search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tj gnanavel"

    • தற்போது படத்தின் சூட்டிங் மும்பையில் நடைப்பெற்று வருகிறது. நேற்று அமிதாப் பச்சனுடன் ரஜினிகாந்த் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகியது.
    • 33 வருடங்களுக்கு பிறகு அமிதாப் பச்சன் ரஜினிகாந்துடன் இணைந்து படத்தில் நடிகவுள்ளார்.

    நடிகர் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், மஞ்சுவாரியர், ராணா டகுபதி, ரித்திகா சிங், பகத் ஃபாசில் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வரும் வேட்டையன் படத்தின் சூட்டிங் விரைவில் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்படத்தை டிஜே ஞானவேல் இயக்கியுள்ளார். தற்போது படத்தின் சூட்டிங் மும்பையில் நடைப்பெற்று வருகிறது. நேற்று அமிதாப் பச்சனுடன் ரஜினிகாந்த் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகியது.

    33 வருடங்களுக்கு பிறகு அமிதாப் பச்சன் ரஜினிகாந்துடன் இணைந்து படத்தில் நடிகவுள்ளார். அமிதாப் பச்சன் நடிக்கும் முதல் தமிழ் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    இப்படத்தை தொடர்ந்து டிஜே ஞானவேல் அடுத்ததாக தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நானி நடிப்பில் படம் இயக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

     

    முன்னதாக வேட்டையன் படத்தில் வரும் ராணா கதாப்பாத்திரத்திற்கு நானியை அணுகியுள்ளார் கால்ஷீட் பிரச்சனைகளால் அவரால் வேட்டையன் படத்தில்  நடிக்க முடியவில்லை. அப்போது அவர் நானிக்கு ஒரு கதையை கூறியதாகவும் அது அவரை மிகப் பெரிய அளவில் கவர்ந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 'ஜெய்பீம்' திரைப்படத்திற்கு தேசிய விருது அறிவிக்காதது குறித்து பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
    • 'தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படம் முரண்பாடான படம் என்று திருமாவளவன் கூறினார்.

    69-வது தேசிய விருது பெரும் படங்களின் பட்டியல் சமீபத்தில் வெளியானது. இதில், 'ஜெய்பீம்' திரைப்படத்திற்கு விருது அறிவிக்காதது குறித்து பலர் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், ஆட்சியாளர்கள் கலைத்துறையை எப்படி கையாளப்பார்க்கிறார்கள் என்பது 'தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படத்திற்கு விருது வழங்கியதில் இருந்து நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது என்று விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.


    இது குறித்து அவர் பேசியதாவது:- 'ஜெய்பீம்' திரைப்படம் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்திய படம். அனைவரின் பாராட்டையும் பெற்ற படம் அந்த படத்திற்கு விருது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருந்தது, கிடைக்காததால் விமர்சனம் வருகிறது. 'தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படம் முரண்பாடான படம். ஆட்சியாளர்கள் என்ன சிந்தனையோட்டத்தில் இருக்கிறார்கள் கலைத்துறையை எப்படி கையாளப்பார்க்கிறார்கள் என்பது 'தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படத்திற்கு விருது வழங்கியதில் இருந்து நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

    பொதுவாக ஆட்சியில் இருப்பவர்கள் அவர்களின் கருத்து சார்ந்த எழுத்திற்கோ, படைப்பிற்கோ விருது வழங்குவது வாடிக்கையான ஒன்று. இந்த அரசு திரைப்படத் துறையையும் தங்களுக்கான ஒரு கருவியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வெகுவாக விரும்புகிறது. அதில் அதிகமாக தலையீடு செய்கிறது. அவர்கள் விரும்புகிற வெறுப்பு அரசியலை விதைப்பதற்கு திரைத்துறையை பயன்படுத்திக் கொள்கிறது என்று கூறினார்.

    • நடிகர் ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • ரஜினியின் 170-வது படத்தை ஜெய்பீம் பட இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்குகிறார்.

    நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதில் கன்னட நடிகர் சிவராஜ் குமார், நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் யோகிபாபு, வசந்த் ரவி மற்றும் மலையாள நடிகர் விநாயகன் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ரஜினியின் 169-வது படமான ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    ஜெய்பீம்
    ஜெய்பீம்

    ரஜினியின் 170-வது படத்தின் இயக்குனர் யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதன்படி, 'ஜெய் பீம்' பட இயக்குனர் டி.ஜே. ஞானவேல் இப்படத்தை இயக்கவுள்ளார். லைகா புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும், ரஜினியின் 170-வது திரைப்படம் 2024-ஆம் ஆண்டு வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.


    டிஜே ஞானவேல்

    டிஜே ஞானவேல்

    இந்நிலையில் இந்த அறிவிப்பு குறித்து மகிழ்ச்சியோடு இயக்குனர் டி.ஜே.ஞானவேல் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மகிழ்வான தருணம்.. புதிய பயணம் இனிதே ஆரம்பம்.. என்று பதிவிட்டுள்ளார். இவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    • நடிகர் ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இதைத்தொடர்ந்து ரஜினியின் 170-வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் போஸ்டரையும் படத்தில் இணைந்துள்ள பிரலங்கள் பற்றியும் படக்குழு அறிவித்திருந்தது. ஜெயிலர் படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் யோகிபாபு, வசந்த் ரவி மற்றும் மலையாள நடிகர் விநாயகன் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ரஜினியின் 169-வது படமான ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    இந்நிலையில் ரஜினியின் 170-வது படத்தின் இயக்குனர் யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'ஜெய் பீம்' பட இயக்குனர் டி.ஜே. ஞானவேல் இப்படத்தை இயக்கவுள்ளார். லைகா புரொசக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும், ரஜினியின் 170-வது திரைப்படம் 2024-ஆம் ஆண்டு வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.


    ×