search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN Ministers"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்தல் முடிவுக்கு முன்னதாகவே 2 அமைச்சர்கள் பதவியும் பறிக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகி வருகிறது.
    • அமைச்சர்களை சேர்ப்பதும், நீக்குவதும் இலாக்காக்களை மாற்றி அமைப்பதும் முதலமைச்சர் முடிவு என்பதால் அவர் என்ன நினைக்கிறார் என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்து விடும்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் அடுத்த மாதம் 4-ந்தேதி வெளியாகி புதிய அரசு அமையும் போது தமிழ்நாட்டில் அமைச்சரவை மாற்றத்தை கொண்டு வர முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

    தேர்தல் தொடங்குவதற்கு முன்பே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசும்போது தேர்தலில் வாக்குகள் குறைந்தால் சம்பந்தப்பட்ட பொறுப்பு அமைச்சர்களும், மாவட்டச் செயலாளர்களும் தான் பதில் சொல்ல வேண்டும். யாராக இருந்தாலும் நான் நடவடிக்கை எடுப்பேன் என்று கூறி இருந்தார்.

    இப்போது தி.முக. கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் என்று உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்திருந்தாலும் தேர்தல் வேலைகளில் சரிவர செயல்படாதவர்கள் பற்றியும் புகார்கள் சென்றுள்ளன.

    அந்த வகையில் 10 அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் மீது புகார்கள் சொல்லப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

    இதனால் அமைச்சர்களும், மாவட்டச் செயலாளர்களும் ஒருவித கலக்கத்துடனேயே உள்ளனர். யார் யாருக்கு இலாகா மாறுமோ என்ற அச்சத்தில் சந்தோஷமின்றி மன இறுக்கத்திலேயே உள்ளனர்.

    இந்த நிலையில் தேர்தல் முடிவுக்கு முன்னதாகவே 2 அமைச்சர்கள் பதவியும் பறிக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகி வருகிறது.


    இது பற்றி தி.மு.க. வட்டாரத்தில் பேசும் பொருளாக கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் உடல்நலம் காரணமாகவும் செயல்பாடுகளாலும் அமைச்சரவையில் இருந்து மாற்றப்படலாம் என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    அதுமட்டுமின்றி தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வசம் உள்ள மணல் குவாரி, சுரங்கங்கள் மற்றும் கனிம வளத்துறையை வேறு ஒரு அமைச்சருக்கு பிரித்துக் கொடுக்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    மணல் குவாரி மற்றும் கனிமவளத்துறையில் நடந்த புகார்கள் காரணமாக அமலாக்கத்துறை விசாரணை தீவிரமாகி வரும் நிலையில் இந்த மாற்றங்களை செய்ய முதலமைச்சர் முடிவு செய்துள்ளதாவும் தி.மு.க. வட்டாரத்தில் பேசப்படுகிறது.

    ஆனால் அமைச்சர் துரைமுருகன் கனிம வளத்துறையை விட்டுக் கொடுக்க மாட்டார் என்றே தெரிகிறது. அதற்கு பதிலாக நீர்வளத்துறையை வேண்டுமானால் அவர் விட்டுக் கொடுப்பார் என்ற தகவலும் வெளிவந்த வண்ணம் உள்ளது.

    இதற்கு முன்பு நிதித்துறையை கவனித்து வந்த தற்போதைய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அவருக்கு மத்திய நிதியமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.


    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையை மாற்றி அமைக்கும் போது எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க. எம்.எல்.ஏ.வான சேலத்தை சேர்ந்த பனமரத்துப்பட்டி ராஜேந்திரனை அமைச்சரவையில் சேர்க்க வாய்ப்புளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

    அமைச்சர்களை சேர்ப்பதும், நீக்குவதும் இலாக்காக்களை மாற்றி அமைப்பதும் முதலமைச்சர் முடிவு என்பதால் அவர் என்ன நினைக்கிறார் என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்து விடும்.

    • அதியமானுக்காகக் காஞ்சியிலிருந்து ஆட்சிப் புரிந்த தொண்டைமானிடம் தூது சென்று நிகழவிருந்த போரை நிறுத்திய பெருமை மிக்கவர் அவவையார்.
    • உலக வரலாற்றில் இரண்டு வேந்தர்களுக்கிடையில் தூது சென்ற பெரு மடந்தையராகப் பெருமை கொண்டவர் அவ்வையார் ஆவார்.

    சென்னை:

    ஈராயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மக்கள் நன்கு அறிந்திருக்கும் புலவர் பெருமாட்டியருள் அவ்வையாரின் அருமைத் திருப்பெயர் என்றும் அழியாமல் நிலைத்திருக்கும் திருப்பெயரும் தவப்பெயருமாகும்.

    'அகர முதல எழுத்தெல்லாம்' என்பது போல ஒளவை முதல அறிவெல்லாம் என்று அறிவுக்கே பரியாய நாமமாக அவ்வையார் ஆண், பெண், இளைஞர், முதியவர் என எல்லோராலும் வழிபாட்டுணர்ச்சியோடு வணங்கப்படுகிறார்.

    அதியமானுக்காகக் காஞ்சியிலிருந்து ஆட்சிப் புரிந்த தொண்டைமானிடம் தூது சென்று நிகழவிருந்த போரை நிறுத்திய பெருமை மிக்கவர் அவவையார். உலக வரலாற்றில் இரண்டு வேந்தர்களுக்கிடையில் தூது சென்ற பெரு மடந்தையராகப் பெருமை கொண்டவர் அவ்வையார் ஆவார்.

    சேரமான் மாரி வண்கோவும், சோழன் ராச சூயம் வேட்ட பெரு நற்கிள்ளியும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும் ஒருங்கிருப்பக் கண்டு உவந்து' என்றும் தமிழ் மூவேந்தர்கள் இவ்வாறே இருப்பீர்களாக' என அறிவுறுத்திய புலமைச் செல்வியார் ஆவார். நெடுமான் அஞ்சி போர்க் களத்தில் வேல் பாய்ந்து இறந்தபோது, அவ்வையார் வருந்திப் பாடிய கையறு நிலைப்பாட்டு மிகவும் உருக்கம் வாய்ந்தது.

    சங்கப் புலமைப் பெரும் செவ்வியராகிய இப்பெருமாட்டியார் பாடியனவாக உள்ள ஐம்பத்தொன்பது பாடல்களுள் அகப்பொருள் பற்றியன இருபத்தாறாகும். எஞ்சிய முப்பத்து மூன்று பாடல்களுள் புறப்பொருளுக்குரியன வாய்ப் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளன.

    மாந்தர் குலத்திற்குப் பெருமை சேர்த்த அவ்வை பெருமாட்டியாரைப் போற்றும் வகையில் உலக மகளிர் நாளான 08.03.2024 வெள்ளிக்கிழமையன்று காலை 10 மணிக்கு தமிழ்நாடு அரசின் சார்பில், தமிழ் வளர்ச்சித் துறையால், சென்னை காமராசர் சாலையில் அமைந்துள்ள அவ்வையாரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்தலும், தமிழ்ப் பெருமாட்டியின் திருவுருவப்படத்திற்கு மலர் வணக்க நிகழ்வும் நடைபெற உள்ளன. அமைச்சர் பெருமக்கள், மேயர், துணை மேயர், அரசு உயர் அலுவலர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ் வளர்ச்சித் துறை அலுவலர்கள், பொதுமக்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

    • அதிகனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
    • மழை ஓய்ந்த நிலையில் மீட்புப் பணி மற்றும் நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த அதிகனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நேற்று முதல் மழை ஓய்ந்த நிலையில் மீட்புப் பணி மற்றும் நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது.

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு பணிகளை மேற்கொள்ள ஏற்கனவே உதயநிதி ஸ்டாலின் உட்பட 9 அமைச்சர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், இன்று கூடுதல் அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    ஸ்ரீவைகுண்டம் - அமைச்சர் எ.வ. வேலு,

    காயல்பட்டினம் - அமைச்சர் பி.மூர்த்தி

    தூத்துக்குடி மாநகராட்சி - அமைச்சர்கள் கே.என்.நேரு, ராஜகண்ணப்பன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய அரசையும், கவர்னரையும் கண்டித்து 20-ந்தேதி தி.மு.க. உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்து உள்ளது.
    • தி.மு.க. இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவ அணியினர் பங்கேற்கும் உண்ணாவிரத போராட்டம் ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் நடைபெற உள்ளது.

    சென்னை:

    நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் முயற்சிகளை தி.மு.க. அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் அதற்கு மத்திய அரசு இதுவரை சம்மதிக்கவில்லை.

    இதற்கான கோப்பு ஜனாதிபதியிடம் உள்ளது. தமிழக அரசு பலமுறை வற்புறுத்தியும் மத்திய அரசு செவி சாய்க்காமல் உள்ளதாக தி.மு.க. குற்றம் சாட்டி வருகிறது.

    அதுமட்டுமின்றி சமீபத்தில் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி நீட் மசோதாவில் கையெழுத்து போடமாட்டேன் என்று கூறினார்.

    நீட் தேர்வுக்கு தடை கோருவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட மாட்டேன்.

    இந்த விவகாரம் பொதுப்பட்டியலில் இருப்பதால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை பொறுத்தவரை பயிற்சி மையங்களுக்கு சென்றுதான் அதில் வெற்றி பெற வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை என்றும் கவர்னர் ஆர்.என்.ரவி பரபரப்பாக பேசி இருந்தார்.

    இந்த நிலையில் மத்திய அரசையும், கவர்னரையும் கண்டித்து 20-ந்தேதி தி.மு.க. உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்து உள்ளது.

    தி.மு.க. இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவ அணியினர் பங்கேற்கும் இந்த உண்ணாவிரத போராட்டம் ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் நடைபெற உள்ளது.

    சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார். அவருடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு மற்றும் எம்.எல்.ஏ.க்கள், மாவட்டக் கழக செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.

    இதேபோல் அந்தந்த மாவட்டங்களின் தலைநகரங்களில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க வேண்டும் என்று தி.மு.க. தலைமை முடிவெடுத்து உள்ளது.

    இந்த உண்ணாவிரத போராட்டத்தில் அனைத்து தரப்பினரும் திரளாக பங்கேற்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்து உள்ளனர்.

    • அரசின் முன்னெடுப்பின் மூலம் தேசிய அளவில் தமிழகம் சிறந்து விளங்குகிறது.
    • அதிகாரிகள் அதிக கவனம் செலுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து ஆலோசித்தோம்.

    சென்னை:

    சென்னை தலைமைச் செயலகத்தில் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது.

    'முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள்' என்ற பெயரில் ஏற்கனவே இதுபோன்ற கூட்டம் 3 முறை நடைபெற்றுள்ளது.

    இந்நிலையில் முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

    பல்வேறு துறை சார்ந்த திட்டங்களின் சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ள திட்டங்களை முத்திரை திட்டங்கள் என வகைப்படுத்தி விரைவில் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    2ம் கட்டமாக மேலும் சில திட்டங்களை இணைத்து இன்று ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. பல நல்ல திட்டங்களை அறிவித்து அவற்றின் செயலாக்கத்தை அரசு கண்காணித்து வருகிறது.

    அரசின் முன்னெடுப்பின் மூலம் தேசிய அளவில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. திட்டத்தின் வெற்றிக்கு பல துறைகளின் ஒருங்கிணைப்பு மிகவும் அவசியம்.

    சில திட்டங்களில் நிலவும் தொய்வு குறித்தும் ஆய்வுக்கூட்டத்தில் விவாதித்தோம். அதிகாரிகள் அதிக கவனம் செலுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து ஆலோசித்தோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கூட்டத்தில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலைப்பாடுகள் பற்றி விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
    • தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் விரிவாக பேசப்பட்டது.

    சென்னை:

    சென்னை தலைமைச் செயலகத்தில் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது.

    'முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள்' என்ற பெயரில் ஏற்கனவே இது போன்ற கூட்டம் 3 முறை நடைபெற்றுள்ளது.

    இந்த நிலையில் மீண்டும் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலைப்பாடுகள் பற்றி விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. அதே போல் தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் விரிவாக பேசப்பட்டது.

    இந்த கூட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மூலம் எவ்வளவு பேர் பயன் அடைந்துள்ளனர் என்பதை பட்டியலிட்டார். இன்னும் எவ்வளவு பேருக்கு திட்டம் மூலம் பலன் கிடைக்கும் என்பது பற்றியும் விளக்கி கூறினார்.

    இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அனிதா ராதாகிருஷ்ணன், முத்துசாமி, கா.ராமச்சந்திரன், மு.பெ.சாமிநாதன் மெய்ய நாதன், மதிவேந்தன் பங்கேற்றனர்.

    இவர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு, அரசுத்துறை முதன்மைச் செயலாளர்கள், துறை வாரியான உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை தி.மு.க. எதிர் கொள்ளும்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடமனதோடு அனைத்தையும் எதிர்கொள்வார்.

    சென்னை:

    அமைச்சர் செந்தில் பாலாஜியை ஆஸ்பத்திரிக்கு வந்து பார்த்த அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-

    அமைச்சர் செந்தில் பாலாஜி ஐ.சி.யு. வார்டில் படுத்திருக்கிறார். அவரை பார்த்தேன். அனைத்து மருத்துவர்களும் அங்கிருக்கிறார்கள். சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் உடன் இருக்கிறார்.

    செந்தில் பாலாஜியால் பேச முடியவில்லை. நெஞ்சு வலியால் சிரமமாக உள்ளார். அவர் அமலாக்கத்துறையால் தாக்கப்பட்டாரா? என்பது எனக்கு தெரியவில்லை. அவரை பார்த்தேன். அவரால் பேச முடியவில்லை. அதனால் தட்டிக் கொடுத்துவிட்டு வந்து விட்டேன்.

    கே:-அவரை பார்க்க உள்ளே அனுமதிக்கிறார்களா?

    ப:-நான் அவரை பார்க்க 1 மணிநேரம் காத்திருந்தேன். முதலில் தூங்கிக் கொண்டிருக்கிறார் என்றனர். அதன் பிறகு பார்க்க அனுமதித்தனர்.

    நான் அனுமதி வாங்கி தான் செந்தில்பாலாஜியை பார்த்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமைச்சர் பி.கே.சேகர் பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை தி.மு.க. எதிர் கொள்ளும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடமனதோடு அனைத்தையும் எதிர்கொள்வார்.

    செந்தில் பாலாஜி தீவிர சிகிச்சைப் பிரிவு வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார்.

    நாங்கள் 2-3 முறை அவரை அழைத்துப் பார்த்தோம். ஆனால் அவர் கண் விழித்து பார்க்க முடியாத நிலையில் இருக்கிறார்.

    கே:- அவரது வீட்டில் என்ன நடந்தது?

    ப:-அது எனக்கு தெரியாது. நாங்கள் மருத்துவமனைக்கு வந்து பார்த்த நிலையை தான் கூற இயலும்.

    அவர் பேச ஆரம்பித்தால் தான் என்ன நடந்தது என்பதை சொல்ல முடியும். அவர் சுய நினைவில் இல்லை. காது பக்கம் வீக்கம் உள்ளது. கண்டிப்பாக துன்புறுத்தப்பட்டிருப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமைச்சர் பொன்முடி நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செந்தில் பாலாஜி விரைவில் குணம் அடைவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

    முதலமைச்சர் நேற்று கூறியது போல ஒன்றிய அரசு பா.ஜ.க. ஆட்சி இல்லாத மாநிலங்களில் உள்ள அமைச்சர்களையும், கட்சிகாரர்களையும் தொடர்ந்து பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டு உள்ளது.

    டெல்லி, கர்நாடகா, மேற்கு வங்காளம் மாநிலங்களில் ஒன்றிய அரசு பழிவாங்கும் நடவடிக்கையை தொடங்கியது போல் தமிழகத்திலும் அரங்கேற்றி உள்ளது. இதற்கெல்லாம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சுபவர் அல்ல.

    எந்த பழிவாங்கும் நடவடிக்கைகளையும் எதிர் கொள்ளக்கூடிய ஆற்றலும் திறமையும் தி.மு.க.வுக்கு நீண்டகாலமாக இருந்திருக்கிறது.

    மிசா காலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையே பழிவாங்கியவர்கள் உண்டு. எதுவாக இருந்தாலும் அவைகளை எதிர்கொள்ளும் ஆற்றல் உண்டு.

    ஒன்றிய அரசு அரசியலுக்காக செய்கிற இந்த நிகழ்வுகளை தமிழக மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமைச்சர் ரகுபதி கூறிய தாவது:-

    நாம் ஜனநாயக நாட்டில் இருக்கிறோமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சாதாரண ஒரு மனிதனுக்கு கூட கேள்வி கேட்கிற உரிமையை அரசியல் அமைப்பு சட்டம் தந்துள்ளது.

    அப்படி இருக்கும் போது எல்லா விஷயத்திலும் மத்திய அரசு அத்துமீறி அதிகாரத்தோடு செயல்படுகிறது. அந்த அதிகாரம் பறிக்கப்பட கூடியதுதான். அதை மக்கள் பறிப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன், அன்பில் மகேஷ் பொய்யா மொழி உள்ளிட்ட அமைச்சர்களும் ஆஸ்பத்திரிக்கு வந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை பார்த்துவிட்டு சென்றனர்.

    • உளவுத்துறையும் உன்னிப்பாக கவனித்து நடந்த விஷயங்களை அறிக்கையாக தயார் செய்து முதலமைச்சர் வந்ததும் சமர்ப்பித்து இருக்கிறது.
    • 4 அமைச்சர்களை தவிர யாரும் கோட்டை பக்கம் வந்து பணிகளை கவனிக்கவில்லை.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 9 நாட்கள் வெளிநாடுகளுக்கு சென்று வந்தது எல்லோருக்கும் தெரிந்ததே.

    வெளிநாட்டுக்கு சென்றாலும் இங்கும் ஒரு 'கண்' வைக்க வேண்டுமல்லவா? அதனால் வெளிநாடு புறப்படுவதற்கு முன்பு உளவுத்துறைக்கு ஒரு ரகசிய உத்தரவு போட்டுள்ளார். அதாவது தான் இல்லாத நாட்களில் அமைச்சர்களின் செயல்பாட்டை கவனித்து கொள்ளுங்கள் என்பது தான் அந்த உத்தரவு.

    உளவுத்துறையும் உன்னிப்பாக கவனித்து நடந்த விஷயங்களை அறிக்கையாக தயார் செய்து முதலமைச்சர் வந்ததும் சமர்ப்பித்து இருக்கிறது.

    அதில் 4 அமைச்சர்களை தவிர யாரும் கோட்டை பக்கம் வந்து பணிகளை கவனிக்கவில்லை. சிலர் கோடையை கொண்டாட கோட்டை நினைப்பை மறந்து கோடை வாசஸ்தலங்களுக்கு சென்றிருந்தார்களாம். அதை பார்த்ததும் துணிந்து இப்படியெல்லாம் நடந்து கொண்டார்களா என்று முதலமைச்சரின் முகம் மாறியதாம்.

    வள்ளுவர் கோட்டம் அருகே 31-ந் தேதி காலை 11 மணிக்கு தொடங்கும் போராட்டத்துக்கு அண்ணாமலை தலைமை தாங்குகிறார்.
    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தி.மு.க.வை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் 2 அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் இருப்பதாகவும் அதற்கான ஆதாரங்கள் தனக்கு கிடைத்து இருப்பதாகவும் கூறி உள்ளார். இது தொடர்பாக 2 ஊழல்கள் பற்றிய விபரங்களை ஆதாரங்களுடன் அடுத்த வாரம் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார்.

    அண்ணாமலையின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எந்த துறை? எந்த அமைச்சர்கள்? என்ற விபரத்தை அவர் வெளியிடவில்லை.

    இதற்கிடையில் வருகிற 31-ந்தேதி சென்னையில் கோட்டை நோக்கி நடை பயணம் செல்ல இருப்பதாக அறிவித்துள்ளனர்.

    பட்ஜெட்டில் மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரியில் தமிழகத்துக்கு உரிய பங்கை தரவில்லை என்று குறிப்பிட்டனர். ஆனால் தவறான தகவலை தெரிவித்ததாக கூறி இந்த கோட்டை நோக்கிய போராட்டத்தை பா.ஜனதா நடத்துகிறது.

    வள்ளுவர் கோட்டம் அருகே 31-ந் தேதி காலை 11 மணிக்கு தொடங்கும் இந்த போராட்டத்துக்கு அண்ணாமலை தலைமை தாங்குகிறார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இருந்து சுமார் 20 ஆயிரம் பேர் இந்த போராட்டத்தில் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

    வரும் 2024-ம் ஆண்டு ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் இருந்து பாஜக வேட்பாளர் ஒருவர் கட்டாயம் பாராளுமன்றம் செல்வார் என மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
    திருப்பூர்:

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க. ஆட்சியின் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் தாராபுரத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    தாராபுரத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தற்போது மத்திய மந்திரியாக உள்ள முருகன் கடுமையாக உழைத்து சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். ஆனாலும் அவருக்கு பாரதிய ஜனதா கட்சி மத்திய அமைச்சரவையில் 3 இலாகாக்களை கொடுத்து அழகு பார்த்துள்ளது. இதனால் தாராபுரம் மக்களுக்கு முதலில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பா.ஜ.க. தமிழகத்தில் மாற்றத்திற்கான முன்னேற்றத்தைத் தேடிக்கொண்டிருக்கிறது. வரும் 2024-ம் ஆண்டு ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் இருந்து பா.ஜ.க. வேட்பாளர் ஒருவர் கட்டாயம் பாராளுமன்றம் செல்வார்.

    பா.ஜ.க. ஆட்சிக்கு வந்து 8 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் கூட எந்த ஒரு மந்திரி மீதும் சிறிதளவு கூட குறைசொல்ல முடியாது. அந்த அளவுக்கு நேர்மையாக நடந்து கொள்கின்றனர். ஆனால் தி.மு.க அமைச்சர்கள் சிலர் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ளனர். 

    தமிழகத்திலுள்ள ஒவ்வொரு அமைச்சரின் ஊழல் குறித்த பட்டியலை வரும் 5-ம் தேதி மதுரையில் வெளியிட உள்ளோம். வரும் 2026-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் சட்டமன்றத்திற்கு பா.ஜ.க. சார்பில் 150 எம்.எல்.ஏ.க்கள் கட்டாயம் செல்வார்கள் என தெரிவித்தார்.
    • மரக்காணம் அடுத்த எக்கியார்குப்பத்திற்கு இன்று அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் வந்தனர்.
    • விழுப்புரம் கலெக்டர் பழனி தலைமையில் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு நேராக சென்றனர். அங்கு அவர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு, ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர்.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து இன்று அதிகாலை வரையில் 13 பேர் பலியாகினர். 39-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    பலியான குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, மரக்காணம் அடுத்த எக்கியார்குப்பத்திற்கு இன்று காலை 9.30 மணியளவில் அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் வந்தனர். விழுப்புரம் கலெக்டர் பழனி தலைமையில் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு நேராக சென்றனர். அங்கு அவர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு, ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர்.

    அப்போது எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, லட்சுமணன், மரக்காணம் யூனியன் சேர்மன் தயாளன், துணைத் தலைவர் பழனி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பலியான 13 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் என ரூ.ஒரு கோடியே 30 லட்சம் வழங்கப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மசோதா குறித்து தொழிலாளர் சங்கங்கள் சில கருத்துக்களை தெரிவித்து வருவதால் வருகிற 24-ந்தேதி ஆலோசனை நடைபெறுகிறது.
    • தமிழ்நாட்டில் உள்ள முக்கிய தொழிற்சங்கங்களுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

    சென்னை:

    தமிழக சட்டசபையில், "2023-ம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்த) சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

    இந்த சட்ட முன்வடிவினுடைய முக்கிய அம்சங்கள் குறித்தும், ஒன்றிய அரசின் தொழிலாளர் நல சட்டத்தில் இருந்து, தற்போது தமிழ்நாடு அரசு முன்மொழிந்து இருக்கும் இந்தச் சட்டம் எவ்வாறு வேறுபட்டு உள்ளது என்பதை விளக்கிக் கூறி, இந்த திருத்தத்தால் தமிழ்நாட்டிற்குக் கூடுதலாக வரக்கூடிய முதலீடுகள் மற்றும் பெருகும் வேலைவாய்ப்புகள் குறித்தும் சட்டமன்றத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் விளக்கம் அளித்தனர்.

    இருப்பினும், இந்த மசோதா குறித்து தொழிலாளர் சங்கங்கள் சில கருத்துக்களை தெரிவித்து வருவதால் வருகிற 24-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று மதியம் 3 மணிக்கு தலைமை செயலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், தலைமை செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் தொழிலாளர் நலத்துறை ஆணையர் ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய தொழிற்சங்கங்களுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

    ×