என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Today Cinema News"
- படக்குழுவினர் ரசிகர்களுடன் அமர்ந்து திரைப்படத்தை கண்டுகளித்தனர்.
- `சார்’ திரைப்படம் வெற்றியடைந்தது மிகுந்த மகிழ்ச்சி.
திருப்பூர்:
நடிகர் விமல் நடித்த 'சார்' திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றியடைந்துள்ளது. இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக திருப்பூர் ஸ்ரீ சக்தி திரையரங்கிற்கு வந்த நடிகர் விமல், இயக்குனர் போஸ் வெங்கட் உள்ளிட்ட படக் குழுவினர் ரசிகர்களுடன் அமர்ந்து திரைப்படத்தை கண்டுகளித்தனர்.
பின்னர் கேக் வெட்டி படத்தின் வெற்றியை உற்சாகமாக கொண்டாடினர். இதனைத்தொடர்ந்து நடிகர் விமல் நிருபர்களிடம் கூறியதாவது:-
`சார்' திரைப்படம் வெற்றியடைந்தது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற சிறிய திரைப்படங்கள் வெற்றி பெறுவது திரைத்துறையை மேலும் ஊக்குவிக்கும். ஓடிடி, திரையரங்கு என்பவை வெவ்வேறானவை. இரண்டும் திரைத்துறைக்கு மிகுந்த ஊக்கத்தை வழங்குகிறது.
திரையரங்குகள் மூலம் வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்களின் ஆதரவுகளை பெற்று கொண்டாட்டத்தை ஏற்படுத்துகிறது.
விஜய் மாநாட்டிற்கு விஷால் செல்வேன் என கூறியது வரவேற்கத்தக்க விஷயம். எனக்கு அந்த நேரத்தில் படப்பிடிப்பு இருக்கும் காரணத்தால் மாநாட்டில் கலந்து கொள்ள முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இயக்குனர் போஸ் வெங்கட் கூறுகையில், `சிறிய திரைப்படங்கள் வெற்றி பெற நாட்கள் தேவைப்படுகிறது. ஆனால் முதல் 3 நாட்கள் மட்டுமே வாய்ப்பு கிடைக்கிறது. அதற்கு அடுத்த நாட்கள் திரையரங்குகளால் பொறுமை காக்க முடியாத நிலையில் நல்ல படங்களும் திரையரங்கை விட்டு வெளியேறுகிறது.
ஆனால் லப்பர் பந்து, சார் ஆகிய படங்களுக்கு பொதுமக்கள் அளித்த வரவேற்பு மகிழ்ச்சியை தருகிறது. வார இறுதி நாட்கள் தவிர்த்து அடுத்தடுத்த நாட்களிலும் ரசிகர்களின் ஆதரவைப் பெற்று படம் வெற்றி அடைந்திருக்கிறது. பொது மக்களின் நல்ல விமர்சனம் காரணமாக படம் வெற்றி அடைந்திருக்கிறது' என்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வேட்டையன் படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்கில் இன்று ரிலீசானது.
- ரசிகர்கள் திரையரங்கில் முதல் நாள் காட்சியில் கொண்டாடி வருகின்றனர்.
ரஜினிகாந்த் - அமிதாப்பச்சன் இணைந்து நடித்துள்ள வேட்டையன் படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்கில் இன்று ரிலீசானது. இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராகவும், இந்திய திரையுலகின் உச்ச நட்சத்திரமாகவும் உலா வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் `வேட்டையன்'.
ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம் ஆயுத பூஜை கொண்டாட்டமாக வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதன்படி, உலகம் முழுவதும் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படம் இன்று வெளியானது. பல திரையரங்கில் காலை முதலே சிறப்புக்காட்சிகள் திரையிடப்பட்டது. காலை 9 மணிக்கு சிறப்புக் காட்சி தொடங்கியது. தியேட்டர்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
என்கவுன்டர் பற்றி அலசும் இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்தும், என்கவுன்டரை எதிர்க்கும் வழக்கறிஞராக அமிதாப்பச்சனும் நடித்துள்ளனர்.
இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர்ஸ்டார்கள் இருவர் நடித்திருப்பதால் இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருப்பதால் இந்த படத்தை ரஜினி ரசிகர்கள் திரையரங்கில் ஆர்வத்துடன் முதல் நாள் காட்சியில் கொண்டாடி வருகின்றனர்.
வேட்டையன் கொண்டாட்டத்தை முன்னிட்டு அதிகாலை முதலே பல திரையரங்குகளில் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.
இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் – அமிதாப் பச்சன் ஆகிய இருவருடன் இணைந்து பகத் ஃபாசில், ராணா, கிஷோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் பெரும்பாலான காட்சிகள் பெண் கதாபாத்திரங்களையே மையப்படுத்தி நகர்வது போல திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
துஷாரா விஜயன், ரித்திகா சிங், அபிராமி, ரோகிணி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடித்துள்ளார்.
மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வேட்டையன் படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருப்பது படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு மட்டுமின்றி பெங்களூர், ஐதரபாத், மும்பை, கொச்சி, திருவனந்தபுரம் என இந்தியாவின் பல நகரங்களிலும், வெளிநாடுகளிலும் வேட்டையன் படத்தை காண ரஜினி ரசிகர்கள் குவிந்து வருகினனறனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார்.
- லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து உள்ளது.
இயக்குநர் ஷங்கர், நடிகர் கமல்ஹாசன் கூட்டணியில் உருவான "இந்தியன் 2" திரைப்படம் கடந்த ஜூலை 12-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்த படம் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான "இந்தியன்" படத்தின் தொடர்ச்சியாக வெளிவந்தது. சுமார் 28 வருடங்களுக்கு பிறகு சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்தார்.
இந்த படத்தில் கமல்ஹாசனுடன் எஸ்.ஜே.சூர்யா, சித்தார்த், பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், ப்ரியா பவானி ஷங்கர், விவேக், நெடுமுடி வேணு, மனோபாலா, அயன் ஜெகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து உள்ளது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதையடுத்து 'இந்தியன் 2' விரைவில் ஓடிடியில் வெளியாகும் என்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தின் உரிமையை மிகப்பெரிய தொகைக்கு வாங்கியதாக கூறப்பட்டது.
இந்நிலையில், 'இந்தியன் 2' திரைப்படம் வரும் 9-ந்தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்