search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tn chennai coasts"

    இந்தோனேசியாவை இன்று தாக்கிய சுனாமியால் சென்னை மற்றும் தமிழ்நாட்டின் இதர கடலோரப் பகுதிகளுக்கு ஆபத்தில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. #Indonesiaarthquake #TsunamiAttack
    சென்னை:

    இந்தோனேசியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள சுலசேசி தீவின் மத்தியில் உள்ள டோங்காலா நகரில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து இன்று மாலை மத்திய பகுதியில் உள்ள பாலு நகரில் 7.5 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலோரப் பகுதிகளில் சுனாமி பேரலைகள் தாக்கியது.

    சுனாமி தாக்கியதில் கடலோர பகுதிகளில் இருந்த கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகவும், ஒருவர் பலியாகி, பத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 

    இந்நிலையில், இந்தோனேசியாவை இன்று  தாக்கிய சுனாமியால் சென்னை மற்றும் தமிழ்நாட்டின் இதர கடலோரப் பகுதிகளுக்கு ஆபத்தில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

    கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட 9.1 ரிக்டர்  அளவிலான நிலநடுக்கத்தில் 2 லட்சத்து 30 ஆயிரம் மக்கள் உயிரிழந்ததும், அதன் எதிரொலியாக  தமிழ்நாட்டில் சுமார் 9 ஆயிரம் பேர் பலியானதும் நினைவிருக்கலாம். #Indonesiaarthquake #TsunamiAttack
    ×