search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "train collision"

    • எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் பரவியுள்ளது.
    • பயணிகள் தண்டவாளத்தில் குதித்தபோது, எதிர்புறத்தில் வந்த ரெயில் மோதியது.

    ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தாராவில் ரெயில் மோதி 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

    ஜம்தாரா- கர்மாதாண்ட் வழித்தடத்தில் கல்ஜாரியா பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

    பாகல்பூர் நோக்கி சென்றுக் கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் பரவியுள்ளது.

    தீ விபத்தால் அச்சமடைந்த பயணிகள் தண்டவாளத்தில் குதித்தபோது, எதிர்புறத்தில் வந்த ரெயில் பயணிகள் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

    சம்பவ இடத்திற்கு மீட்பு குழுவினர் விரைந்து பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை, ௧௨ பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

    • ரெயில்வே தண்டவாளத்தை கடக்கும் பொழுது எக்ஸ்பிரஸ் ரெயிலில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.
    • ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே உள்ள புது ரோடு நாகைய க்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாஜலபதி (வயது 58). இவர் கடந்த சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் நேற்று இரவு வீட்டை விட்டு வெளியே சென்றவர் ரெயில்வே தண்டவாளத்தை கடக்கும் பொழுது நாகர்கோவிலில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுகுறித்து திண்டுக்கல் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமை யிலான போலீசார் பிரேத த்தை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் போன்ற விவரம் தெரிய வில்லை.

    ஈரோடு:

    ஈரோடு கே.கே.நகர் அருகே உள்ள தண்ட வாளத்தில் வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து ஈரோடு ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே அந்த வாலிபர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இறந்த வாலிபருக்கு 30 வயது இருக்கும். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் போன்ற விவரம் தெரிய வில்லை.

    சம்பவ இடத்தில் ரெயில் வருவதை கவனிக்காமல் தண்ட வாளத்தை கடந்த போது அடிபட்டு இறந்தது தெரியவந்தது.

    இறந்த நபர் வெள்ளை நிற முழுக்கை சட்டையும், கருப்பு நிற ஜீன்ஸ் பேன்டும் அணிந்திருந்தார்.

    இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆண் ஒருவர் ரெயிலில் அடிப்பட்டு இறந்து கிடப்பதாக தகவல் வந்தது.
    • ஈரோடு ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு ரெயில் நிலையத்திற்கும், காவேரி ரெயில்வே நிலையத்திற்கும் இடைப்பட்ட தண்டவாள பகுதியில் ஆண் ஒருவர் ரெயிலில் அடிப்பட்டு இறந்து கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதன்பேரில் ஈரோடு ரெயில்வே போலீ சார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த வரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    இதில் இறந்தவருக்கு சுமார் 50 வயது இருக்கும் எனவும், சம்பவ இடத்தில் கவனக்கு றைவாக தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அவ்வழி யாக வந்த ரெயில் மோதி இறந்திருப்பது போலீ சாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

    இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரிய வில்லை. இதையடுத்து இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவ க்கல்லூரி மருத்துவ மனை க்கு அனுப்பி வைத்த னர்.

    இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரெயில் மோதி தொழிலாளி பலியானார்.
    • தண்டவாளத்தை கடக்கும் போது ரெயில் மோதி இறந்தாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள புது நெடுங்குளம் கிரா மத்தை சேர்ந்தவர் முத்து மணி(வயது35). இவர் அதே பகுதியில் உள்ள கல் உடைக்கும் ஆலையில் பணி யாற்றி வந்தார். இவரது மனைவி சுப்புலட்சுமி.

    இந்தநிலையில் இன்று காலை முத்துமணி வீட்டில் இருந்து அருகில் உள்ள வடகரை தண்டவாள பகுதிக்கு சென்றதாக கூறப் படுகிறது. அப்போது அந்த வழியாக வந்த ரெயில் முத்துமணி மீது மோதியது. இதில் உடல் சிதறி அவர் சம்பவ இடத்திலேயே பரிதா பமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த விருதுநகர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    முத்துமணி குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொ ண்டாரா? அல்லது தண்ட வாளத்தை கடக்கும் போது ரெயில் மோதி இறந்தாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • சிதம்பரம் பகுதிக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்றார்

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் கோவிந்தசாமி தெருவை சேர்ந்தவர் ஆண்டணி ஜோசப்ராஜ் (வயது 35). இவர் இன்று காலை சிதம்பரம் அருகே கிள்ளை-சிதம்பரம் பகுதிக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்றார்.அப்போது அந்த வழியாக திருச்ெசந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் ஆண்டணி ஜோசப்ராஜ் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.இதுகுறித்து சிதம்பரம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்குமார் உத்தரவின் பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    • யானைகள் மீது மோதிய வேகத்தில் ரெயில் என்ஜின் மற்றும் ஒரு பெட்டி தடம் புரண்டது.
    • ரெயிலுக்கு அடியில் யானைகளின் உடல்கள் சிக்கி இருந்தன.

    கொழும்பு:

    இலங்கையின் மட்டக் களப்பு அருகே ஹபரணை- கல்ஒயா ரெயில் நிலையம் இடையே தண்டவாளத்தை யானைகள் கடக்க முயன்றன. அப்போது பயணிகள் ரெயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. தண்டவாளத்தை கடந்து கொண்டிருந்த யானைகள் மீது ரெயில் மோதியது.

    ரெயில் மோதியதில் மூன்று யானைகள் உயிரிழந்தன. யானைகள் மீது மோதிய வேகத்தில் ரெயில் என்ஜின் மற்றும் ஒரு பெட்டி தடம் புரண்டது. இதனால் ரெயிலில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்த விபத்தால் ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.

    ரெயிலுக்கு அடியில் யானைகளின் உடல்கள் சிக்கி இருந்தன. சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து சென்றனர்.

    ரெயிலில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டனர். பின்னர் யானைகளின் உடல்கள் மற்றும் தடம் புரண்ட ரெயிலை மீட்கும் பணி நடந்தது.

    பனிமூட்டம் காரணமாக தங்கமணி ரெயில் வருவதை கவனிக்காமல் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    கடலூர்:

    விருத்தாசலம் நாச்சியார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் நமச்சிவாயம் இவரது மனைவி தங்கமணி (65). இவர் இன்று அதிகாலை 5:30 மணியளவில் காலை வீட்டில் இருந்து குப்பைகளை கொட்டுவதற்காக நாச்சியார்பேட்டை ெரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது திருநெல்வேலியில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற அதிவிரைவு ெரயில் மோதி பலியானார்.

    பனிமூட்டம் காரணமாக தங்கமணி ரெயில் வருவதை கவனிக்காமல் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டார் என போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. உடலை கைப்பற்றி விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.

    விருத்தாசலம் ரெயில்வே போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரெயில் தண்டவாளத்தில் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உடலில் காயத்துடன் இறந்து கிடந்தார்.
    • எக்ஸ்பிரஸ் ெரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தது தெரிய வந்தது.

    கடலூர்:

    கடலூர் அருகே நெல்லிக்குப்பம் மோரை தெரு பகுதியில் உள்ள ெரயில் தண்டவாளத்தில் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உடலில் காயத்துடன் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த கடலூர் முதுநகர் ெரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நெல்லிக்குப்பம் மோரை தெருவை சேர்ந்தவர் ஜீவானந்தம் (வயது 42). சென்னையில் இருந்து காரைக்கால் சென்ற எக்ஸ்பிரஸ் ெரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து இறந்த ஜீவானந்தம் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து கடலூர் முதுநகர் ெரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆஷிஷ்குமார் வடகரை அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்தார்.
    • எதிர்பாராத விதமாக எக்ஸ்பிரஸ் ெரயில் மோதி உடல் சிதறி பரிதாபமாக இறந்தார்.

    கடலுார்: 

    கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அருகே நந்திமங்கலத்தைச் சேர்ந்த முருகன். அவரது மகன் ஆஷிஷ்குமார்(வயது 14) இவர் வடகரை அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்தார். நேற்று இரவு 9 மணியளவில் அப்பகுதியில் செல்லும் விழுப்புரம் – திருச்சி ரயில் மார்க்கத்தில் இயற்கை உபாதைக்கு ரயில் பாதையை கடந்து சென்று மீண்டும் அவ்வழியே கடந்து வந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக சென்னையில் இருந்து கன்னியாகுமரி சென்ற கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ெரயில் மோதி உடல் சிதறி பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து வந்த விருத்தாசலம் ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமை யிலான போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். எக்ஸ்பிரஸ் ரயில் மோதி மாணவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சரவணம்பட்டி அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற காவலாளி மீது ரெயில் மோதியதில் சம்பவ இடத்திலேய பரிதாபமாக இறந்தார்.

    கோவை:

    கோவை சரவணம்பட்டி அருகே உள்ள கீரணத்தத்தை சேர்ந்தவர் சூர்யநாராயணன (வயது 61). காவலாளி. இன்று காலை இவர் பட்டேல் ரோடு அருகே உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் சூர்ய நாராயணன் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் ஏசு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சூர்ய நாராயணின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருப்பூரில் தண்டவாளத்தை கடக்க முயன்ற தலைமை ஆசிரியர் ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    திருப்பூர்:

    திருப்பூர் ஓடக்காடு பகுதியை சேர்ந்தவர் ஆண்டியப்பன் (வயது 70) இவர் திருப்பூரில் உள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் திருப்பூர் ரெயில் நிலையம் பகுதியில் நடைபயிற்சி செல்வது வழக்கம். 

    இதேபோல் சம்பவத்தன்று நடை பயிற்சிக்கு சென்ற அப்போது தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது கோவையில் இருந்து மயிலாடுதுறைக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் ஆண்டியப்பன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உடர் சிதறி பலியானார்.

    தகவல் கிடைத்ததும் திருப்பூர் ரெயில்வே போலீசார் தலைமை ஆசிரியரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

    ×