என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "tirupur court"
- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல் குமாஸ்தாக்கள் சேமநல உறுப்பினர் தேர்தல் திருப்பூர் மாவட்ட கோர்ட்டில் இன்று நடைபெற்றது.
- தேர்தலில் திருப்பூர் மாவட்டம் முழுவதிலும் உள்ள கோர்ட்டுகளில் பணியாற்றும் 91 பேர் வாக்கு அளிக்க உள்ளனர்.
திருப்பூர்:
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல் குமாஸ்தாக்கள் சேமநல உறுப்பினர் தேர்தல் திருப்பூர் மாவட்ட கோர்ட்டில் இன்று நடைபெற்றது. இதில் மூன்று பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர் .அதற்காக 18 பேர் போட்டிட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்ட வக்கீல் சங்க தலைவர் எம்.பழனிசாமி தேர்தல் அதிகாரியாகவும் வக்கீல் பாலகுமார் தேர்தல் பார்வையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் வழக்கறிஞர் அணி செயலாளர் பத்மநாபன், பொருளாளர் சண்முகம் ஆகியோர் ஒருங்கிணைந்து இந்த தேர்தலை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் அட்வகேட் அசோசியேஷன் தலைவர் ரகுபதி சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார். இந்த தேர்தல் இன்று மாலை வரை நடைபெறுகிறது.
இதில் வெற்றி பெறும் நபர்கள் சேம நல நிதி கமிட்டி உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.இந்த தேர்தலில் திருப்பூர் மாவட்டம் முழுவதிலும் உள்ள கோர்ட்டுகளில் பணியாற்றும் 91 பேர் வாக்கு அளிக்க உள்ளனர்.
திருப்பூர் வடக்கு தாலுகாவுக்கு உட்பட்ட சில பகுதிகளில் கோர்ட்டில் ஜாமீன் பெற போலியாக அரசு சான்றிதழ் தயாரித்து விற்பதாக புகார் எழுந்தது.
இதனை தொடர்ந்து வருவாய் துறையினர் போலி சான்றிதழ் தயாரிக்கும் கும்பலை கூண்டோடு பிடிக்க திட்டமிட்டனர். சப்-கலெக்டர் ஷ்வன் குமார் அறிவுரைப்படி தாசில்தார் ஜெயக்குமார், வருவாய் ஆய்வாளர் பரமேஸ்வரன் ஆகியோர் மோசடி கும்பல் பற்றி விசாரணை நடத்தினார்கள்.
அப்போது திருப்பூர் அவினாசி சாலை எஸ்.ஏ.பி. தியேட்டர் பின்புறம் உள்ள பாரதி நகரில் மகேஸ்வரி என்பவருக்கு சொந்தமான பியூட்டி பார்லரில் போலி சான்றிதழ் கிடைப்பதாக தகவல் கிடைத்தது.
அதன்படி வருவாய் துறையினர் ஏற்பாடு செய்த மணி என்பவர் பியூட்டி பார்லரில் இருந்த மாசாண வடிவு என்ற பெண்ணிடம் சான்றிதழ் கேட்டு பணம் கொடுத்தார்.
அதன் படி சப்-கலெக்டர் அலுவலகம் வந்த மாசாண வடிவு மணியிடம் அவர் கேட்டபடி சான்றிதழ் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார் மாசாண வடிவை கைது செய்தனர்.
மாசாண வடிவு அளித்த தகவலின் பேரில் பியூட்டி பார்லர் நடத்தி வரும் மகேஸ்வரியும் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் இருந்து பல்வேறு அரசு அலுவலகம் மற்றும் அதிகாரிகள் பெயரில் வைத்திருந்த கோபுர சீல், போலி சீல் கட்டை ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மகேஸ்வரி நடத்திய பியூட்டி பார்லரில் பேரூராட்சி செயல் அலுவலர், நில அளவை ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரி, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, அனைவருக்கும் கல்வி துறை ஆகியோரது பெயரில் போலி முத்திரைகள் கொண்ட சீல் கட்டைகள் இருந்தது.
மேலும் ஜாமீன் மனு, பட்டா, வாரிசு சான்று, பிறப்பு, இறப்பு சான்றிதழ் உள்ளிட்டவைகள் கத்தை, கத்தையாக இருந்தது. அதனையும் போலீசார் கைப்பற்றினார்கள்.
இந்த மோசடியில் வக்கீல், புரோக்கர், மற்றும் ஒருவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
வக்கீல் தன்னிடம் ஜாமீன் கேட்டு வருபவர்களிடம் மகேஸ்வரி நடத்தும் பியூட்டி பார்லருக்கு சென்றால் சான்றிதழ் வாங்கி விடலாம் என பரிந்துரை செய்து அனுப்பி உள்ளார்.
அதன் படி ஜாமீனுக்கு முயற்சி செய்பவர்கள் மகேஸ்வரியிடம் வந்து சான்றிதழ் பெற்று சென்று உள்ளனர். ஒரு சான்றிதழ் வழங்க ரூ. 8 ஆயிரம் பெற்றுள்ளனர்.
வக்கீல், புரோக்கர் உள்பட 3 பேரை பிடிக்க போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். போலி சான்றிதழ் மூலம் எத்தனை பேர் ஜாமீனில் வந்துள்ளனர் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
போலீசாரிடம் மகேஸ்வரி கூறும் போது, திருப்பூரில் தான் இந்த போலி சான்றிதழ், அரசு முத்திரை தயார் செய்ததாக கூறி உள்ளார். அவருக்கு இந்த முத்திரையை தயார் செய்து கொடுத்தது யார்? என்பது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இது குறித்து தாசில்தார் ஜெயக்குமார் கூறியதாவது-
கோர்ட்டு ஜாமீன் சான்றிதழ் தேவை என மாசாண வடிவிடம் தொடர்பு கொண்ட போது ரூ. 8 ஆயிரம் கேட்டனர். 2,500 பணம் கொடுத்தோம். அதன் படி மாசாண வடிவு போலி சான்றிதழுடன் வந்த போது கையும், களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பூரில் கோர்ட்டில் ஜாமீன் பெற தாசில்தார், வருவாய் அலுவலர், கிராம நிர்வாக அலுவலர் கையெழுத்து, அரசு முத்திரையை போலியாக பயன்படுத்துவதாக வடக்கு தாசில்தார் ஜெயக்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அரசு முத்திரையை போலியாக தயார் செய்தவர்களை பிடிக்க தாசில்தார் நடவடிக்கை மேற்கொண்டார். இதற்காக தாசில்தார் அலுவலகத்தில் பணிபுரியும் மணி என்பவரை பயன்படுத்தினார்.
அதன் படி மணி ஜாமீன் தொடர்பாக ஒரு பெண்ணை அணுகினார். அப்போது அவர் ஜாமீன் தொடர்பாக அரசு அதிகாரிகள் கையெழுத்து, அரசு முத்திரை ஆகியவற்றை நான் பார்த்து கொள்கிறேன். அதற்கு ரூ. 8 ஆயிரம் செலவாகும் என அப்பெண் கூறி உள்ளார்.
தாசில்தார் அலுவலகத்தில் வேலை பார்க்கும் மணி இதற்கு ஒப்புக்கொண்டார். முதல் கட்டமாக ரூ. 2 ஆயிரத்து 500 -ஐ அப்பெண்ணிடம் கொடுத்தார்.
இன்று மணியை தொடர்பு கொண்ட அப்பெண் ஜாமீன் மனு தயாராகி விட்டது. கோர்ட்டு அருகே வந்து வாங்கி கொள்ளுங்கள் என கூறினார். உடனே மணியும் புறப்பட்டு சென்றார்.
அப்போது அப்பெண் மனுவை கொடுத்தார். அவரை மணி மடக்கி பிடித்தார். பின்னர் அவரை தாசில்தார் அலுவலகத்திற்கு அழைத்து வந்தார்.
அவரிடம் சப்- கலெக்டர் ஷ்வரன் குமார், தாசில்தார் ஜெயக்குமார், வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சை ஆகியோர் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது அப்பெண்ணின் பெயர் மாசான வடிவு (30). திருப்பூர் திருமுருகன் பூண்டி பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.
அவரிடம் இருந்து அரசு அதிகாரிகள் கையெழுத்திட்டது போன்ற போலி சான்று, போலி அரசு முத்திரை உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். அவரிடம் விசாரித்த போது கடந்த ஒரு வருடமாக போலி சான்று தயாரித்து வருவதாக தெரிவித்தார்.
தனக்கு உதவியாக மேலும் 5 பேர் இருந்ததாகவும் கூறினார்.
மாசான வடிவை போலீசார் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழக சட்டப்பேரவை தலைவர் தனபாலின், சட்ட மன்ற அலுவலகம் அவினாசியில் உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு அவினாசியை சேர்ந்த தி.மு.க.வினரான ஹரிதாஸ், மணிகண்டன், சிவபிரகாஷ், திராவிட வசந்தன் ஆகியோர், இந்த சட்டமன்ற அலுவலகத்தில் கல்வீசி தாக்குதல் நடத்தினார்கள். அப்போது அவினாசி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய கமலக்கண்ணன், பொது சொத்துக்கு சேதம் மற்றும் இழப்பு ஏற்படுத்துதல் தடுப்பு சட்டத்தின் கீழ் மேற்கண்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினார்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் கடந்த 3-ந் தேதி விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜர் ஆகவில்லை. இதைத்தொடர்ந்து நேற்று இந்த வழக்கு கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. நேற்று நடந்த வழக்கு விசாரணைக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் ஆஜராகவில்லை.
இதனால் வழக்கில் ஆஜராகாமல் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் மீது பிடிவாரண்டு பிறப்பித்து முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார். தற்போது கமலக்கண்ணன், நீலகிரி மாவட்டம் ஊட்டி நகர மத்திய போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்