search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "track new train"

    காட்பாடியில் சாலையிலும் மற்றும் தண்டவாளத்திலும் ஓடும் நவீன சரக்கு ரெயில் பெட்டி சோதனை ஓட்டம் நடைபெற்றது. #Train #FreightTrain

    சென்னை:

    ரெயில்வேயில் சரக்கு ரெயில்களில் இருந்து சரக்குகளை தடங்கல் இன்றி ரெயில் முனையங்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில் சாலையிலும், தண்டவாளத்திலும் இயங்கக்கூடிய சரக்கு ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

    இதை ரெயில்வேயில் ஒப்பந்தம் பெற்று கிர்லோஸ்கர் நிறுவனம் தயாரித்துள்ளது.

    இந்த பெட்டிகளில் தண்டவாளத்தில் செல்லும் இரும்பு சக்கரங்களுடன், சாலையில் செல்லும் வகையில் இரும்பு சக்கரங்களும் பொருத்தப்பட்டுள்ளன.

    சரக்கு ரெயில் பெட்டிகளை சாலைகளில் இயக்கும் போது அவற்றின் இரும்பு சக்கரங்கள் மேலே எழும்பி விடும். டயர்கள் பொருத்திய அமைப்பு மூலம் பெட்டிகள் இணைக்கப்பட்டு சாலையில் பயணிக்கும்.

    பின்னர் ரெயில் பெட்டியை தண்டவாளத்தில் இயக்கும் போது அதன் டயர் சக்கரங்கள் தண்டவாளத்தை தொடாத வகையில் மேலே எழும்பிவிடும்.

    இதன்மூலம் ரெயில் போக்குவரத்து இல்லாத இடத்துக்கு கூட சரக்குகளை விரைவில் சென்று சேர்க்க முடியும். இதன் சோதனை ஓட்டம் வேலூர் மாவட்டம் மேல்பாக்கம் சரக்கு முனையத்தில் இருந்து காட்பாடி வரை நடைபெற்றது. இந்த சோதனை வெற்றிகரமாக நடந்தது.

    இங்கிருந்து முதல் முறையாக அரியானா மாநிலம் பல்வால் இடையே விரைவில் வணிக ரீதியான சேவை தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×