search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Traditiona"

    • பாரம்பரிய மீன்பிடி திருவிழாவில் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்றனர்
    • மீன்களை கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் வீடுகளுக்கு எடுத்து சென்றனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி உடையநேந்தல் கண்மாயில் பாரம்பரிய முறைப்படி மீன்பிடி திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நல்ல மழை பொழிவு இருந்ததால் கண்மாய் நிரம்பியது.

    விவசாயத்திற்கு கண்மாய் நீரை பயன்படுத்தியதால் நீர் வற்றியது. இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் மீன் பிடிக்க முடிவு செய்து சுற்றுப்புற கிராமங்களுக்கும் அறிவிப்பு செய்தனர். இன்று நடந்த மீன்பிடி திருவிழாவில் செண்பகம் பேட்டை, இரணியூர், கீழசெ வல்பட்டி, குன்றக்குடி கும்மங்குடி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிரா மங்களில் இருந்து வருகை தந்தவர்கள் மீன் பிடித்தனர்.சிறுவர்கள், பெரிய வர்கள், பெண்கள் என ஏராளமானோர் போட்டி போட்டுக் கொண்டு ஊத்தா கூடை, கச்சாவலை உள்ளிட்ட உபகரணங்களை கொண்டு ஒற்றுமையாக கண்மாயில் இறங்கி மீன்களை பிடித்தனர்.

    இதில் கட்லா, ஜிலேபி, கெளுத்தி, கெண்டை மீன்கள் கிடைத்தன. கிடைத்த மீன்களை கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் வீடுகளுக்கு எடுத்து சென்றனர்.

    ×