என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » tuticorin sterlite protest
நீங்கள் தேடியது "Tuticorin Sterlite Protest"
நடிகர் விஜய் பிறந்தநாள் நாளை மறுநாள் கொண்டாடப்பட இருக்கும் நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்னரே விஜய் ரசிகர்கள் விஜய்க்கு போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். #HBDThalapathy
நாளை மறுநாள் (ஜூலை 22-ஆம் தேதி) நடிகர் விஜய் தனது பிறந்தநாளை கொண்டாடவிருக்கும் நிலையில், அவரது ரசிகர்கள் சில நாட்களுக்கு முன்னதாகவே அவரது பிறந்தநாள் கொண்டாட்டங்களை ஆரம்பித்து விட்டனர்.
விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக, விஜய் 62 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு நாளை மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு வெளியாகியது முதலே அதற்கான கொண்டாட்டங்களிலும் விஜய் ரசிகர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரத்தில் விஜய் பிறந்தநாளுக்கும் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
விஜய் பிறந்தநாளுக்கு இன்னும் ஒருநாள் மட்டுமே இருக்கும் நிலையில், மதுரை விஜய் ரசிகர்கள் விஜய்யை அரசியலுக்கு அழைக்கும் வகையில் பல்வேறு வகையான போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றனர்.
அந்த போஸ்டர்களில், ` விவசாயிகளின் தமிழ்மகனே தமிழ்நாட்டை ஆள வருக..., சாமானியர்களின் சாமியே! உங்களதான் நம்புது இந்த பூமியே!!. 2021 சட்டமன்றத்தில் உங்கள் குரல் தமிழக மக்களின் உரிமைக்குரல் என்றும், விஜய்யை தெய்வம் என்றும் பல்வேறு போஸ்டர்கள் சமூக வலைதளங்களை கலக்கி வருகின்றன. #HappyBirthdayThalapathy #HBDThalapathy #VijayBirthday #Vijay62
விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் நிலையில், தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று நடிகர் விஜய் தவிர்த்துவிட்டதாக கூறப்படுகிறது. #VijayBirthday
நடிகர் விஜய்யின் பிறந்தநாள் (ஜூலை 22-ஆம் தேதி) நெருங்கி வரும் நிலையில், அவரது ரசிகர்கள் முன்னதாகவே பிறந்தநாள் கொண்டாட்டங்களை திட்டமிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த ஆண்டு தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளிடம் நடிகர் விஜய் கூறியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்ட கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் இயல்பு நிலைக்கு திரும்பாத நிலையில், தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று விஜய் கூறியிருக்கிறாராம்.
சமீபத்தில் தூத்துக்குடி சென்ற விஜய் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் தற்போது, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி 62 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் அமெரிக்கா செல்ல இருக்கின்றனர். பிறந்தநாளன்று விஜய் இந்தியாவில் இருக்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது.
விஜய் பிறந்தநாளுக்கு பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கும் நிலையில், பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட வேண்டாம் என்று படக்குழுவினரிடம் விஜய் கேட்டிருக்கிறாராம். இதன்மூலம் பர்ஸ்ட் லுக் வெளியாகுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார், பழ.கருப்பையா, ராதாரவி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். #VijayBirthday #Thalapathy62 #Vijay62
தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்தில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக சிவகங்கை, காரைக்குடியில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை:
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் 13 பேர் இறந்துபோனார்கள். இதையொட்டி தமிழகம் முழுவதும் போலீசார் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்தநிலையில் சிவகங்கையில் மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த கணேசன்(வயது 40), மாரிமுத்து(45), அழகர்சாமி(48), ராஜேந்திரன்(45), சுரேஷ்கண்ணன்(46), பால முருகன்(40), தங்கவேல்(50) ஆகிய 7 பேரை சிவகங்கை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) மோகன் கைது செய்துள்ளார்.
இதேபோன்று காரைக்குடியில் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த கல்யாணகுமார், முத்துமாணிக்கம் ஆகிய 2 பேரை முன்எச்சரிக்கை நடவடிக்கையாக வடக்கு போலீசார் கைதுசெய்தனர்.

×

X