என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Tribals"
- மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதியாகும்.
- 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
மராட்டிய மாநிலத்தில் கட்சிரோலி என்ற பகுதி இருக்கிறது. இது மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதியாகும். இங்குள்ள பர்சேவாடா குக்கிராமத்தில் பழங்குடியின பெண்கள் 2 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர்.
ஜம்னி தெலமி (வயது 52), தேவு அட்லமி (57) ஆகிய 2 பேரும் மாந்தீரிகம் செய்வதாக அந்த கிராம பஞ்சாயத்தில் அறிவிக்கப்பட்டனர்.
இதை தொடர்ந்து 2 பெண்களும் 3 மணி நேரம் சித்ரவதை செய்யப்பட்டு 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு காட்டுக்குள் இழுத்து செல்லப்பட்டு உயிரோடு எரித்து கொல்லப்பட்டனர்.
இது தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் உயிரோடு எரிக்கப்பட்ட பெண்ணான ஜம்னி தெலமி கணவர் திவாகர் மகன் தேவாஜி ஆகியோரும் அடங்குவர்.
- காட்டுநாயக்கன் சமூக மக்கள் சங்கம் வலியுறுத்தல்
- வேலை வாய்ப்பிலும் ஒரு சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் பயன் பெற்று வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை காட்டுநாயக்கன் சமூக சீர்திருத்த சங்க ஆலோசனை கூட்டம் முத்தி ரையர் பாளையம் கல்கி கோவில் அருகில் உள்ள மதுரை வீரன் ஆலயத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் சங்க தலைவர் சுரேஷ், துணைத் தலைவர் முத்தையன், கவுரவ தலைவர் சுப்பு ராயலு, செயலாளர் செல்வம் மற்றும் நிர்வாகி கள் கலந்து கொண்டனர்.
கடந்த 2010-ம் ஆண்டு புதுவை ஆணை பிறப்பித்த தின் அடிப்படையில் பழங்குடி மக்கள் கல்வியி லும், வேலை வாய்ப்பிலும் ஒரு சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் பயன் பெற்று வருகிறார்கள்.
ஆனால் தற்போது புதுவை அரசு காவல் துறையில் ஊர் காவல் படைக்கு 500 நபர்களை பணியில் அமர்த்து ஆணை வெளியிட்டுள்ளது. இதில் பிற்படுத்தப்பட்ட பழங்குடி யினருக்கு இடஒதுக்கீடு அளிக்கப் படவில்லை.
எனவே தற்போது நடைபெற உள்ள ஊர்காவல் படை பணி தேர்வில் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு அளித்து ஆணையை திருத்தம் செய்து வெளியிட வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப் பட்டது.
- ஆதிதிராவிடர் நல விடுதிகளில் ரூ.6,51,000 செலவில் சமை யலுக்கு தேவைப்படும் பாத்திரங்கள் வழங்கப்பட் டுள்ளது.
- 21,659 மாணவர்களுக்கு ரூ.17,16,92,820 உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத் துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கடலூர் மாவட்டத்தில் பழங்குடியின இனத்தைச் சேர்ந்த 17 ேபர்களுக்கு ரூ. 51 லட்சம் செலவில் கான்கிரீட் வீடுகள் கட்டித்தர ஒப்புதல் வழங்கப் பட்டுள்ளது. ஆதி திரா விடர் நலத்துறையின் கீழ் இயங்கும் 61 ஆதிதிராவிடர் நல விடுதிகளில் ரூ.6,51,000 செலவில் சமை யலுக்கு தேவைப்படும் பாத்திரங்கள் வழங்கப்பட் டுள்ளது. அழிவின் விளிம்பி லுள்ள பழங்குடியினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், பழங்குடி யின மக்கள் 10 பேருக்கு ரூ.3,50,000 செலவில் இலவச கறவை மாடுகள் வழங்கப் பட்டுள்ளது. தீண்டா மை கடைபிடிக்காத மற்றும் மத நல்லிணக்கத்து டன் வாழும் கிராமத்தினை தேர்ந்தெடுத்தல் திட்டத்தின் கீழ் கடலூர் வட்டம், புதுக்கடை ஊராட்சியும் மேல்புவனகிரி, அம்மன் குப்பம் ஊராட்சியும் சிறந்த கிராமமாக தேர்ந்தெ டுக்கப் பட்டு ரூ.20 லட்சம் பரிசளிக் கப்பட்டுள்ளது. தீண்டாமை ஒழிப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டு தோறும் மனித நேய வாரவிழா நடை பெற்று வருகிறது.
தீண்டாமை கடைபிடிக் காத மற்றும் சமத்துவ மயானம் பயன்பாட்டில் உள்ள கடலூர் வட்டம் வரக்கால்பட்டு ஊராட்சிக்கு ரூபாய் 10 லட்சம் கிராம வளர்ச்சி பணிகளை மேற்கொள் வதற்கு ஊக்கத் தொகை வழங்கப் பட்டுள்ளது. பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த மக்களில், பழங்குடியினர் நலவாரிய உறுப்பினர்களில் 18 ேபர்களுக்கு ரூ.3,52,000 செல வில் ஈமச்சடங்கு, இயற்கை மரண உதவித் தொகை வழங்கப் பட்டுள்ளது. பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த 5 விவசாயிகளுக்கு ரூ. 9 லட்சம் செலவில் இலவச பவர் டிரில்லர் எந்திரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 25 இளைஞர்களுக்கு ரூ.1,50,000 செலவில் இலவச ஓட்டுநர் பயிற்சி அளித்து ஓட்டுநர் உரிமம் வழங்கப் பட்டுள்ளது. ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்த தையற்பயிற்சி பெற்ற 55 ேபர்களுக்கு இலவச தையல் எந்திரமும், 13 ேபர்க ளுக்கு சலவைப் பெட்டியும் வழங்கப் பட்டுள்ளது. வன்கொடு மையால் பாதிக்கப் பட்ட ஆதி திராவிடர் , பழங்குடி யின 477 குடும்பங்க ளுக்கு ரூ. 4,74,38,650 செலவில் தீருதவித் தொகையும், 16 ேபர்களுக்கு ரூ. 91,33,348 செலவில் ஓய்வூதியமும் வழங்கப்பட்டுள்ளது. வன்கொடுமையால் பாதிக்கப் பட்டு உயிரிழந்த 14 ேபர்களின் வாரிசுதாரர் களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் அரசுப் பணி (இளநிலை உதவி யாளர், அலுவலக உதவி யாளர், இரவு காவலர், சமையலர்) வழங்கப் பட்டுள்ளது.
பீரிமேட்ரிக் ஸ்காலர்ஷிப் – 319 பள்ளிகளில் 9 மற்றும் 10-ம் வகுப்பு பயிலும் 19,268 மாண வர்களுக்கு ரூ.5,71,53,600 உதவித் தொகை வழங்கப் பட்டுள்ளது. போஸ்ட் மேட்ரிக் 217 பள்ளிகளில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் 18,170 மாணவர்க ளுக்கு ரூ. 4,46,71,073 உதவித் தொகை வழங்கப்பட் டுள்ளது. 148 கல்லூரிகளில் பயிலும் 21,659 மாண வர்களுக்கு ரூ.17,16,92,820 உதவித் தொகை வழங்கப் பட்டுள்ளது. பெண்கல்வி ஊக்கு விப்புத்தொகை 3 முதல் 5 -ம் வகுப்பு பயிலும் 23,911 மாணவிகளுக்கு தலா ரூ.500 வீதம் ரூ.1,19,53,000 கல்வி உதவித்தொகை யும், 6 -ம் வகுப்பு பயிலும் 8,665 மாணவிகளுக்கு தலா ரூ.1,000 வீதம் ரூ.86,65,000 கல்வி உதவித்தொகை யும், 7 முதல் 8 -ம் வகுப்பு பயிலும் 18,317 மாணவி களுக்கு தலா ரூ.1,500 வீதம் ரூ.2,74,75,500 வழங்கப் பட்டுள்ளது. மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சி கள் மற்றும் ஊராட்சிகளில் தூய்மைப்பணியாளர்க ளாக பணிபுரிவோரின் குழந்தைகள் 1 -ம் வகுப்பு முதல் 10 -ம் வகுப்பு வரை பல்வேறு வகையான பள்ளி களில் சேர்ந்து விடுதியில் தங்கி மற்றும் விடுதியில் தங்காது கல்வி பயிலும் 454 மாணவர்களுக்கு ரூ.13,67,325 உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விருதுநகர் அருகே பழங்குடியினருக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்பட்டது.
- பயனாளி 5 சதவீதம் முதல் 10 சதவீதம் சொந்த முதலீடு வங்கியில் செலுத்தி எஞ்சிய தொகை வங்கி கடனுதவி பெற்றுக்கொள்ளலாம்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம் பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திட புதியதாக தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக சென்னை மற்றும் புறநகர்பகுதிகளில் பில்டர்காபி நிலையம் அமைக்க மானியத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேற்படி இத்தொழிலை தொடங்க காலி இடமோ அல்லது கட்டிடங்கள் வைத்திருப்பவர்களுக்கு பில்டர் காபி நிலையம் அமைக்கவும், தொழில் முனைவோர்கள் அல்லது அவர்களின் ஊழியர்களுக்கு தேவையான பயிற்சியும் உரிமையாளர் கட்டணம் ரூ.2 லட்சம் முற்றிலுமாக விலக்கும், விற்பனை செய்ய வாங்கும் பொருட்களுக்கு 5 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடியும், பில்டர் காபி நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படும். மேலும் மாதாந்திர பில்லிங்மென் பொருள் கட்டணம் விலக்கு அளிக்கப்படும்.
இத்தொழிலை செய்ய திட்ட அறிக்கை தயார் செய்ய இலவச ஆலோ சனைகள் அந்நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படும். 18 முதல் 40 வயதுக்குட்பட்ட ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற புகைப்படம் மற்றும் குறிப்பிட்ட சான்றுகளுடன் www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இத்தொழிலுக்கு ரூ.6.50 லட்சம் முதல் ரூ.7.50 லட்சம் வரை திட்டத் தொகையினை நிர்ணயித்து இதற்குரிய மானியமாக ஆதிதிராவி டர்களுக்கு 30 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.2.25 லட்சம் எனவும், பழங்குடி யினருக்கு 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3.75 லட்சம் வரை வழங்கப்படும். பயனாளி 5 சதவீதம் முதல் 10 சதவீதம் சொந்த முதலீடு வங்கியில் செலுத்தி எஞ்சிய தொகை வங்கி கடனுதவி பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் ‘ஈரி’ வகை பட்டுப்புழுக்களை வளர்த்து, பட்டு நூல் உற்பத்தியில் பழங்குடியினர் ஈடுபட்டு வருகின்றனர்.
- பட்டுப்புழுக்களுக்கு ஆமணக்கு, மரவள்ளி இலைகள் உணவாக வழங்கப்படுகிறது.
உடுமலை :
இந்தியாவில், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் 'ஈரி' வகை பட்டுப்புழுக்களை வளர்த்து, பட்டு நூல் உற்பத்தியில் பழங்குடியினர் ஈடுபட்டு வருகின்றனர்.பட்டுப்புழு வளர்ப்புக்கான முட்டைகளை அம்மாநில அரசே 26 உற்பத்தி மையங்கள் வாயிலாக பழங்குடியினருக்கு வழங்கி வருகிறது.
இவ்வகை பட்டுப்புழுக்களுக்கு ஆமணக்கு, மரவள்ளி இலைகள் உணவாக வழங்கப்படுகிறது. வனப்பகுதியில் நிலவும் தட்பவெப்ப நிலை 'ஈரி' வகை பட்டுப்புழு வளர்ப்புக்கு உகந்ததாக உள்ளது. ஆனால் தமிழகத்தில் 'ஈரி' வகை பட்டுப்புழு வளர்ப்பு தொழில் குறித்த விழிப்புணர்வு இல்லை.
இந்நிலையில் பழங்குடியினருக்கு நிரந்தர வருவாய் கிடைக்கவும், மத்திய அரசு வாயிலாக மானியத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. புழு வளர்ப்பு மனை கட்ட மொத்த மதிப்பான ஒரு லட்சம் ரூபாயில் 90 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது.இதே போல் வீரிய ரக ஆமணக்கு சாகுபடி, புழு வளர்ப்பு தளவாடங்கள், பண்ணை உபகரணங்களும் 90 சதவீத மானியத்தில் கொள்முதல் செய்து வழங்கப்படும்.சம்பந்தப்பட்ட பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் மானியத்துக்கு பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம்.
- கோக்கால் கிராமத்தில் கோலகலமாக தொடங்கியது.
- திரளானோர் கலந்து கொண்டனர்.
ஊட்டி,
நீலகிரி மலைப்பகுதியில் கோத்தர், தோடர், பணியர், குரும்பர், காட்டுநாயக்கர், இருளர் என 6 இனங்களைச் சேர்ந்த பண்டைய பழங்குடினர் வசித்து வருகின்றனர்.
கோக்கால் என்பது கோத்தர் குடியிருப்பின் பெயர். இந்தியாவிலேயே சோலூர், திருச்சுக்கடி, கொல்லிமலை, குந்தா கோத்தகிரி, மேல் கூடலூர், கோத்தகிரி, கீழ் கோத்தகிரி என 7 இடங்களில் மட்டுமே இவர்களின் சமுதாயத்தினர் வாழ்ந்து வருகின்றனர்
எருமை மேய்த்தல், இரும்புப் பொருட்கள் மற்றும் மண்பாண்டங்கள் செய்தல், விவசாயம் ஆகியவை இவர்களின் தொழில். ஆரம்பத்தில் பாரம்பரிய சிறுதானியங்களான ராகி, சாமை, தினை, கம்பு போன்றவற்றை விளைவித்தனர் இப்போது கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு பயிரிட்டு வருகின்றனர்.
இவர்கள் கடவுள் நம்பிக்கை, பாரம்பரியத்தை விட்டுக் கொடுக்க வில்லை. பெண்கள் மண்டூ செடியை தலையில் சூடிக்கொண்டு, துபிட்டி எனும் வெள்ளை புடவையை அணிந்து கொள்வதும், ஆண்கள் வேட்டி கட்டிக் கொண்டு வராடு என்கிற துணியை போர்த்திக் கொள்வதும்தான் இவர்களின் உடைக் கலாசாரம்.
ஐனூர், அம்மனூர் தான் இவர்களின் குல தெய்வம். இந்த நிலையில் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் 7 கோக்கால்களிலும் ஐனூர், அம்மனூர் கோவில் திருவிழா கோலாகலமாக நடக்கும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா சோலூர் ஊராட்சிக்கு உட்பட்ட கோக்கால் கிராமத்தில் கோலகலமாக தொடங்கியது.
பாரம்பரிய சிறப்புடன் தொடங்கிய இந்த திருவிழாவில் திரளான கோத்தர் இன மக்கள் கலந்து கொண்டு தங்களின் பாரம்பரிய உடை அணிந்து ஆடி பாடி திருவிழாவை கொண்டாடினர். இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.
- தலையணை மற்றும் கோட்டமலையாறு பகுதிகளில் சுமார் 40-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த சுமார் 140 பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
- எம்.எல்.ஏ.விடம் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பழங்குடியின மக்கள் மனு அளித்தனர்.
சங்கரன்கோவில்:
தென்காசி வடக்கு மாவட்டம் வாசுதேவநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட தலையணை மற்றும் கோட்டமலையாறு பகுதிகளில் சுமார் 40-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த சுமார் 140 பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
கடந்த நவம்பர் 27-ந் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. பழங்குடியின மக்களோடு சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினார். அப்போது பழங்குடியின மக்கள் தங்களுக்கு வீட்டு வசதி, வீட்டுமனைபட்டா, அங்கன்வாடி, ரேஷன் கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி அவரிடம் மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட ராஜா எம்.எல்.ஏ. அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கபடும் என உறுதி அளித்தார்.
இந்நிலையில் தலைமை செயலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழியை சந்தித்து வாசுதேவநல்லூர் தொகுதியில் உள்ள பழங்குடியின மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மனு அளித்தார். மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் அந்த பகுதிக்கு நேரில் வந்து ஆய்வு செய்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
- விண்ணப்பதாரர் மற்றும் குடும்பத்தினர் தாட்கோ திட்டத்தின்கீழ் இதுவரை மானியம் ஏதும் பெற்றிருக்க கூடாது.
- விண்ணப்பதாரர் மற்றும் வணிகத்தை தொடர்வதற்கு முன் விண்ணப்பதாரர் நிறுவனத்திலிருந்து உணவு உரிமத்தை பெற வேண்டும்.
கடலூர்:
தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் தொழில் முனைவோர் திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் ஆவின் பாலகம் அமைக்க மின் வாகனம் , குளிர்விப்பான் மற்றும் உறைவிப்பான் கொள்முதல் தாட்கோ மானியம் ரூ.90 ஆயிரம் மானியத்துடன் திட்டம் செயல்படுத்த அரசாணையிடப்பட்டுள்ளது. இதில் ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். 18 முதல் 65 வயதிற்குள்ளவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் மற்றும் குடும்பத்தினர் தாட்கோ திட்டத்தின்கீழ் இதுவரை மானியம் ஏதும் பெற்றிருக்க கூடாது. கூடுதல் செலவினத்தை ஈடு செய்யவும் மற்றும் அதிக பட்ச மானியத் தொகை சென்றடைய ஆதிதிராவிட தனிநபர்களுக்கான திட்டத் தொகையில் 30 சதவீதம் விழுக்காடு அல்லது அதிகபட்சமாக 2.25 இலட்சம் மானியம் விடுவிக்கப்படும்.
ஆவின் பாலகம் அமைக்க தேர்ந்தெடுக்கப்படும் கடையின் இடம் குறைந்த பட்சம் 100 சதுர அடியாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் அருகில் உள்ள மண்டல அலுவலகத்திலிருந்து விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பித்தவுடன் அந்தந்த மண்டல அலுவலகத்தின் பொது மேலாளர் மற்றும் துணை பொது மேலாளர் கடையை மதிப்பீடு செய்து ஒதுக்கீட்டு உத்தரவை வழங்குவார்கள். விண்ணப்பதாரர் மற்றும் வணிகத்தை தொடர்வதற்கு முன் விண்ணப்பதாரர் நிறுவனத்திலிருந்து உணவு உரிமத்தை பெற வேண்டும். ஆவின் பொருட்கள் ஆவின் மூலம் விற்பனை நிலையத்திற்கே நேரடியாக சென்று விநியோகம் செய்யப்படும். அதற்கான பணத்தை உடனடியாக செலுத்த வேண்டும். இத்திட்டம் தொடர்பான கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்திக தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என கலெக்டர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- தாட்கோ மூலமாக செயல்படுத்தப்படும் திட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான நபா்கள் பயனடைவா்.
- குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது.
திருப்பூர் :
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கான வருமான உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது.இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கான குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளதால் தாட்கோ மூலமாக செயல்படுத்தப்படும் திட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான நபா்கள் பயனடைவா். எனவே திருப்பூா் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இனத்தைச் சாா்ந்தவா்கள் இந்த சலுகையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அரசு விடுதிகளில் தங்க ஆதிதிராவிடர்-பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கூறினார்.
- விதிமுறைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி (https://tnadw-hms.in/application) என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
மதுரை
மதுரை மாவட்டத்தில் 2022-2023-ம் கல்வியாண்டிற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் உள்ள காலியிடங்களுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதற்காக விடுதி மேலாண்மை அமைப்பு (Hostel Management System) என்ற செயலியின் மூலம் இணைய வழியில் மாணவர்களின் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. இது தொடர்பான விதிமுறைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி (https://tnadw-hms.in/application) என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
பள்ளி விடுதிகளுக்கான சேர்க்கை வருகிற 20-ந்தேதி வரையிலும், கல்லூரி விடுதிகளுக்கான சேர்க்கை வருகிற 18-ந் தேதி முதல் அடுத்த மாதம் 5-ந் தேதி வரையிலும் என விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் விடுதி சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட மாட்டாது. தகுதியான மாணவர்கள் இந்த திட்டத்தினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் அனீஷ்சேகர் கேட்டுக்கொண்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்