search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tribes Adi Dravidian"

    • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தாட்கோ இணையதள முகவரியில் விண்ணப்பம் செய்ய வேண்டும்,
    • ஆதிதிராவிடர்களுக்கு திட்டத் தொகையில் 30 சதவீதம் அல்லது அதிக பட்சம் ரூ.2.25 லட்சம் மானியமும் பழங்குடியினருக்கு திட்டத் தொகையில் 50 சதவீதம் அல்லது ரூ.3.75 லட்சம் மானியமும் விடுவிக்கப்படும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்தவர்களுக்கு பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திடும் வகையில் தொழில் முனைவோரின் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவர், ஆவின் பாலகம் அமைத்தல் மற்றும் விவசாய நிலம் வாங்குதல் போன்ற திட்டங்களுக்கு தாட்கோ வழியே மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வழங்கப்படுகிறது.

    100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவராகவும் அத்துடன் கூடுதலாக இதர கட்டுமான பொருட்கள் மூலம் விற்பனை செய்து வருவாய் ஈட்டும் வகையில் ஆதிதிராவிடர்களுக்கு திட்டத் தொகையில் 30 சதவீதம் அல்லது அதிக பட்சம் ரூ.2.25 லட்சம் மானியமும் பழங்குடியினருக்கு திட்டத் தொகையில் 50 சதவீதம் அல்லது ரூ.3.75 லட்சம் மானியமும் விடுவிக்கப்படும்.

    50 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் உறைவிப்பான் ,குளிர்விப்பான் போன்ற உபகரணங்கள் கொள்முதல் செய்து ஆவின் பாலகம் அமைத்து வருவாய் ஈட்டிடும் வகையில் ஆதிதிராவிடர்களுக்கு திட்டத் தொகையில் 30 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.2.25 லட்சம் மானியமும் பழங்குடியினருக்கு திட்டத்தொகையில் 50 சதவீதம் அல்லது ரூ.3.75 லட்சம் மானியமும் விடுவிக்கப்படும்.

    200 நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்களுக்கு சமூக பொருளாதார நிலையில் மேம்பாட்டு அடையும் பொருட்டு அவர்கள் விவசாய நிலம் வாங்க நிலத்தின் விலையில் 50 சதவீதம் (விழுக்காடு) அல்லது அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை மானியம் விடுவிக்கப்படும்.

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தாட்கோ இணையதள முகவரியில் விண்ணப்பம் செய்ய வேண்டும் (www.tahdco.com). மேலும் விபரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி விவரம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம் .மேலும் விபரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, அறை எண்:501 (ம) 503,5 வது தளம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர் - 641 604 என்ற முகவரியையும், 94450 29552,தொலைபேசிஎண்: 0421-2971112 ஆகிய செல்போன்-தொலைபேசி எண்களையும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×