search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Traditional rice seeds"

    • ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கருக்கான பாரம்பரிய நெல் ரக விதை மானிய விலையில் வழங்கப்பட உள்ளது.
    • தற்போது மாப்பிள்ளை சம்பா 60 கிலோ, சீரக சம்பா 40 கிலோ, கருப்பு கவுனி 20 கிலோ இருப்பு வைக்கப்பட்டு வினியோகத்திற்கு தயாராக உள்ளது.

    பெரம்பலூர் :

    ஆலத்தூர் வேளாண்மை உதவி இயக்குனர் ராஜசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது :

    ஆலத்தூர் வட்டாரத்தில் நடப்பு சம்பா பருவத்திற்கு தேவையான பாரம்பரிய நெல் வகைகள், நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானிய விலையில் வினியோகம் செய்ய ஆலத்தூர் வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    தற்போது மாப்பிள்ளை சம்பா 60 கிலோ, சீரக சம்பா 40 கிலோ, கருப்பு கவுனி 20 கிலோ இருப்பு வைக்கப்பட்டு வினியோகத்திற்கு தயாராக உள்ளது. ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கருக்கான பாரம்பரிய நெல் ரக விதை மானிய விலையில் வழங்கப்பட உள்ளது.

    ஒரு கிலோவின் விலை ரூ.25 ஆகும். நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் அதாவது ஒரு கிலோவிற்கு ரூ.12.50 வீதம் வினியோகம் செய்யப்படுகிறது. எனவே பாரம்பரிய நெல் ரகங்கள் பயிரிட ஆர்வமுள்ள விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர் அல்லது ஆலத்தூர் வேளாண்மை விரிவாக்க மையத்தினை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×