என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » tn special officers
நீங்கள் தேடியது "TN Special Officers"
உள்ளாட்சி அமைப்புகளில் தனி அலுவலர்கள் பதவிக்காலம் நீட்டிப்பு தொடர்பான சட்டத்திருத்த மசோதா, தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது. #TNLocalBodies #TNSpecialOfficers
சென்னை:
உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிவடைந்த பிறகும், தேர்தல் நடத்தப்படாததால் உள்ளாட்சிகளை நிர்வகிப்பதற்காக தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். வார்டு வரையறை தொடர்பான பணிகள் முடிவடையாததால் தேர்தல் தொடர்ந்து தாமதம் ஆகிவருகிறது. இதனால் தனி அலுவலர்களின் பதவிக்காலமும் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தனி அலுவலர்களின் பதவிக்காலம் நாளை மறுநாளுடன் முடிவடைய உள்ளது. எனவே, அவர்களின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா, சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்தார். அதில், வார்டு வரையறை பணிகள் இன்னும் முடிவடையாததால், பதவிக்காலம் நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
அப்போது, சட்டத் திருத்தத்திற்கு தி.மு.க., காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் சபையில் பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவு இருந்ததால், குரல் வாக்கெடுப்பின் மூலம் இந்த சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதன்மூலம் உள்ளாட்சி தனி அலுவலர்களின் பதவிக்காலம் 4-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #TNLocalBodies #TNSpecialOfficers

×

X