search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN CEO"

    பணப்பட்டுவாடாவை தவிர்க்க புதிய முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.
    சென்னை:

    சென்னை தலைமை செயலகத்தில்  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பயிற்சிக்கு மேல் பயிற்சி அளித்தால் எந்தத் தவறும் இல்லாமல் தேர்தலை நடத்திவிட முடியும் என்பது தான், நான் கண்ட உண்மை.  பணப்பட்டுவாடாவை தடுப்பது ஒரு சவால் தான். சமுதாயத்தை ஒருவர் மட்டுமே திருத்தி விட முடியாது. சமுதாயத்தில் இருந்து எழும் பிரச்சனைகளுக்கு அந்த சமுதாயமே தீர்வுகாண வேண்டும்.

    தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலை சிறப்பாக நடத்தியதற்கு, தேர்தல் பணியாற்றிய அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும் அளித்த பயிற்சி ஒரு காரணமாக இருந்தது.


    பணப்பட்டுவாடாவை தவிர்க்க புதிய முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். பல்கலைக்கழகங்கள், பத்திரிகைகள் போன்றவை விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக 4690 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், திமுகவினர் மீது அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.#TNElections2019 #PollCodeViolation
    சென்னை:

    தமிழகத்தில் 38 பாராளுமன்றத் தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-



    தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக 4690 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேற்கு மண்டலத்தில் 941, மத்திய மண்டலத்தில் 712, வடக்கு மண்டலத்தில் 376 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கட்சிகள் அடிப்படையில் திமுக தரப்பினர் மீது 1695 வழக்குகளும், அதிமுக தரப்பினர் மீது 1453 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    தேர்தல் பறக்கும் படையினரால் ரூ.213.18 கோடி ரொக்கம், 2403 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்து. மேலும், ரூ.3.51 கோடி மதிப்பிலான மதுபானங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.  #TNElections2019 #PollCodeViolation

    இவ்வாறு அவர் கூறினார். #TNElections2019 #PollCodeViolation

    அரியலூர் மாவட்டத்தில் மோதல் நடந்த பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவுக்கு அவசியம் இருக்காது என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார். #TNElections2019 #Ponparappi
    சென்னை:

    தர்மபுரியில் தேர்தலின்போது வாக்குசாவடிகளில் மோசடி நடைபெற்றுள்ளதாகவும், அதனால் அங்கு மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் மனு அளித்துள்ளது. இதேபோல் அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் மோதல் ஏற்பட்டதால் அங்கும் மறுவாக்குப்பதிவு நடத்தவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து வருகிறது.

    இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தேர்தலின்போது வாக்குச்சாவடிகளில் மோசடி நடந்ததாக வந்த புகார் வந்துள்ளது. அதன் அடிப்படையில் கடலூரில் 1, திருவள்ளூரில் 1, தருமபுரியில் 8 வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் நடத்தவேண்டுமா? என்பது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் பொது பார்வையாளரிடம் அறிக்கை கேட்டுள்ளோம். அந்த அறிக்கை இன்று மாலை டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

    அதன் அடிப்படையில், இந்த 10 வாக்குச்சாவடிகளிலும் மறுவாக்குப்பதிவு நடத்தவேண்டுமா? இல்லையா? என்பதை தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்.



    அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் வாக்குப்பதிவு நடந்த இடத்தில் பிரச்சினை இல்லை. எனவே, பொன்பரப்பில் மறுவாக்குப்பதிவுக்கு அவசியம் இருக்காது.

    இவ்வாறு அவர் கூறினார். #TNElections2019 #Ponparappi
    தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படையினால் இதுவரை 3.39 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார். #ParliamentElection #TNCEO
    சென்னை:

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ, தலைமை செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பாராளுமன்றத் தேர்தல் பணிகள் தொடர்பாக அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தேர்தல் ஆணையத்திற்கு பல்வேறு புகார்கள் வந்துள்ளன. தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக பொதுமக்கள் 94454 67707 என்ற வாட்ஸ்அப் எண்ணில் புகார் அனுப்பலாம். மேலும், 1800-4256-669 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு புகாரை தெரிவிக்கலாம்.

    சந்தேகப்படும்படியான பணப்புழக்கம் குறித்து உரிய நடவடிக்கை  எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணம் இல்லாமல் பணம் கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும். அதேசமயம், ரூ.10 லட்சத்துக்கு மேல் உரிய ஆவணத்துடன் கொண்டு சென்றால், வருமான வரித்துறையிடம் தகவல் தெரிவிக்கப்படும்.

    தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படைஇதுவரை நடத்திய சோதனையில், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.3.39 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  வணிகர்கள் பாதிக்கப்படாத வகையில் சோதனை நடைமுறைகள் இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ParliamentElection #TNCEO
    ×