search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "UCL"

    யூரோ சாம்பியன்ஸ் லீக் அரையிறுதி 2-வது லெக்கில் பார்சிலோனாவை 4-0 என துவம்சம் செய்து வெளியேற்றி 2-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது லிவர்பூல். #UCL
    ஐரோப்பா சாம்பியன்ஸ் லீக் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஒரு ஆட்டத்தில் பார்சிலோனா - லிவர்பூல் அணிகளும், மற்றொரு அரையிறுதியில் அஜாக்ஸ் - டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிகளும் பலப்பரீட்சை நடத்தின.

    முதல் லெக்கில் லிவர்பூல் அணிக்கெதிராக பார்சிலோனா, அதன் சொந்த மைதானத்தில் 3-0 என வெற்றி பெற்றிருந்தது. இதனால் லிவர்பூல் அணி 2-வது லெக்கில் 4 கோல்களுக்கு மேல் அடித்து வெற்றி பெற்றால்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நிலை ஏற்பட்டது.



    இந்நிலையில் நேற்று நள்ளிரவு 2-வது லெக் லிவர்பூல் அணிக்கு சொந்தமான அன்பீல்டு மைதானத்தில் நடைபெற்றது. ஆட்டம் தொடங்கியது முதலே சொந்த மைதான ரசிகர்கள் ஆரவாரத்தோடு லிவர்பூல் வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    ஆட்டத்தின் 7-வது நிமிடத்தில் பார்சிலோனா பின்கள வீரர்களை ஏமாற்றி டிவோக் ஒரிஜி முதல் கோலை பதிவு செய்தார். அதன்பின் பார்சிலோனா வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடினார்கள். தொடர்ந்து லிவர்பூல் கோல் எல்லைக்குள் பந்தை கடத்திக் கொண்டே இருந்தனர். பெரும்பாலான வாய்ப்புகளை லிவர்பூல் கோல்கீப்பர் தடுத்துவிட்டார்.



    அதேபோல் லிவர்பூல் வீரர்களும் கடுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் பார்சிலோனா கோல் எல்லைக்குள்ளும் பந்துகள் சென்ற வண்ணம் இருந்தனர். பார்சிலோனா கோல் கீப்பர் படாதபாடு பட்டு பந்துகளை தடுத்தார். இதனால் முதல் பாதி நேர ஆட்டத்தில் மேற்கொண்டு கோல்கள் அடிக்கவில்லை. ஆகவே, 1-0 என லிவர்பூல் முன்னிலைப் பெற்றிருந்தது.

    2-வது பாதி நேரம் ஆட்டம் தொடங்கியதும் லிவர்பூல் வீரர்கள் விஸ்வரூபம் எடுத்தனர். 54-வது நிமிடத்தில் விஜ்னால்டம் கோல் அடித்தானர். அடுத்த 2-வது நிமிடத்தில் சூப்பரான ஹெட்டர் கோல் அடித்தார். மூன்று நிமிடத்திற்குள் இரண்டு கோல்கள் அடித்து பார்சிலோனாவுக்கு அதிர்ச்சி அளித்தனர்.

    இதனால் லிவர்பூல் 3-0 என முன்னிலைப் பெற்றிருந்தது. இந்த ஸ்கோருடன் ஆட்டம் முடிந்தால் போட்டி வெற்றித் தோல்வியின்று முடியும் என்பதால் லிவர்பூல் வீரர்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.

    சுமார் 23 நிமிடங்கள் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 79-வது நிமிடத்தில் லிவர்பூல் அணிக்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. கார்னர் பகுதியில் பந்தை வைத்த வீரர் அதை அடிக்காமல் நகர்ந்து வந்தார். இதனால் அவர் பந்தை அடிக்கமாட்டார் என்று பார்சிலோனா வீரர்கள் சற்று கவனத்தை சிதறவிட, மின்னல் வேகத்தில் திரும்பி வந்து பந்தை உதைத்தார்.



    அப்போது கோல் எல்லை அருகில் நின்றிருந்த ஒரிஜி அதை கோலாக்கினார். இதனால் லிவர்பூல் 4-0 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் 11 நிமிடங்கள் போராடியும் பார்சிலோனாவால் கோல் அடிக்க இயலவில்லை. இதனால் இரண்டு லெக்கையும் கணக்கிட்டு லிவர்பூல் 4-3 என பார்சிலோனாவை வீழ்த்தி 2-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

    கடந்த ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட் அணியிடம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

    டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிக்கெதிரான முதல் லெக்கில் அஜாக்ஸ் 1-0 என வெற்றிருந்தது. இரு அணிகளுக்கு இடையிலான 2-வது லெக் இன்று நள்ளிரவு நடக்கிறது.
    கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடிய யுவான்டஸை 2-1 என வீழ்த்தி அஜாக்ஸ் அரையிறுதிக்கு முன்னேறி சாதனைப் படைத்துள்ளது. #UCL
    ஐரோப்பிய நாடுகளில் உள்ள முன்னணி கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் ஆண்டுதோறும் சாம்பியன்ஸ் லீக் தொடர் நடைபெற்று வருகிறது.

    2018-19 சீசனுக்கான காலிறுதி ஆட்டங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. காலிறுதிக்கு முன்னேறிய அணிகள், தங்களுடைய எதிரணியுடன் சொந்த மைதானம் மற்றும் எதிரி மைதானம் என தலா ஒருமுறை மோத வேண்டும். இரண்டு போட்டிகளிலும் எந்த அணி அதிக கோல்கள் அடித்துள்ளதோ? அந்த அணி வெற்றி பெற்றதாக கருதப்படும்.

    ஒரு காலிறுதியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடும் யுவான்டஸ் (இத்தாலி) - அஜாக்ஸ் (நெதர்லாந்து) அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஜாக்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் காலிறுதி லெக்கில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தன. இதனால் போட்டி டிராவில் முடிந்தது.



    2-வது லெக் யுவான்டஸ் அணிக்கு சொந்தமான மைதானத்தில் நேற்று நள்ளிரவு நடைபெற்றது. 28-வது நிமிடத்தில் யுவான்டஸின் நட்சத்திர வீரரான ரொனால்டோ கோல் அடித்தார். இதனால் யுவான்டஸ் 1-0 என முன்னிலைப் பெற்றது. ஆனால் 34-வது நிமிடத்தில் அஜாக்ஸ் அணியின் டோனி வான் டி பீக் பதில் கோல் அடித்தார். இதனால் 2-வது முதல் பாதி நேரம் ஆட்டத்தில் இரண்டு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்தது.



    2-வது பாதி நேரத்தில் ஆட்டத்தின் 67-வது நிமிடத்தில் அஜாக்ஸ் அணியின் மத்திஜ்ஸ் டி லிக்ட் கோல் அடிக்க அஜாக்ஸ் 2-1 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் யுவான்டஸ் அணி போராடியது. ஆனால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் அஜாக்ஸ் இரண்டு லெக்கிலும் சேர்த்து யுவான்டஸை 3-2 என வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
    ×