search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "turnout rises"

    பாராளுமன்ற மூன்றாவது கட்ட தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், காலை 10 மணி நிலவரப்படி 10.29 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. #LokSabhaElections2019 #PollingPercentage
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மூன்றாவது கட்ட தேர்தல் இன்று தொடங்கியது. கேரளா, கர்நாடகா, குஜராத், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 116 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு மற்றும் அமித்ஷா போட்டியிடும் காந்தி நகர் தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடக்கிறது.

    பொதுமக்கள் ஆர்வத்துடன் சென்று வாக்களித்து வருகின்றனர்.  அரசியல் கட்சிகளின் தலைவர்கள் காலையிலேயே தங்கள் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்கினை பதிவு செய்தனர். காலை 10 மணி நிலவரப்படி சராசரியாக 10.29 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. அசாமில் 12.36 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

    பீகாரில் 12.64 சதவீதம், உத்தர பிரதேசத்தில் 10.36 சதவீதம், கோவாவில் 11.70 சதவீதம், குஜராத்தில் 9.99 சதவீதம், திரிபுராவில் 5.83 சதவீதம், மேற்கு வங்காளத்தில் 16.85 சதவீதம், சத்தீஸ்கரில் 12.58 சதவீதம், மகாராஷ்டிராவில் 6.97 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. ஜம்மு காஷ்மீரில் குறைந்தபட்சமாக 1.59 சதவீத வாக்குகளே பதிவாகியிருந்தன.

    பிரதமர் மோடி அகமதாபாத்தின் ராணிப் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அவரது தாயார் ஹீராபென்மோடி ரெய்சானில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.



    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் திருவனந்தபுரம் வேட்பாளருமான சசி தரூர், திருவனந்தபுரத்தில் உள்ள பூத்தில் ஓட்டு போட்டார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் கும்மணம் ராஜசேகரன், இடது ஜனநாயக முன்னணி சார்பில் திவாகரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். #LokSabhaElections2019 #PollingPercentage
    ×