search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tirupati temple kumbabishekam"

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற ஆகஸ்ட் 12-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை ஏழுமலையான் கோவிலிலும் அதனை சார்ந்த மற்ற சன்னதிகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
    திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் தேவஸ்தான இணை செயல் அலுவலர் சீனிவாச ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 12 ஆண்டுக்கு ஒருமுறை மகா கும்பாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி 12 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற ஆகஸ்ட் 12-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை ஏழுமலையான் கோவிலிலும் அதனை சார்ந்த மற்ற சன்னதிகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    ஆனந்த நிலையம், கருடாழ்வார் சன்னதி, தாயார் சன்னதி, வரதராஜர், யோக நரசிம்மர், ஆஞ்சநேய சுவாமி சன்னதிகளிலும் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    இதையொட்டி ஆகஸ்ட் 11-ந்தேதி இரவு 9 மணி முதல் 10 மணிக்கிடையே அங்குரார்ப்பணம் நடக்கிறது. 12-ந்தேதி பாலாலயம் மற்றும் முதல் யாக சாலையில் உற்சவமூர்த்திகள் கருவறையில் இருந்து யாக சாலைக்கு கொண்டு வரப்பட உள்ளனர்.

    தொடர்ந்து 13-ந்தேதி காலை 6 மணி முதல் 12 மணி வரையும், இரவு 7 மணி முதல் 10 மணி வரை 9 மணி நேரம் யாக சாலையில் பூஜைகள் நடக்கிறது.

    14-ந்தேதி யாக சாலையில் சிறப்பு பூஜைகளும், 15-ந்தேதி அதிகாலை 5 மணி முதல் 8 மணி வரை மூலவருக்கு மகா சாந்தி திருமஞ்சனமும் நடக்கிறது.

    இரவு யாக சாலையில் மகா பூரணாஹூதி நடக்கிறது. 16-ந்தேதி காலை மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

    இதையொட்டி 12-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை குறைந்த அளவு பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட உள்ளனர்.

    அதன்படி ஒரு நாளைக்கு 30 ஆயிரம் பக்தர்கள் மட்டும் பூஜை நேரங்கள் அல்லாத நேரத்தில் சாமியை தரிசனம் செய்ய முடியும்.

    இதனால் அனைத்து ஆர்ஜித சேவைகள், வி.ஐ.பி. தரிசனம், ரூ.300-க்கான தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.

    தொடர்ந்து அக்டோபர் 3-ந்தேதி வரை 45 நாட்களுக்கு சிறப்பு மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெற உள்ளது. மேலும் 16-ந்தேதி மாலை 5.30 மணி முதல் 6.30 மணிக்கிடையே கருட வாகனத்திலும், இரவு 9.30 மணிக்கு பெரிய சே‌ஷ வாகனத்தில் சுவாமி வீதிஉலா நடைபெற உள்ளது.

    எனவே ஆஸ்கட் 11-ந்தேதி வரை 6 நாட்களுக்கு குறைந்த அளவு மட்டும் நேரம் ஒதுக்கப்படுவதால் பக்தர்கள் அதற்கேற்ப தங்கள் திருமலை பயணத்தை திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×