என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » two children
நீங்கள் தேடியது "two children"
இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களை அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது என சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. #SCdismisses #twochildnorm #fieldcandidates #SCdismissespil
புதுடெல்லி:
பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி இரு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் பஞ்சாயத்து உறுப்பினர் மற்றும் தலைவர் பதவிகளுக்கு போட்டியிட முடியாது என உள்ளது. அதே நேரத்தில் இரு குழந்தைகள் உள்ளவர்கள் உறுப்பினர்களாக அல்லது தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் மூன்றாவது குழந்தை பிறந்தால் அவர்கள் பதவி இழக்க நேரிடும் எனவும் அச்சட்டத்தில் உள்ளது.
அரசு வேலைவாய்ப்பு, அரசாங்க நிதியுதவி மற்றும் மானியங்களுக்கும் இந்த அளவுகோலை வைக்க வேண்டும். மூன்று குழந்தைகளை பெற்றவர்கள் தேர்தல்களில் நிற்க தடை விதிப்பதுடன், அவர்களின் வாக்குரிமையும் பறிக்கப்பட வேண்டும் என தனது மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வின் முன்னர் இன்று விசாரணைக்கு வந்தபோது மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். #SCdismisses #twochildnorm #fieldcandidates #SCdismissespil

இந்நிலையில், இந்த சட்டவிதியை மாநில சட்டசபை தேர்தல்கள் மற்றும் பாராளுமன்ற தேர்தலிலும் அமல்படுத்த வேண்டும். இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களை அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது என பாஜக பிரமுகரும் வழக்கறிஞருமான அஷ்வினி உபாத்யாய் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
அரசு வேலைவாய்ப்பு, அரசாங்க நிதியுதவி மற்றும் மானியங்களுக்கும் இந்த அளவுகோலை வைக்க வேண்டும். மூன்று குழந்தைகளை பெற்றவர்கள் தேர்தல்களில் நிற்க தடை விதிப்பதுடன், அவர்களின் வாக்குரிமையும் பறிக்கப்பட வேண்டும் என தனது மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வின் முன்னர் இன்று விசாரணைக்கு வந்தபோது மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். #SCdismisses #twochildnorm #fieldcandidates #SCdismissespil
கொச்சி அருகே கோவில் குளத்தில் பள்ளி வேன் பாய்ந்து 2 குழந்தைகள், ஆயா பலியாகினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட டிரைவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொழிஞ்சாம்பாறை:
கேரள மாநிலம் கொச்சி மாவட்டம் மரடு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஜித் நாயர் (வயது 42). இவரது மனைவி பிரியா (38). இவர்களது மகன் ஆதித்தியன் (4½).
இதே பகுதியை சேர்ந்த சனல்குமார் மற்றும் ஸ்மிதா மகள் வித்யலட்சுமி (5). இவர்கள் 2 பேரும் அருகில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் யூ.கே.ஜி. படித்து வந்தனர்.
நேற்று பள்ளி வேனில் ஆதித்தியனும், வித்யலட்சுமியும் அழைத்துச் செல்லப்பட்டனர். பள்ளி முடிந்ததும் மீண்டும் குழந்தைகளை அவரவர் வீட்டில் விட வேனில் ஏற்றப்பட்டனர்.
வேனை அனில்குமார் (45) ஓட்டினார். ஆதித்தியன், வித்யலட்சுமி உள்பட மேலும் 6 குழந்தைகள் மற்றும் பள்ளி ஆயா லதா உன்னி ஆகியோர் இருந்தனர். வேன் சுமார் அரை கி.மீட்டர் தூரம் வந்ததும் வேன் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
வேனில் இருந்த குழந்தைகள் அலறி சத்தம்போட்டனர். அங்குள்ள பகவதியம்மன் கோவில் குளத்தில் வேன் பாய்ந்தது. இந்த குளம் சேறு நிறைந்த குளமாகும். சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து வேனை பார்த்தபோது வேன் சேற்றில் மூழ்க தொடங்கியது.
இதில் குழந்தைகள் ஆதித்தியன், வித்யலட்சுமி மற்றும் பள்ளி ஆயா லதா உன்னி ஆகியோர் குளத்தில் மூழ்கி பலியானார்கள். பலியான 3 பேரின் உடல்கள் எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. டிரைவர் அனில்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வேன் கண்ணாடியை உடைத்து 6 குழந்தைகளை மீட்டனர். இதனிடையே கொச்சி போலீஸ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். படுகாயங்களுடன் மூழ்கி கொண்டிருந்த டிரைவர் அனில்குமாரை மீட்டனர்.
இதில் குழந்தைகள் ஆதித்தியன், வித்யலட்சுமி மற்றும் பள்ளி ஆயா லதா உன்னி ஆகியோர் குளத்தில் மூழ்கி பலியானார்கள். பலியான 3 பேரின் உடல்கள் எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. டிரைவர் அனில்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
×

X