என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tribute"

    • கோவில்பட்டி அரசு மருத்துவமனை அருகே உள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க சார்பில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
    • தி.மு.க. சார்பில், மத்திய ஒன்றிய செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

    கோவில்பட்டி:

    சட்ட மேதை அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனை அருகே உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இதில் அ.தி.மு.க சார்பில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அ.தி.மு.க. வக்கீல் அணி செயலாளர் சிவபெருமாள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மோகன், சின்னப்பன், நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அய்யாத்துரை பாண்டியன், அன்புராஜ், மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளர் வேலுமணி, நகராட்சி கவுன்சிலர், செண்பகமூர்த்தி, மாவட்ட மாணவர் அணி செல்வக்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.

    நகர, ஒன்றிய தி.மு.க. சார்பில், மத்திய ஒன்றிய செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில் மேற்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். தி.மு.க. சிறுபான்மை பிரிவு துணை அமை ப்பாளர் அமலி பிரகாஷ், இலக்கிய அணி செயலாளர் மணி, மாத்தையா உட்பட பலர் கலந்து கொண்டு அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் தலைமை யில் கட்சியின் மாவட்ட, நகர நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், நகர செயலாளர் ஜோதிபாசு, ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ம.தி.மு.க. சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் மாலை அணிவித்தார். இதில் மாநில சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் விநாயகா ரமேஷ், பவுன் மாரியப்பன், முத்து ச்செல்வன், கொம்பையா, செண்பகராஜ், நாகராஜ், குழந்தைவேல் உட்பட பலர் கலந்து கொண்டு சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    காங்கிரஸ் சார்பாக எஸ்.சி. அணி மாநில துணை தலைவர் மாரிமுத்து தலை மையில் மாலை அணி விக்கபப்ட்டது. இதில் வடக்கு மாவட்ட தலைவர் காமராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • பாரதியாரின் பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
    • பா.ஜனதா சார்பில் மாவட்ட செயலாளர் வக்கீல் வெங்கடாஜலபதி உள்ளிட்டோர் சந்திப்பு பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

    நெல்லை:

    மகாகவி பாரதியாரின் 141- வது பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இதில் மாநில வழக்கறிஞர் பிரிவு இணை தலைவர் மகேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் உதயகுமார், சொக்கலிங்க குமார், கவி பாண்டியன், ஐ.என்.டி.யூ.சி. ஒருங்கிணைப்பாளர் கண்ணன், மண்டல தலைவர்கள் அய்யப்பன், கெங்காராஜ்,ராஜேந்திரன், வட்டார தலைவர்கள் கணேசன், காமராஜ், மாவட்ட நிர்வாகிகள் இலந்தை ராமகிருஷ்ணன்,ஆட்டோ அருள்ராஜ், மகேந்திரன், அனந்த பத்மநாபன், கிருஷ்ண மூர்த்தி, வர்த்தக காங்கிரஸ் ராஜகோபால்,மறுகால் குறிச்சி செல்ல பாண்டியன், வக்கீல் பினிக்ஸ், மகளிர் அணி மெட்டில்டா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    பா.ஜ.க.

    பா.ஜனதா சார்பில் மாவட்ட செயலாளர் வக்கீல் வெங்கடாஜலபதி என்ற குட்டி, நிர்வாகிகள் சுரேஷ், வேல் ஆறுமுகம் உள்ளிட்டோர் சந்திப்பு பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் ஏராளமான பா.ஜ.க.வினர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நெல்லை மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் நெல்லை சந்திப்பு பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

    இதில் மாநகர் மாவட்ட செயலாளர் துரைபாண்டியன், மாநகர இளைஞரணி செயலாளர் முத்துப்பாண்டி, மணிமாறன், மானூர் கிழக்கு ஓன்றிய செயலாளர் ஆதிபாண்டியன், மேலப்பாளையம் பகுதி தலைவர் டிக்முத்து, டவுன் பகுதி செயலாளர் சங்கர், பரமசிவபாண்டியன், ராஜா, மாணவரணி பாண்டி, பழனி, முத்துவளவன், சுரேஷ்பாண்டியன், ராஜன் வேளாளர், மாரியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்

    • எம்.ஜி.ஆர். படத்துக்கு அ.தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தினர்.
    • முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு தினம்.



    ஓ.பி.எஸ். அணி ஒன்றிய செயலாளர் முத்து முருகன் தலைமையில் எம்.ஜி.ஆர். படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

     ராமநாதபுரம்

    முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எம்.ஏ. முனியசாமி தலைமை யில் நகர் சார்பில் செயலாளர் பொறியாளர் பால் பாண்டியன் ஏற்பாட்டில் அரண்மனை முன்பு நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். படத்துக்கு மலர் தூவி, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

    எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் ரத்தினம், மாவட்ட அவைத் தலைவர் சாமிநாதன், அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து துறை துணைச் செயலாளர் ரத்தினம், ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் அசோக் குமார், நகர அவை தலைவர் ராமமூர்த்தி, வட்ட செயலாளர் ராம சேது, சார்பு அணி மாவட்ட செயலாளர்கள் சரவணகுமார் (தகவல் தொழில்நுட்ப பிரிவு), சேது பாலசிங்கம் (பேரவை), ஸ்டாலின் என்ற ஜெயசந்திரன் (இளை ஞரணி), செந்தில்குமார் (மாணவரணி), நகர் துணைச் செயலாளர் ஆரிப்ராஜா, இளைஞரணி துணை செயலாளர் செல்வராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம் மாவட்ட ஓ.பி.எஸ். அணி செயலாளர் தர்மர் வழிகாட்டுதலின்படி எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு நாள் ராமநாதபுரம் நகர செயலாளர் பாலசுப்பி ரமணியன் தலைமையில் நடந்தது.

    நகர் இளைஞர் பாசறை செயலாளர் பார்த்தசாரதி, ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் முத்து முருகன், கோட்டைசாமி, நிர்வாகிகள் முனிய சாமி, கோவிந்தராஜ், ராஜ்கு மார், செல்வம், சேகர், அறிவழகன், கணேசன், ஸ்ரீபாகன் மணிகண்டன், முத்துகிருஷ்ணன், அழகம்மாள், பிரியா, தொகுதி நிர்வாகி முத்துப் பாண்டி, மாவட்ட விவசாய பிரிவு மாரிமுத்து, மூத்த நிர்வாகி முத்துகிருஷ்ணன் உள்பட பலர் எம்.ஜி.ஆர். படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    ராமநாதபுரம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் முத்து முருகன் தலைமையில், ராமநாதபுரம் பாரதி நகரில் எம்.ஜி.ஆர். படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட அவைத் தலைவரும், ஒன்றிய முன்னாள் தலைவருமான ராஜேந் திரன், நாரணமங்கலம் ஊராட்சி செயலாளர் சுரேஷ், ராமநாதபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் கோட்டைச்சாமி, ராமநாத புரம் நகர் செயலாளர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய முன்னாள் கவுன்சிலர்கள் கழுகூரணி பூபதி, புத்தேந்தல் கல்யாணி, காருகுடி முத்துராமலிங்கம், சுப்புத்தேவன் வலசை ஊராட்சி செயலாளர் சோம சுந்தரம், தூளிவலசை கிளை செயலாளர் திருமுருகன், சக்கரக்கோட்டை ஊராட்சி உறுப்பினர் நல்லதம்பி உள்பட பலர் எம்.ஜி.ஆர். படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    • கொட்டில்பாடு குழந்தை ஏசு காலனியில் இருந்து மவுன ஊர்வலம் நடைபெற்றது.
    • கல்லறை தோட்டத்தில் மெழுகுவர்த்தி ஏந்தியும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

    கன்னியாகுமரி:

    இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடந்த 2004-ம் ஆண்டு கடலில் ஏற்பட்ட சுனாமி பேரலை கடற்கரை கிராமங்களை புரட்டி போட்டது.

    குமரி மாவட்டத்திலும் சுனாமி ஆழி பேரலை ஏற்படுத்திய கோர தாண்டவத்தில் ஏராளமானோர் பலியானார்கள். குளச்சல் பகுதியில் 414 பேர் சுனாமிக்கு இறந்தனர். அவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டன. அதே போல் கொட்டில்பாடு மீனவர் கிராமத்தில் பலியான 199 பேர் உடல்களும் ஒரே இடத்திலேயே அடக்கம் செய்யப்பட்டன.

    சுனாமியால் இறந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட இடங்களில் நினைவு ஸ்தூபிகளும் அமைக்கப்பட்டன. இங்கு ஆண்டு தோறும் டிசம்பர் 26-ந் தேதி, பலியானவர்களின் உறவினர்கள் மற்றும் பலர் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இந்த ஆண்டும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. கொட்டில்பாடு பகுதியில் உள்ள நினைவு ஸ்தூபியில் பலியானவர்களின் உறவினர்கள் மற்றும் மீனவ மக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    முன்னதாக இன்று காலை கொட்டில்பாடு குழந்தை ஏசு காலனியில் இருந்து மவுன ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    மவுன ஊர்வலம், நினைவு ஸ்தூபி வரை சென்றது. அங்கு மலர் தூவியும் மலர் வளையம் வைத்தும் ஊர்வலத்தில் வந்தவர்கள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து புனித அலெக்ஸ் சர்ச்சில், நினைவு திருப்பலி நடந்தது.

    பங்குத் தந்தை ராஜ் தலைமையில் பங்குந்தந்தைகள் சர்ச்சில், ஜேசுதாஸ், ஜிந்தோ ஆகியோர் திருப்பலியை நடத்தினர். இதிலும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கொட்டில்பாடு நினைவு ஸ்தூபியில் மலர் தூவியும், மலர் வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

    கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடற்கரையில் அமைந்துள்ள சுனாமி நினைவு ஸ்தூபியிலும் இன்று ஏராளமானோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பயிற்சி கலெக்டர் குணால் உள்ளிட்ட பலரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    மணக்குடி புனித அந்திரேயா ஆலயத்தில் சுனாமியால் பலியானவர்களின் நினைவாக இன்று காலை திருப்பலி நடந்தது. தொடர்ந்து அங்கிருந்து 500-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்கள் அங்குள்ள கல்லறை தோட்டத்தில் மெழுகுவர்த்தி ஏந்தியும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

    • சிக்கிம் மாநிலத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது
    • நிகழ்ச்சியானது புள்ளம்பாடி முன்னாள் படை வீரர் நல சங்கத் தலைவர் அமலதாஸ் தலைமையில் நடைபெற்றது.

    டால்மியாபுரம்:

    திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம் புள்ளம்பாடி அண்ணா சிலை அருகில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வடக்கு சிக்கிம் மாநிலத்தில் பயணத்தின் பொழுது உயிரிழந்த 16 ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் நிகழ்ச்சியானது புள்ளம்பாடி முன்னாள் படை வீரர் நல சங்கத் தலைவர் அமலதாஸ் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் மார்ட்டின் ஜோசப் மற்றும் முன்னாள் படை வீரர் நல சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

    • நேற்று காலை 10 மணி முதல் இன்று காலை 10 மணி வரை ரசிகர்கள், பொதுமக்கள் 24 மணி நேரம் பீலேவுக்கு அஞ்சலி செலுத்தினர்.
    • பீலே பிரேசில் அணிக்காக 3 உலக கோப்பையை (1958, 1962, 1970) வென்று கொடுத்துள்ளார்.

    சாண்டோஸ்:

    பிரேசில் கால்பந்தின் ஜாம்பவான் பீலே புற்று நோய் பாதிப்பால் கடந்த 29-ந்தேதி உயிரிழந்தார். அவரது இறப்பு பிரேசிலின் தேசிய துக்கமாக அனுசரிக்கப்பட்டது.

    பீலேயின் உடல் பிரேசில் நாட்டின் சாவ் பாலோ ஆஸ்பத்திரியில் இருந்து கொண்டு செல்லப்பட்டு சாண்டோஸ் நகரில் உள்ள விலா பெல்மிரோ ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டது.

    நேற்று காலை 10 மணி முதல் இன்று காலை 10 மணி வரை ரசிகர்கள், பொதுமக்கள் 24 மணி நேரம் பீலேவுக்கு அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்துவதற்காக லட்சக்கணக்கானோர் பெல் மிரோ ஸ்டேடியத்தில் குவிந்தனர். ஒருவர் ஒருவராக கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள்.

    அனைவரும் அஞ்சலி செலுத்திய பிறகு பீலேயின் உடல் அப்பகுதியில் உள்ள வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது. அங்குள்ள நெக்ரோ போல் எகுமெனிகா கல்லறை தோட்டத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

    பீலேயின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக ஏராளமான மக்கள் அங்கு குவிந்துள்ளனர்.

    பீலே பிரேசில் அணிக்காக 3 உலக கோப்பையை (1958, 1962, 1970) வென்று கொடுத்துள்ளார். 12 கோல்கள் உலக கோப்பையில் அடித்துள்ளார்.

    • நேற்று பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் மூன்று சுற்றில் பல்வேறு மாடுகளை அடக்கி சிறந்த வீரராக வலம் வந்த நிலையில் 4-வது சுற்றில் மாடு முட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
    • சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு இன்று நெல்லை பொது நல அமைப்புகள் சார்பில் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    நெல்லை:

    மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியை சேர்ந்தவர் அரவிந்தராஜ். இவர் நேற்று பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் மூன்று சுற்றில் பல்வேறு மாடுகளை அடக்கி சிறந்த வீரராக வலம் வந்த நிலையில் 4-வது சுற்றில் மாடு முட்டி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மறைவையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு இன்று நெல்லை பொது நல அமைப்புகள் சார்பில் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த அமைப்பை சேர்ந்த அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர். இதில் தமிழர் விடுதலைக் களம் மாவட்ட செயலாளர் முத்துக்குமார், வக்கீல்கள் மணிகண்டன், பிரபு ஜீவன் மற்றும் மகேஷ், மாரி, பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மொழிப்போர் தியாகிகளுக்கு அ.ம.மு.க. அஞ்சலி செலுத்தப்பட்டது.
    • மாநில இளைஞரணி இணைச் செயலாளர் முருகன், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் விமல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தியாகிகள் பூங்கா அருகே கண்ணங்குடி ஒன்றிய தலைவரும், மாவட்ட மாணவரணி செயலாள ருமான சித்தானூர் சரவணன், மெய்யப்பன் கார்த்திக் தலைமையில் அ.ம.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி மொழிப்போர் தியாகிகள் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மாநில இளைஞரணி இணைச் செயலாளர் முருகன், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் விமல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் மாநில பொறியாளர் அணி காரைக்குடி சரவணன், தேவகோட்டை நகர செயலாளர் கமலக்கண்ணன், காரைக்குடி நகர செயலாளர் அஸ்வின், தேவகோட்டை ஒன்றிய கவுன்சிலர் கணேசன், வடக்கு ஒன்றிய செயலாளர் சங்கர், தெற்கு ஒன்றிய செயலாளர் அம்சகண்ணன், நகர பேரவை செயலாளர் தில்லைராஜா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜம்செல்வா, கண்ணங்குடி ஒன்றிய தகவல் நுட்ப செயலாளர் தாய்மடி செந்தில், அருண், வன்மீகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மற்ற 4 கோவில்களுக்கும் எத்தனை வீணான செலவுகள் செய்யப்படும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
    • தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின்கீழ் ஒரு வேளை பூஜைக்குக்கூட வழியில்லாமல் ஏராளமான கோவில்கள் பாழடைந்த நிலையில் உள்ளன.

    திருப்பூர்:

    தமிழகத்தில் மகா சிவராத்திரி விழாக்களுக்கு பக்தா்கள் காணிக்கையாக செலுத்திய பணத்தை அதிகாரிகள் செலவழிக்கக்கூடாது என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

    இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    தமிழகத்தில் 5 பெரு நகரங்களில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் மகா சிவராத்திரி விழாவைக் கொண்டாட முடிவெடுத்துள்ளது வரவேற்கத்தக்கது. இந்த விழாவை நடத்துவதற்காக செல்லும் அமைச்சா்கள், அரசுத் துறை அதிகாரிகளுக்கு விமான பயணக் கட்டணத் தொகையாக ரூ.25 ஆயிரம் திருநெல்வேலி நெல்லையப்பா் கோயில் நிா்வாகம் செலவிட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆகவே மற்ற 4 கோவில்களுக்கும் எத்தனை வீணான செலவுகள் செய்யப்படும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    கோவில்களுக்கு பக்தா்கள் காணிக்கையாக செலுத்திய தொகையை அநாவசியமாக செலவழிப்பது ஏற்புடையதல்ல. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின்கீழ் ஒரு வேளை பூஜைக்குக்கூட வழியில்லாமல் ஏராளமான கோவில்கள் பாழடைந்த நிலையில் உள்ளன. இந்த நிலையில் இத்தகைய வீண் செலவுகள் தேவையா என்பது குறித்து இந்து சமய அறநிலையத் துறை சிந்தித்துப் பாா்க்க வேண்டும்.மேலும் மகா சிவராத்திரி விழாவுக்கு கோவில் நிதியைப் பயன்படுத்தாமல் அனாவசியச் செலவுகள் இல்லாமல் நன்கொடையாளா்கள் மூலமாக முறையான கணக்குகளுடன் செலவு செய்ய இந்து சமய அறநிலையத் துறை முன்வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தியாகிகள் தினத்தையொட்டி இன்று காலை சரியாக 11 மணிக்கு சென்னையில் உள்ள அனைத்து சிக்னல்களும் நிறுத்தப்பட்டன.
    • அஞ்சலி செலுத்திய பிறகு சிக்னல்கள் வழக்கம் போல் இயங்கியதும் வாகன ஓட்டிகள் சென்றனர்.

    சென்னை:

    இந்திய சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு உயிர் தியாகம் செய்த சுதந்திர போராட்ட வீரர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30-ந் தேதி தியாகிகள் தினம் கொண்டாடப்படுகிறது.

    உயிர் தியாகம் செய்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று காலை 11 மணி முதல் 11.02 மணி வரை 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    அந்த நேரத்தில் சென்னை நகரின் போக்குவரத்து 2 நிமிடங்கள் நிறுத்தப்படும் என்றும் இதற்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு தரும்படியும் போலீசார் ஏற்கனவே கேட்டுக் கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து தியாகிகள் தினத்தையொட்டி இன்று காலை சரியாக 11 மணிக்கு சென்னையில் உள்ள அனைத்து சிக்னல்களும் நிறுத்தப்பட்டன. அனைத்து வாகனங்களும் அப்படியே நின்றன. வாகன ஓட்டிகள் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.

    பின்னர் சிக்னல்கள் வழக்கம் போல் இயங்கியதும் வாகன ஓட்டிகள் சென்றனர்.

    ஸ்பென்சர் சிக்னல், வேப்பேரி, அண்ணாசிலை, சென்ட்ரல், எழும்பூர் பாத்தியன் சாலை, தேனாம்பேட்டை, புரசைவாக்கம் டவுட்டன், அடையாறு, கோயம்பேடு உள்ளிட்ட அனைத்து சிக்னல்களிலும் வாகன ஓட்டிகள் 2 நிமிடம் மறைந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி சென்றனர்.

    • கருப்பு பேட்ஜ் அணிந்து மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
    • காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் குணமடைய வேண்டி பிரார்த்தனை.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த அண்டர்காடு அரசு உதவி பெறும் சுந்தரேசவிலாஸ் தொடக்கப்பள்ளியில் சிரியா மற்றும் துருக்கி நாடுகளில் நிலநடுக்கத்தால் உயிரிழந்த பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

    மேலும், நிலநடுக்கத்தால் காயமடைந்து மருத்துவம னையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் குணமடைய வேண்டி பிரார்த்தனை நடைபெற்றது.

    இதில் பள்ளி ஆசிரியர் வசந்தா, ஓய்வு பெற்ற ஆசிரியர் சித்திரவேல் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

    • மகா பெரியவரின் உருவச்சிலைக்கு அணிவிக்கும் வகையில் வைரக்கற்கள் பதிக்கப்பட்ட தங்க நகையை காணிக்கையாக வழங்கி இருக்கிறார்கள்.
    • உருவச்சிலைக்கு சிறப்பு அபிஷேகமும், வைரக்கல் பதித்த தங்ககவசமும் அணிவித்து சிறப்பு தீபாராதனைகளும் நடைபெறும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் சங்கர மடத்தில் உள்ள மகா பெரியவர் திருஉருவச் சிலைக்கு வெளி நாட்டு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய வைரக்கல் பதித்த தங்க கை காணிக்கையாக செலுத்தி வழிபாடு செய்யப்படுகிறது.

    இதுதொடர்பாக காஞ்சி சங்கர மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச ஐயர் கூறியதாவது:-

    காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 70-வது பீடாதிபதி யாக உள்ள ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், தற்போது ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் முகாமிட்டுள்ளார். இவரது ஜெயந்தி உற்சவம் வருகிற 16-ந்தேதி தொடங்கி வரும் 18-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    இந்த 3 நாட்களும் வேதபாராயணம், ஆன்மீகச் சொற்பொழிவுகள், நாம சங்கீர்த்தனம், இன்னிசைக் கச்சேரிகள் ஆகியன சங்கர மடத்தில் உள்ள கலையரங்கில் நடைபெற உள்ளது. வருகிற 18-ந் தேதி விஜயேந்திரரின் பிறந்த நாளும் அதே நாளில் சிவராத்திரி விழாவும் சங்கர மடத்தில் கொண்டாடப்படுகிறது.

    அன்றைய நாளில் சங்கர மடத்தின் வெளிநாட்டு பக்தர்கள் பலரும் ஒன்றிணைந்து மகா பெரியவரின் உருவச்சிலைக்கு அணிவிக்கும் வகையில் வைரக்கற்கள் பதிக்கப்பட்ட தங்க நகையை காணிக்கையாக வழங்கி இருக்கிறார்கள்.

    காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் உள்ள ஆதிசங்கரர் சந்நிதியில் இருந்து வைரக்கை பக்தர்களால் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக சங்கர மடத்துக்கு வந்து சேரும்.

    இதன் பின்னர் சங்கர மடத்தில் உள்ள பிருந்தாவனத்தில் மகாபெரியவர் உருவச்சிலைக்கு சிறப்பு அபிஷேகமும், வைரக்கல் பதித்த தங்ககவசமும் அணிவித்து சிறப்பு தீபாராதனைகளும் நடைபெறும்.

    விஜயேந்திரர் ஜெயந்தி நாளன்று அவர் முகாமிட்டுள்ள விசாகப்பட்டினத்திலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×