாளி மாரிமுத்து (வயது 43) என்பவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
மேலும் விபத்தில் பலியான மாரிமுத்துவின் தாய் லட்சுமி (65), திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள பெத்த நாடார்பட்டியை சேர்ந்த அன்பழகன் (33) உள்பட 5 பேர் காயம் அடைந்தனர்.
இது பற்றிய தகவல் அறிந்த ஒலக்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சம்பவம் நடந்த இடத்துக்கு பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு லாரி மற்றும் ஆம்னி பஸ்சை மீட்கும் பணி நடந்து வருகிறது.
விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த நீலாம் பூண்டி பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி ரேணுகா (வயது35). இவர் நேற்று இரவு அந்த பகுதியை சேர்ந்த அபி (28) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் மேல் மருவத்தூர் கோவிலுக்கு சென்றார்.
மோட்டார் சைக்கிளை அபி ஓட்டினார். திண்டிவனத்தை அடுத்த கூச்சி கொளத்தூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள சாலையின் குறுக்கே மரக்கட்டை ஒன்று கிடந்தது.
அதை கவனிக்காத அபி அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை அந்த மரக்கட்டையில் மோதினார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அபி மற்றும் ரேணுகா ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.
அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு அஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை ரேணுகா பரிதாபமாக இறந்தார்.
விபத்து குறித்து ஒலக்கூர் போலீசில் புகார் செய்யபட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை நீலாங்கரையை சேர்ந்தவர்கள் எட்வர்ட் (வயது 58), ஆரோக்கியா (44). ராயபுரத்தைச் சேர்ந்தவர்கள் பானுமதி (70), குளோரியா (30), ஆண்டனி சுரேஷ் (33), விக்னேஷ் (23). இவர்கள் 6 பேரும் சென்னை ராயபுரத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடிக்கு மினி டெம்போவில் புறப்பட்டனர்.
மினி டெம்போவை ஆண்டனிசுரேஷ் ஓட்டினார். மினி டெம்போ நேற்று இரவு 11 மணிக்கு திண்டிவனம்-சென்னை புறவழிச்சாலையில் உள்ள கருணாவூர்பேட்டை என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது.
அந்த மினி டெம்போவின் பின்னால் விழுப்புரத்துக்கு ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. அந்த லாரி திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி முன்னால் சென்று கொண்டிருந்த மினி டெம்போ மீது மோதியது.
இதில் அந்த டெம்போ நடுரோட்டில் கவிழ்ந்தது. மினி டெம்போவில் பயணம் செய்த 6 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த திண்டிவனம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த எட்வர்ட், ஆரோக்கியா, பானுமதி, குளோரியா, ஆண்டனிசுரேஷ், விக்னேஷ் ஆகிய 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனளிக்காமல் எட்வர்ட் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த பானுமதியை மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பானுமதியும் உயிரிழந்தார்.
இந்த விபத்தால் அந்த பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை வலைவீசி தேடிவருகிறார்கள்.
கடலூர் மஞ்சக்குப்பம் சுதர்சனநாயுடு தெருவை சேர்ந்தவர் காசிம். இவரது மகன் முபாரக்(வயது 24). இவரது நண்பர் சிவக்குமார்(22).
முபாரக், சிவக்குமார் ஆகியோர் ஒரு காரில் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர்.
இன்று காலை 7 மணியளவில் அந்த கார் திண்டிவனம் அடுத்த பாதிரி என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்தது. திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
பின்னர் அந்த கார் சாலையின் நடுவில் உள்ள தடுப்புக்கட்டையை தாண்டி எதிர்திசையை நோக்கி சென்றது. அப்போது அந்த வழியாக லாரி ஒன்று வந்தது. அந்த லாரி இந்த கார் மீது பயங்கரமாக மோதியது.
இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. விபத்தில் காரில் இருந்த முபாரக், சிவக்குமார் ஆகியோர் அதே இடத்தில் உடல்நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஒலக்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில் பலியான 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்