என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Udayanidhi Stalin"

    • தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க மதுரை வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • 1000-த்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் தி.மு.க. கொடியுடன் வரவேற்பு அளித்தனர்.

    அவனியாபுரம்

    முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜையையொட்டி பசும்பொன்னில் உள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக சேலத்தில் இருந்து தனி விமானம் மூலம் தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் மதுரை வந்தார். விமான நிலையத்தில் உதயநிதி ஸ்டாலினை அமைச்சர்கள் பி.மூர்த்தி, சாத்தூர் ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி, ராஜ கண்ணப்பன், பெரிய கருப்பன், தங்கம் தென்னரசு, எம்.எல்.ஏ.க்கள் கோ.தளபதி, சோழவந்தான் வெங்கடேசன், மாவட்ட செயலாளர் மணிமாறன், இளைஞரணி ராஜா, மாணவரணி மருதுபாண்டி, அதலை செந்தில்குமார், போஸ், முத்தையா, ஈஸ்வரன், சசிகுமார், வேட்டையன், விமல், ரோகினி, பொம்மதேவன் உள்பட 1000-த்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் தி.மு.க. கொடியுடன் வரவேற்பு அளித்தனர்.

    தையொட்டி விமான நிலையத்தில் துணை ஆணையாளர் பெருமாள் ராமானுஜம் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • மண்டபம் ஒன்றிய தி.மு.க.செயலாளர் பிரவீன் தலைமையில் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • மேற்கு ஒன்றிய தி.மு.க, செயலாளர் பிரவீன் தலை மையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    ராமநாதபுரம்

    பசும்பொன்னில் தேவர் ஜெயந்திவிழா மற்றும் குருபூஜையையொட்டி முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வருகை தந்த இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., அமைச்சர்கள் ஆகியோர்களுக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் காதர்பாட்சா முத்துராம லிங்கம் எம்.எல்.ஏ. ஆணைக்கிணங்க மண்டபம் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் பிரவீன் தலைமையில் மாவட்ட நிர்வாகம் அறிவித்த வழிமுறைகளை பின்பற்றி ஏராளமான கட்சி நிர்வாகிகள் காரில் சென்று உற்சாக வரவேற்பளித்தனர்.

    முன்னதாக அகஸ்தியர் கூட்டத்தில் அமைந்துள்ள தேவர் சிலைக்கு மண்டபம் மேற்கு ஒன்றிய தி.மு.க, செயலாளர் பிரவீன் தலை மையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இதில் மாவட்ட கவுன்சி லர்கள் கவிதா கதிரேசன், ரவிச்சந்திர ராமவன்னி, பொதுக்குழு உறுப்பினர் தண்டபானி, ஒன்றிய கவுன்சிலர் சுகந்தி, கிளை செயலாளர்கள் கிருஷ்ணா, ராக்கு, மகேசுவரன், சங்கர், சாமி, சுகுன சீலன், சோமசுந்தரம், கோட்டைசாமி, செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • இது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுடைய ஆட்சி.
    • இங்கு வரும் போது தமிழில் பேசுவார். ஆனால் தமிழுக்கு எதுவும் செய்யவில்லை.

    சென்னை ஆலந்தூரில் நடைபெற்ற திராவிட மாடல் பயிற்சி பாசறைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளதாவது:

    இங்கே பேசியவர்கள் சொன்னார்கள், பாராளுமன்ற தேர்தலே நான் பிரச்சாரம் செய்ததால் வெற்றி பெற்றோம் என்று. மன்னிக்கவும் அதற்கு நான் காரணம் அல்ல, வெற்றிக்கெல்லாம் ஒரே காரணம் கலைஞர். கலைஞர் வழியில் வந்த நமது தலைவர். அந்த வெற்றி கண்டிப்பாக தொடரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

    மோடி இங்கு வரும் போது தமிழில் பேசுவார். திருக்குறள் சொல்லுவார். ஆனால் தமிழுக்கு எதுவும் செய்யவில்லை, இந்தியை கொண்டு வந்து திணிப்பார். நான் மோடியிடம் சொல்ல விரும்புகிறேன், இங்கு நடந்து கொண்டிருப்பது நீங்கள் நினைக்கும் மாதிரி எடப்பாடி பழனிசாமி ஆட்சியோ, ஓ.பன்னீர் செல்வம் ஆட்சியோ கிடையாது, இது திராவிட மாடல் ஆட்சி. இது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுடைய ஆட்சி.

    இங்கிருந்து போய் காசியில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை நடத்துகிறார். தமிழ் நாட்டிற்கு இதுவரை என்ன செய்திருக்கீங்க? ஒன்னுமே செய்யல. நீங்கள் ஒவ்வொருமுறையும் எங்களது மாநில உரிமைகளை பறிக்கும் போது அதற்கு குரல் கொடுக்கிற, இந்தியாவிலேயே உங்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கின்ற தலைவர் தளபதி மட்டும்தான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது.
    • ஆதரவற்ற 500 பேர்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்குதல், இறகு பந்து போட்டிகள் உள்ளிட்ட 4,500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது.

    அதன்படி ராதாபுரம் தொகுதிக்கு திசையன்விளையிலும், நாங்குநேரி தொகுதிக்கு களக்காட்டிலும், அம்பாச முத்திரம் தொகுதிக்கு சேரன்மகாதேவியிலும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகிறது. மேலும் வருகிற 25-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை 32 இடங்களில் தி.மு.க. கொடியேற்றி இனிப்பு வழங்குதல். முதியோர் இல்லங்களில் மதிய உணவு, ரத்ததான முகாம், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம், விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல், பார்வையற்றோர் பள்ளியில் மதிய உணவு, ஆதரவற்ற 500 பேர்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்குதல், இறகு பந்து போட்டிகள் உள்ளிட்ட 4,500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிகழ்ச்சிகள் எனது தலைமையில் எம்.பி., மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் முன்னிலையில் நடத்தப்படுகிறது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • கூடலூர் காந்தி திடலில் கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது.
    • முதியோர் இல்லத்தில் கேக் வெட்டி சிற்றுண்டி வழங்கப்பட்டது.

    ஊட்டி,

    தி.மு.க இளைஞர் அணி மாநில செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளைமுன்னிட்டு கூடலூர் நகர தி.மு.க. சார்பில் நகர செயலாளர் இளஞ்செழியன் தலைமையில் கூடலூர் காந்தி திடலில் கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. கூடலூர் நகர இளைஞரணி ஏற்பாட்டில் காந்தி திடலில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதேபோல் ராமகிருஷ்ணா முதியோர் இல்லத்தில் கேக் வெட்டி சிற்றுண்டி வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து கூடலூர் நகர தி.மு.க சார்பில் அனைத்து வார்டுகளிலும் கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது.ஜீவன் ரக்க்ஷாபவன் குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு மதிய அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இதில் அவைதலைவர் செல்வராஜ், துணைச் செயலாளர் ஜபருல்லா ஜெயக்குமார், மாவட்ட பிரதிநிதி ராசாக் மணிகண்டன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ரெனால்ட் பால்ராஜ், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் தங்கராஜ், முன்னாள் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் சகாயநாதன், கூடலூர் நகர இளைஞரணி விஜயகுமார், ராமன், நிர்மல், செல்லதுரை, நியாஸ், அபுதாகீர், சிவக்குமார், தாகீர், நகரமன்ற உறுப்பினர்கள் சத்தியசீலன், வெண்ணிலா, இளங்கோ, தனலக்ஷ்மி, ஆபிதா, மும்தாஜ் வாணி, கிளை செயலாளர்கள் கனகராஜ், வில்லியம் இஸ்மாயில், விஜயராஜா, மல்லிகராஜ், சடையபிள்ளை கிருஷ்ணமூர்த்தி பாலகிருஷ்ணன், ராஜகோபால், ராஜி மணல், மணி, மூர்த்தி, புட்ராஜ், ஆசாத், நாகேஷ், புஷ்பராஜ், மணிவண்ணன், ஜெகநாதன், மூசா செல்வா, மதிவாணன், வசந்த், இஸ்மாயில், ஜோண்சன், மலையரசன், நசீர், பிரகாஷ், வர்ணராஜ், நாகராஜ், சுஜித், மொஹமது, உதயகுமார், ராமசந்திரன், ஷபிக், செல்வன், சிவா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • எம்.ஜி.ஆர் காலத்திலும் சரி, அம்மா காலத்திலும் சரி சேலம் மாவட்டம் என்றால் அ.தி.மு.க. கோட்டை.
    • விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத தி.மு.க. அரசுக்கு வருகிற பாராளுமன்ற தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சி அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசியதாவது:

    தொடர்மழை இருக்கின்றபோது பல்வேறு மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டத்தை தள்ளி வைத்தார்கள். தொடர் மழை இடைவிடாமல் பெய்தாலும் அந்த மழையை பொருட்படுத்தாமலும் தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்ட தொண்டர்கள் இங்கு கூடி இருக்கிறார்கள்.

    எம்.ஜி.ஆர் காலத்திலும் சரி, அம்மா காலத்திலும் சரி சேலம் மாவட்டம் என்றால் அ.தி.மு.க. கோட்டை.

    இந்த கோட்டையில் நுழைய பார்க்கிறார்கள். ஆனால் இந்த மழையை பொருட்படுத்தாமல் அரண்போல் காக்கின்ற மக்கள் இருக்கின்ற வரை சேலம் மாவட்டத்தில் எவரும் நுழைய முடியாது. மக்கள் பாதுகாக்கின்றனர்.

    பேச பேச வருண பகவான் மழையை பொழிந்து கொண்டிருக்கிறார். நான் ஒரு விவசாயி.

    மழையையும், வெயிலையும் பொருட்படுத்தாமல் உழைக்கின்ற உழைப்பாளி குடும்பத்தில் பிறந்தவன் நான்.

    ஆகவே மழை எவ்வளவு கொட்டினாலும் பரவாயில்லை. இந்த மக்கள் விரோத ஆட்சியை அகற்றுவதற்கு எடுத்திருக்கிற சபதம் நிறைவேற்றவே இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருக்கிறோம்.

    மழையை கண்டோ இந்த ஆட்சியை கண்டோ பயன்படுகின்ற கூட்டம் இல்லை அ.தி.மு.க. கூட்டம்.

    மழை வேறு கொட்டுகின்றது, எனக்கு தொண்டையும் சரியில்லை. இருப்பினும் மக்களுக்காக நான் இங்கு பேசுகிறேன்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு நாளை முடிசூட்டு விழா நடக்கிறது. மிகப்பெரிய தியாகத்தை செய்த செம்மல், நாட்டுக்கு உழைத்த மாமனிதர் உதயநிதி ஸ்டாலினாம்.

    எண்ணிப்பாருங்கள் கருணாநிதி முதல்-அமைச்சராக வந்தார். அவருக்கு பின்னால் அவருடைய மகன் ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆனார். அவருக்கு அடுத்து அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலினை தி.மு.க. முன்னணி தலைவராக கொண்டு வருவதற்காக இதை ஒரு முன்னோட்டமாக நாளை முடிசூட்டு விழா நடைபெறுகின்றது.

    உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகிவிட்டால் தமிழ்நாட்டில் தேனாறும், பாலாறும் ஓட போகிறதா? இல்லை.

    ஏற்கனவே எல்லா துறையிலும் ஊழல் நடைபெற்று கொண்டிருக்கிறது. இவர் வந்தால் அந்த ஊழலுக்கு எல்லாம் தலைவராக இருந்து செயல்படுவார். அதுதான் நடக்கும்.

    ஆகவே குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டவேண்டும். வாரிசு அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும். நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காத ஆட்சி ஒன்றால் அது தி.மு.க. ஆட்சி. குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம் அதில் நடைபெற்று கொண்டிருக்கிறது. மாநிலத்துக்கு ஒரு முதல்-அமைச்சர் இருப்பார்கள். ஆனால் தமிழ்நாட்டில் 4 முதல்-அமைச்சர்கள். ஸ்டாலின், அவருடைய மனைவி, அவருடைய மகன், அவருடைய மருமகன். ஆகவே 4 முதல்-அமைச்சர் கொண்ட ஒரு மாநிலம் தமிழ்நாடு.

    ஒரு முதல்-அமைச்சருக்கே தாக்குப்பிடிக்க முடியாது. 4 முதல்-அமைச்சர் இருந்தால் இந்த தமிழ்நாடு தாக்குப்பிடிக்க முடியுமா?. ஆகவே குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவோம். வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டுவோம்.

    தி.மு.க. கார்ப்பரேட் கம்பெனி. அந்த கம்பெனியில் யார் வேண்டுமானாலும் இயக்குநர் ஆகலாம். இயக்குநர் ஆனால் அந்த கட்சியில் அமைச்சர் பதவி கிடைக்கும்.

    ஏனென்றால் அந்த கட்சியில் அ.தி.மு.க.வில் இருந்தவர்கள் தான் பலர் அமைச்சர்களாக இருக்கிறார்கள். எம்.எல்.ஏ.க்களாக இருக்கிறார்கள்.

    அ.தி.மு.க.வில் விசுவாசமாக இருப்பவர்களுக்கு அவர்களின் வீடு தேடி சென்று பதவி கிடைக்கும்.

    விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத தி.மு.க. அரசுக்கு வருகிற பாராளுமன்ற தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • உதயநிதிக்கு எல்லா தகுதியும், திறமையும் உள்ளது.
    • முதலிலே அவரை அமைச்சராக ஆக்கி இருந்தால் திராவிட மாடல் ஆட்சியை சிறப்பாக நடத்தி வந்திருப்பார்.

    சென்னை:

    சென்னை தலைமை செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகளில் தமிழ் பேராசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். அடுத்த கல்வியாண்டில் தமிழ்வழிப் பாடம் எல்லா வகுப்பிலும் நடத்தப்படும்.

    பல்கலைக்கழக மானிய குழுவின் வழிகாட்டுதலின்படி பி.எச்.டி. போன்ற தகுதி பெற்ற தமிழ் படித்தவர்கள் மட்டுமே நியமிக்கப்படுவார்கள். முதன்முதலாக தமிழ்வழி கல்வியை அறிமுகம் செய்தவர் கலைஞர்.

    தி.மு.க. இளைஞர் அணி செயலாளராக உள்ள உதயநிதிக்கு எல்லா தகுதியும், திறமையும் உள்ளது. மிக திறமையுள்ள இளைஞர். திரைத்துறை, அரசியல் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

    1½ ஆண்டுக்கு முன்பே அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்து இருக்க வேண்டும். இதை கால தாமதமாக நான் கருதுகிறேன். அவருக்கு எந்த துறை ஒதுக்கப்படும் என்பதை முதலமைச்சர் நாளை அறிவிப்பார்.

    முதலிலே அவரை அமைச்சராக ஆக்கி இருந்தால் திராவிட மாடல் ஆட்சியை சிறப்பாக நடத்தி வந்திருப்பார். அவருக்கு வழங்க உள்ள பொறுப்பில் திறம்பட செயல்படுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • செங்கலை தூக்கி காட்டிய உதயநிதி, எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வருவாரா?
    • உதயநிதி அமைச்சர் பதவி பெற போகிறார், இதனால் மக்களுக்கு என்ன பயன் கிடைக்கும்?.

    திருப்பரங்குன்றம்:

    தி.மு.க. அரசை கண்டித்து மதுரையை அடுத்த திருப்பரங்குன்றத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறியுள்ளதாவது:- தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் பால் விலை, மின்சார கட்டணம் 53 சதவீதமும், வீட்டு வரி 100 சதவீதம் ஏற்றி விட்டார்கள்.

    இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு, அமைச்சர் பதவி கொடுக்கிறார்கள். மேலும் அவர் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் பதவி பெற போகிறார். இதனால் மக்களுக்கு என்ன பயன் கிடைக்கும்?. மழை வெள்ளத்தால் மக்கள் பாதிப்பு அடைந்திருக்கும் போது முதலமைச்சர் மகனுக்கு மகுடம் சூட்ட அவசரம் ஏன்?.

    செங்கலை தூக்கி காட்டிய உதயநிதி, எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வருவாரா, ஜெயலலிதா கொண்டு வந்த மினி கிளினிக்கை கொண்டு வருவாரா, பெண்களுக்கான மிக்சி, கிரைண்டர் கொடுக்கப் போகிறாரா?.  பா.ஜ.க.வுடன் தொடர்பில் இருக்கும் ஓ.பன்னீர் செல்வம், மணிப்பூர், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் ஆளுநர் பதவியை வாங்கிக் கொண்டு போய் விட்டால் அண்ணா தி.மு.க.வுக்கு தொல்லை நீங்கும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார். 

    • கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு த்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
    • மூத்த முன்னோடிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

    நாகப்பட்டினம்:

    தமிழக முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிக்காட்டுதலோடு கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளதை கொண்டாடுகின்ற வகையில் நாகை மாவட்ட கழக செயலாளரும் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவருமான என்.கெளதமன அறிவுறுத்தலின்படி,நாகை நகர கழக செயலாளரும் நகர மன்ற தலைவருமான.

    இரா.மாரிமுத்து தலைமையில் நாகை பேருந்து நிலையத்தில் உள்ள பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் நாகை *நகர கழக நிர்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள் வார்டு செயலாளர்கள், பிரதிநிதிகள், தோழர்கள் மூத்தமுன்னோடிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    • ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக பதவி ஏற்றுள்ள ஐ.பெரியசாமிக்கு வாழ்த்து தெரிவிப்பது ஆகிய 2 தீர்மானங்களை கொண்டு வந்து நிறைவேற்றினார்.
    • மாவட்ட கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் உள்ள பிரச்சினைகளை எடுத்துரைத்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் பனகல் கட்டிடத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவி உஷாபுண்ணியமூர்த்தி தலைமை தாங்கினார்.

    துணைத்தலைவர் முத்துச்செல்வம், ஊராட்சி செயலர் ராதாகிருஷணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் அனைத்துக்கட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவி உஷா புண்ணியமூர்த்தி, தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி ஏற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு பாராட்டு மற்றும் வாழ்த்து தெரிவிப்பது, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக பதவி ஏற்றுள்ள ஐ.பெரியசாமிக்கு வாழ்த்து தெரிவிப்பது ஆகிய 2 தீர்மானங்களை கொண்டு வந்து நிறைவேற்றினார். அதைத்தொடர்ந்து மாவட்ட கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் உள்ள பிரச்சினைகளை எடுத்துரைத்தனர்.

    • கடந்த 14ந் தேதி அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றார்.
    • அவரது இல்லத்தில் சந்தித்து பொன்னாடை வழங்கி விஜய் வசந்த் எம்.பி. வாழ்த்து தெரிவித்தார்.

    தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் கடந்த 14ந் தேதி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் புதிய அமைச்சராக பதவி ஏற்றிருக்கும் உதயநிதி ஸ்டாலினை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இன்று நேரில் சந்தித்து பொன்னாடை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் இந்த சந்திப்பின் போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் எம் எஸ் காமராஜ் உடன் இருந்தார்

    • காரைக்குடியில் வருகிற 24-ந் தேதி மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
    • இந்த முகாமை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவ ட்டத் தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்டத் தின் கீழ் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை அளிக்கும் வகையில் வருகிற 24-ந் தேதி (சனிக்கிழமை) காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் பள்ளியில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

    இதனை விளை யாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் வேலை வாய்ப்பு முகாமில் தனியார் நிறுவனங்கள் பங்கேற்று வேலைக்கு ஆட்களை தேர்வு செய்கின்றனர்.

    இந்த முகாமில் 18 வயது முதல் 35 வயது வரை உள்ள இருபாலரும் கலந்து கொண்டு பயனடையலாம். முகாமுக்கு வருபவர்கள் தங்களின் கல்வித்தகுதி, அடையாள அட்டை, தொழில் நுட்ப தகுதி, முன் அனுபவம், சாதி சான்று, இருப்பி டச்சான்று, வருமானச்சான்று உள்ளிட்ட வைகளையும், அசல் மற்றும் சான்றொப்ப மிட்ட புகைப்பட நகல் ஆகியவற்றையும் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்ப டுகிறார்கள்.

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரி வித் துள்ளார்.

    ×