என் மலர்
நீங்கள் தேடியது "traders"
- கிடங்கு பராமரித்தல் குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.
- மதுரை கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிறுவனம் மூலம் நடத்தப்பட்டது.
அவினாசி :
திருப்பூர் மாவட்டம் , அவினாசி வட்டாரம் நடுவச்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், விவசாயிகள்- வியாபாரிகள் மற்றும் ஆலை உரிமையாளர்களுக்கான கிடங்கு பராமரித்தல் குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.
இந்த பயிற்சி முகாம் மதுரை கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிறுவனம் மூலம் நடத்தப்பட்டது. திருப்பூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சொ. சீனிவாசன் முகாமை தொடங்கி வைத்தார். பயிற்சி ஒருங்கிணைப்பாளர் அழகுபாண்டியன், இயக்குனர் முனைவர் தர்மராஜ் மற்றும் கள அலுவலர் கலந்து கொண்டனர். முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு பயிற்சி கையேடு மற்றும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
- கொரோனா பாதிப்புக்கு பிறகு தற்போதுதான் அதிலிருந்து மீண்டு வருகிறோம்.
- தமிழகம் முழுவதும் இரவு நேரத்தில் வணிக நிறுவனங்கள் திறந்து செயல்பட அரசாணை வெளியிட்டுள்ளது.
திருப்பூர் :
திருப்பூா் மாவட்டத்தில் இரவு நேர கடைகள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று காவல் துறைக்கு வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் திருப்பூா் மாவட்டச் செயலாளா் கணேசன், பல்லடம் சங்க செயலாளா் அண்ணாதுரை ஆகியோா் திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கொடுத்துள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது:-
திருப்பூா் மாவட்டத்தில் இரவு 10 மணி வரை மட்டுமே வணிக நிறுவன கடைகள் திறந்திருக்க வேண்டும் என காவல் துறை அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பாதிப்புக்கு பிறகு தற்போதுதான் அதிலிருந்து மீண்டு வருகிறோம். இந்த நிலையில் இரவு 10 மணிக்கு மேல் கடையை திறக்கக்கூடாது என்பதால் பெரிதும் பாதிக்கப்படுகிறோம். வியாபாரிகள் நலன் கருதி தமிழக அரசு தமிழகம் முழுவதும் இரவு நேரத்தில் வணிக நிறுவனங்கள் திறந்து செயல்பட கடந்த ஜூன் மாதம் 2-ந் தேதி அரசாணை வெளியிட்டுள்ளது. அதனால் மாவட்டம் முழுவதும் இரவு 10 மணிக்கு மேலும் கடையை திறந்து வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.
- அலெக்ஸ் தலைமையில் சின்னசேலம் பகுதியில் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
- கடையில் இருந்த 7 ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
சின்னசேலம் போலீஸ் நிலையத்திற்கு அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் ரகசியமாக விற்று வருவதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் தலைமையில் சின்னசேலம் பகுதியில் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டனர். அப்பொழுது அமைய கரம் அருகே உள்ள தென் பொன் பரப்பி பகுதியில் உள்ள மளிகை கடையில் போலீ சார் சோதனை மேற் கொண்டனர். அப்போது ஹான்ஸ் பாக்கெட்டு கள் இருப்பது தெரிய வந்தது.
பின்னர் கடையில் இருந்த 7 ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். அதே போல் வாசுதேவனூர் கிரா மத்தில் உள்ள ஈஸ்வரன் மளிகை கடையில் சோதனை செய்தபோது 7ஹான்ஸ் பாக்கெட் இருப்பது தெரிய வந்தது. பின்னர் கோவிந்த ராஜ், ஈஸ்வரன் ஆகி யோர் மீது சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- கீழக்கரையில் சாலையோர வியாபாரிகளுக்கு இலவச தள்ளுவண்டிகளை எம்.எல்.ஏ. வழங்கினார்.
- 5-வது வார்டு முத்துசாமிபுரத்தில் உள்ள குடிநீர் குழாய்களை பொது மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
கீழக்கரை
தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் சாலையோர வியாபாரி களுக்கான ஆதரவு திட்டத்தின் கீழ் கீழக்கரையில் உள்ள சாலையோர வியாபா ரிகளுக்கு ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்புள்ள தள்ளுவண்டிகள் வழங்க 15 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க. மாவட்ட செயலாளருமான காதர் பாட்ஷா முத்து ராமலிங்கம் எம்.எல்.ஏ. முதற்கட்டமாக 5 தள்ளு வண்டிகளை வழங்கினார். இதைத்தொடர்ந்து புதிய ஜெட்டி பாலத்தில் அமைந்துள்ள உயர் கோபுர மின் விளக்கை பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். 1-வது மற்றும் 7-வது வார்டுகளில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்காக்கள் மற்றும் குடிநீர் தொட்டிகளை திறந்து வைத்தார். 5-வது வார்டு முத்துசாமிபுரத்தில் உள்ள குடிநீர் குழாய்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
மேலும் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.25 லட்சம் மதிப்பில் அமைய உள்ள சமுதாயக் கூட இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதில் நகராட்சி தலைவர் செஹனாஸ் ஆபிதா, துணைத்தலைவர் ஹமீது சுல்தான், ஆணையாளர் செல்வராஜ், பொறியாளர் அருண், ராமநாதபுரம் நகராட்சி துணைத் தலைவர் பிரவீன் தங்கம், கீழக்கரை நகர் தி.மு.க. செயலாளர் பஷீர் அகமது, மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் பிரவீன், வடக்கு தெரு ஜமாஅத் தலைவர் ரத்தின முஹம்மது, இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சுபியான், நயீம் மற்றும் கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- எஸ் .என். ஹைரோட்டில் இருபுறமும சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.
- மேல் மூடிகளை மூடும் வகையில் கான்கிரீட் அமைக்க கம்பிகள் மட்டும் கட்டப்பட்டுள்ளது
நெல்லை:
நெல்லை டவுன் ஆர்ச் முதல் சந்திப்பு மேம்பாலம் வரையிலும் எஸ் .என். ஹைரோட்டில் இருபுறமும சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.
இதற்காக அந்த 2 பகுதியிலும் வாறுகால் அமைக்கும் பணி நடந்துவருகிறது.இந்நிலையில் சமீப காலமாக ஒரு சில இடங்களில் பாதி வாறுகால் பணிகள் மட்டுமே முடிந்துள்ளதாகவும், மீதி இடங்களில் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் அந்த பகுதி வியாபாரிகள் புகார் கூறி வருகின்றனர்.
வாறுகால் அமைப்பதற்காக இருபுறமும் கான்கிரீட் சுவர்கள் எழுப்பப்பட்ட நிலையில் அதற்கு மேல் மூடிகளை மூடும் வகையில் கான்கிரீட் அமைக்க கம்பிகள் மட்டும் கட்டப்பட்டுள்ளதாகவும், வெகு நாட்களாகியும் அதன் மீது கான்கிரீட் கலவை போடப்படாததால் கடைகளுக்கு வரும் வியாபாரிகள், பொதுமக்கள் கால்கள் இரும்பு கம்பிகளால் பதம் பார்க்கப்படுவதாகவும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து கிடப்பில் போடப்பட்டுள்ள வாறுகால் பணிகளை விரைந்து முடித்து வியாபாரிகள் சிரமமின்றி வியாபாரம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ரூ.17 கோடி செலவில் நெட்டூர் சாலை அமைக்கும் போது இந்த 400 மீட்டர் பகுதி மட்டும் புறக்கணிக்கப்பட்டு சாலை அமைக்கப்பட்டது.
- பேவர் பிளாக் சாலையாக மாற்ற நெடுஞ்சாலைத்துறை ரூ. 22 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது.
ஆலங்குளம்:
ஆலங்குளம் காய்கனி மார்க்கெட் சாலையை வியாபாரிகள், பொதுமக்கள் மட்டுமின்றி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
ரூ.17 கோடி செலவில் நெட்டூர் சாலை அமைக்கும் போது இந்த 400 மீட்டர் பகுதி மட்டும் புறக்கணிக்கப்பட்டு சாலை அமைக்கப்பட்டது. இச்சாலையை சீரமைக்க வேண்டும் என மாணவர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என பல தரப்பினரும் கலெக்டர், நெடுஞ்சாலைத்துறையினர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அளித்து வந்தனர்.
இதையடுத்து அதனை பேவர் பிளாக் சாலையாக மாற்ற நெடுஞ்சாலைத்துறை ரூ. 22 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. இப்பணி தொடங்கப்பட்டு கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. சாலையின் இருபுறமும் சில அடி இடைவெளி விட்டு அமைக்கப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்படி அமைத்தால் மழை நீர் தேங்கி வெளியேற இயலாது, விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் சாலை முழுவதும் பேவர் பிளாக் பொருத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி காய்கனி சந்தை வியபாரிகள் முற்றுகையிட்டு பணியை தடுத்து நிறுத்தினர்.
தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பூமிநாதன் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஒப்பந்தப் புள்ளி அடிப்படையில்தான் சாலை அமைக்க முடியும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வியாபாரிகள் தரப்பில் இதற்கு ஒப்புக்கொள்ளாததால் தென்காசி கலெக்டரிடம் புகார் அளித்து தீர்வு காண முடிவு செய்தனர்.
- தொழில் நிலையை பாதுகாக்கும் வகையில் புதிய கொள்கைகள்
- பல்வேறு காரணங்களால், வெளிநாட்டு வர்த்தக கொள்கை மறுசீரமைப்பு
திருப்பூர்,நவ.21-
இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது ஜெர்மனி. இந்தியாவின் மொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதியில் 4 சதவீதம் ஆடைகள் ஜெர்மனிக்கு செல்வது குறிப்பிடத்தக்கது. ஜவுளி இறக்குமதி செய்யும் பெரிய நாடுகளில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது ஜெர்மனி.
ஜெர்மனியில் ஜவுளி வர்த்தகர்களும் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஏற்றுமதி வர்த்தகர்களும் சந்தித்து வர்த்தக வாய்ப்புகளை பறிமாறிக்கொள்ள ஏதுவாக அடிக்கடி வர்த்தக சந்திப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டிருந்த சந்திப்பு நிகழ்ச்சிகளும், கண்காட்சிகளும் இந்தாண்டு எழுச்சியுடன் நடத்தப்படுகிறது.
ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) சார்பில் வர்த்தக சந்திப்பு நிகழ்ச்சி பிப்ரவரி 27, 28ந் தேதிகளில் ஜெர்மனியில் உள்ள பெர்லினில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியா - ஜெர்மனி இடையே ஜவுளித்தொழில் வர்த்தகம் சிறப்பாக நடந்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் வர்த்தக அபாரமாக வளர்ச்சி பெற்றுள்ளது.கடந்த 2019 ம் ஆண்டில் 3.09 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி நடந்தது. கடந்த 2021ம் ஆண்டில் 3.34 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து ஏ.இ.பி.சி., அதிகாரிகள் கூறியதாவது:-
இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகத்ததை மேம்படுத்தும் வகையில் ஏ.இ.பி.சி., ஊக்கமளித்து வருகிறது. ஜவுளி ஏற்றுமதியில் முக்கிய நாடாக இருக்கும் ஜெர்மனியுடன் வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் வர்த்தகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் பங்கேற்பதன் வாயிலாக புதிய ஏற்றுமதி வர்த்தக வாய்ப்புகளை உருவாக்க முடியும். வர்த்தகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 0421 2232634 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்தநிலையில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளிநாட்டு வர்த்தக கொள்கை உருவாக்கப்படுகிறது.
எதிர்பாராத வகையில் ஏற்படும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, வர்த்தக நாடுகளில் உருவாகும் அசாதாரண சூழல், பஞ்சு -நூல் உற்பத்தியில் மாறுபாடு, பணமதிப்பில் உருவாகும் ஏற்றத்தாழ்வு போன்ற நேரத்தில் தொழிலை பாதுகாக்கும் வகையில் தேவையான திருத்தம் செய்யப்படுகிறது.
கடந்த 2015ல் உருவாக்கிய வெளிநாட்டு வர்த்தக கொள்கை 2022 செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. அதன்பின் தற்போதைய தொழில் நிலையை பாதுகாக்கும் வகையில் புதிய கொள்கைகள் உருவாக்கப்படுமென தொழில்துறையினர் எதிர்பார்த்தனர்.புதிய அம்சங்களுடன் புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கை உருவாக்கப்படும் என தொழில்துறையினர் பெரிதும் எதிர்பார்த்தனர். வெளிநாட்டு வர்த்தகம் 'டாலர்' பணமதிப்பின் அடிப்படையில் நடக்கிறது.
இந்நடைமுறையை மாற்றம் செய்து இந்திய ரூபாய் மதிப்பில் வர்த்தகம் செய்ய வழிவகை செய்வது குறித்தும், தொழில்துறை அமைச்சரகம் தீவிரமாக ஆராய்ந்து வந்தது. விரிவாக ஆலோசனை நடத்திய மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சரகம் வெளிநாட்டு வர்த்தக கொள்கை புதுப்பிக்கும் முடிவை 6 மாதம் ஒத்திவைத்துள்ளது.
இதுகுறித்து ஏற்றுமதி வர்த்தகர்கள் கூறுகையில், உக்ரைன் போர் மற்றும் பொருளாதார மந்தநிலை காரணமாக பல்வேறு நாடுகளில் இயல்பான வர்த்தகம் நடைபெறுவதில்லை. இயல்பு நிலை திரும்ப மேலும் சில நாட்களாகும்.
ஆஸ்திரேலியா, பிரிட்டன் நாடுகளுடன், வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் உருவாக்கும் முயற்சியும், இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதன்காரணமாகவே வெளிநாட்டு வர்த்தக கொள்கை மறுசீரமைப்பு மார்ச் 31 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றனர்.
இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு தலைவர் சக்திவேல் கூறுகையில், பல்வேறு காரணங்களால், வெளிநாட்டு வர்த்தக கொள்கை மறுசீரமைப்பு 6 மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அதற்கு முன்னதாக இந்திய ரூபாய் மதிப்பில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்படுகிறது. அடுத்த நிதியாண்டில் (2023 ஏப்ரல்) இருந்து புதிய திருத்தங்களுடன் வெளிநாட்டு வர்த்தக கொள்கை உருவாக்கப்பட வாய்ப்புள்ளது என்றார்.
- விவசாயிகளின் விளை பொருட்களை விற்க முடியாத நிலை உள்ளது.
- விவசாயிகள் பாதிக்கும் வகையில் வியாபாரிகள் கடை அமைக்க அனுமதிக்க கூடாது .
வீரபாண்டி :
திருப்பூர் மாவட்டம் தென்னம்பாளையத்தில் இயங்கி வரும் உழவர் சந்தைக்கு தினமும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்களது விளை பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் உழவர் சந்தை வியாபாரத்தை கெடுக்கும் வகையில் வியாபாரிகள் சாலையோரமாக கடை அமைத்து விதிகளை பின்பற்றாமல் காலை நேரங்களில் வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் உழவர் சந்தைக்கு வரும் பொது மக்களின் வருகை குறைவதால் விவசாயிகளின் விளை பொருட்களை விற்க முடியாத நிலை உள்ளது.
இந்நிலையில் பல்லடம் சாலையில் உள்ள திருப்பூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் காலை 4 மணி முதல் 9 மணி வரை வியாபாரிகள் கடை அமைத்துக் கொள்ளலாம் என கூட்டுறவு சங்கத்தின் மூலம் அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில தலைவர் சண்முகசுந்தரம், திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் ஏபிடி. எம் .மகாலிங்கம், திருப்பூர் மாநகர ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் மற்றும் தெற்கு உழவர் சந்தை விவசாயிகள் ஆகியோர் கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குனரை நேரில் சந்தித்து உழவர் சந்தை இயங்கும் நேரத்தில் தங்களது வளாகத்தில் வியாபாரிகளுக்கு கடை அமைக்க வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் எனவும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் வியாபாரிகள் இங்கு கடை அமைக்க அனுமதிக்க கூடாது எனவும் மனு வழங்கப்பட்டது.
- அதிகளவில் காலா மீன், வாவல், நிலக்கால் நண்டு, புள்ளி நண்டு, இறால் உள்ளிட்ட மீன்கள் கிடைத்துள்ளன.
- மீன்களை வெளி மாவட்டங்களுக்கு அனுப்பும் பணியில் வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதா ரண்யம் கோடியக்கரையில் அக்டோபர் மாதம் முதல் மார்ச் வரை மீன்பிடி சீசன் காலமாகும்.
தற்போது பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் கோடியக்கரையில்யில் தாங்கி மீன் பிடித்து வருகின்றனர்.
காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக 10 நாட்கள் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாத நிலையில் நேற்று இரவு மீன் பிடிக்க சென்ற கோடியக்கரை மீனவர்களது வலையில் அதிக அளவில் காலாமீன், வாவல், நிலக்கால் நண்டு, புள்ளி நண்டு, இறால், உள்ளிட்ட மீன்கள் கிடைத்துள்ளன.
இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் காலா மீன் கிலோ ரூபாய் 500, வாவல் மீன் ரூ. 700, இறால் ரூ. 200,நீலக்கால் நண்டு ரூ. 700, புள்ளிநண்டு ரூ.200க்கும், ஏலம் போயின.
ஒரே நாளில் 5 டன்மீன்கள் கிடைத்ததாலும் அதற்கு நல்ல விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மீன்களை வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு ஐஸ் வைத்து அனுப்பும் பணியில் வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
- மதுரை மண்டல தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
- தெப்பக்குளம் சந்திர குழந்தை திருமண மண்டபத்தில் இன்று மாலை நடக்கிறது.
மதுரை
தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மதுரை மண்டல ஆலோசனை கூட்டம் இன்று மாலை தெப்பக்குளம் சந்திர குழந்தை திருமண மண்டபத்தில் நடக்கிறது.
மண்டல தலைவர் மைக்கேல் ராஜ் தலைமை தாங்குகிறார். ஜெயக்குமார் முன்னிலை வகிக்கிறார். ஸ்வீட்ராஜன் வரவேற்கிறார்.
சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மாநில தலைவர் முத்துக்குமார், மாநில நிர்வாகிகள் தங்கராஜ், சூசை ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இதில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. மதுரை மண்டல நிர்வாகிகள், உறுப்பினர்கள் இதில் பங்கேற்கிறார்கள்.
கூட்டத்திற்கான ஏற்பாடுகளை குட்டி என்ற அந்தோணிராஜ் செய்துள்ளார்.
- வியாபாரிகளை ரவுடிகள் மிரட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- கூட்டத்திற்கான ஏற்பாடுகளை குட்டி என்ற அந்தோணிராஜ் செய்தி ருந்தார்.
மதுரை
தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மதுரை மண்டல ஆலோசனை கூட்டம் தெப்பக்குளம் சந்திர குழந்தை திருமண மண்டபத்தில் நடந்தது. மண்டல தலைவர் மைக்கேல்ராஜ் தலைமை தாங்கினார். ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். ஸ்வீட்ராஜன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மாநில தலைவர் முத்துக்குமார், மாநில நிர்வாகிகள் தங்க ராஜ், சூசை ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் வணிகர்களை அச்சுறுத்தும் டெஸ்ட் பர்சேஸ் முறையை தடுக்கக்கோரியும், அதிக ஜி.எஸ்.டி. வரி விதிப்பை எதிர்த்தும், தென்தமிழகத்தில் வியாபாரிகளை ரவுடிகள் மிரட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரியும், அதிக டோல்கேட் வசூலை தடுக்க கோரியும், மின் கட்டண உயர்வை கைவிடக்கோரியும் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.
மேலும் மாநகராட்சி, உணவு பாதுகாப்பு மற்றும் வணிக வரித்துறை அதிகாரிகள் அத்துமீறி செயல்படுவதை தடுக்க கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கோரிக்கைகளை வலி யுறுத்தி வருகிற 20-ந்தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கவனஈர்ப்பு அறப்போராட்டத்தில் பங்கேற்பது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் மதுரை மண்டல நிர்வாகிகள், உறுப்பி னர்கள், வியாபாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கான ஏற்பாடு களை குட்டி என்ற அந்தோணிராஜ் செய்திருந்தார்.
- தெற்கு மண்டல் தலைவர் மாதவன் தலைமையில் பா.ஜ.க.வினர் தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் உள்ள வியாபாரிகளிடம் மனுக்களை பெற்றனர்.
- அந்த மனுவில் மின் அளவை மாதம் ஒரு முறை அளவிட மாநில அரசை வலியுறித்தியும் , மின்கட்டணத்தை உயர்த்திய மாநில அரசை கண்டித்தும் வாசகங்கள் இடம்பெற்று இருந்தன.
தூத்துக்குடி:
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ஆலோச னையின்படி தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜனதா வர்த்தக பிரிவு சார்பாக வணிகர்களின் மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, வியாபாரிகளிடம் விண்ணப்பம் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வர்த்தக பிரிவு மாநில செயலாளர் அசோக், தூத்துக்குடி தெற்கு மாவட்ட மாவட்ட பொதுச் செயலாளர் உமரி எஸ்.சத்தியசீலன், தெற்கு மாவட்ட வர்த்தக அணி தலைவர் கே.என்.ஆர்.பரமசி வன் ஆகியோர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
மாநில செயற்குழு உறுப்பினர் சந்தானகுமார், கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் சின்னதங்கம், முன்னிலையில், தெற்கு மண்டல் தலைவர் மாதவன் தலைமையில் பா.ஜ.க.வினர் தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் உள்ள வியாபாரிகளிடம் மனுக்களை பெற்றனர். அந்த மனுவில் மின் அளவை மாதம் ஒரு முறை அளவிட மாநில அரசை வலியுறித்தியும் , மின்கட்டணத்தை உயர்த்திய மாநில அரசை கண்டித்தும் வாசகங்கள் இடம்பெற்று இருந்தன. அந்த மனுவில் கடை உரிமையாளர்களிடம் பா.ஜ.க.வினர் கையொப்பம் வாங்கினர்.
நிகழ்ச்சியில் வர்த்தக பிரிவு மண்டல் தலைவர் மாரிராஜ்,வடக்கு மண்டல் தலைவர் மற்றும் நிர்வாகிகள் மதிராஜன், பாலசேகர்,செல்லப்பன்,வீரமணி,பட்டியல் அணி மாநில செயற்குழு உறுப்பினர் மாசானம், முத்துகிருஷ்ணன், அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாவட்ட செயலாளர் புனிதா, பொய்சொல்லான், செல்வம், சங்கர்கணேஷ், லெட்சுமி சிலம்பொழி, சோடா முருகேசன், ராஜ்குமார், புவனேஸ்வரன் கிளை தலைவர்கள் சுடலை, சவுந்தர்ராஜன், ராஜ கோபால், விக்னேஷ், சுரேஷ், புகழ் செந்தூர்பாண்டி மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு நடை பயணமாக சென்று வியாபாரிடம் மனுக்களை பெற்றனர்.