search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Truck Strike"

    • தண்டையார்பேட்டை, எண்ணூரில் உள்ள ஐ.ஓ.சி. யூனிட் முன்பாக 200-க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் நிறுத்தப்பட்டன.
    • பொது மக்களுக்கு பெட்ரோல்-டீசல் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

    சென்னை:

    சென்னை மற்றும் ஆசனூர் டேங்கர் லாரி பெட்ரோலியம் உரிமையாளர்கள் நல சங்கத்தின் சார்பாக அடையாள வேலை நிறுத்தம் இன்று நடந்தது. இந்தியன் ஆயில் நிறுவனத்தினரின் சரவாதிகார போக்கை கண்டிப்பதாக கூறி லாரி ஒப்பந்ததாரர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் தண்டையார்பேட்டை, எண்ணூரில் உள்ள ஐ.ஓ.சி. யூனிட் முன்பாக 200-க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் நிறுத்தப்பட்டன.

    லாரிகள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டதால் முன்கூட்டியே ஐ.ஓ.சி. எண்ணெய் டீலர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இருப்பு வைக்க நிறுவனம் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது. இதனால் பொது மக்களுக்கு பெட்ரோல்-டீசல் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

    வேலை நிறுத்தம் குறித்து சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    இது அடையாள வேலை நிறுத்தம் தான். 15 நாட்களுக்குள் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றா விட்டால் வருகிற 26-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறும். பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவன லாரிகளும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புதுவையில் லாரி ஸ்டிரைக் நடைபெறுவதால் நாள் ஒன்றுக்கு ரூ. 150 கோடி வர்த்தக பாதிப்பு ஏற்படும் என லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். #LorryStrike
    புதுச்சேரி:

    டீசல் விலை உயர்வு, தனி நபர் காப்பீட்டு தொகை உயர்வு, சுங்கவரி கட்டணம் உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பாக இன்று நாடு முழுவதும் லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது.

    புதுவையிலும் இன்று காலை 6 மணி முதல் லாரி ஸ்டிரைக் தொடங்கியது. இதனால் புதுவையில் உள்ள 3 ஆயிரத்துக்கும் அதிகமான லாரிகள் இயக்கப்படவில்லை.

    உள்ளூர் லாரிகளும், வெளியூரில் இருந்து வந்த லாரிகளும் மேட்டுப்பாளையத்தில் உள்ள போக்குவரத்து முனையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    லாரிகள் நிறுத்தம் காரணமாக நாள் ஒன்றுக்கு வர்த்தக இழப்பாக ரூ.150 கோடி ஏற்படும் என லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். #LorryStrike

    ×