search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Udayanithi Stalin"

    • தமிழ்நாட்டில் இருந்து 17 பேர் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கிறார்கள்.
    • 6 நாட்கள் தங்கி இருந்து 14-ந்தேதி சென்னை திரும்புவார்.

    சென்னை:

    இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்றிரவு 10 மணிக்கு விமானம் மூலம் பாரீஸ் சென்றார்.

    அவருடன் விளையாட்டு துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி ஆகியோரும் உடன் சென்றுள்ளனர்.

    33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. உலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவான இதில் 206 நாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் மொத்தம் 117 வீரர்கள் பங்கேற்க சென்று உள்ளனர். இதில் பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களை அடுத்து அதிக விளையாட்டு வீரர்களை தமிழ்நாடு அனுப்பி உள்ளது.

    தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 11 வீரர், வீராங்கனைகள் மற்றும் 6 மாற்று திறனாளிகள் உள்பட மொத்தம் 17 பேர் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கிறார்கள்.

    இந்த 17 வீரர்களுக்கும் முதல்-அமைச்சர் உத்தரவுப் படி தலா ரூ.7 லட்சம் வீதம் மொத்தம் 1.19 கோடி ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

    விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தி வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்திய விளையாட்டு துறையின் தலைநகராக தமிழ்நாட்டை உயர்த்துவதே லட்சியம் என்று கூறி வருகிறார்.

    அந்த வகையில் பாரீசில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியை பார்வையிடவும் தமிழக வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் விளையாட்டு நிகழ்ச்சிகளை நேரில் பார்க்கவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசு துறை அதிகாரிகளுடன் பாரிஸ் சென்றுள்ளார்.

    பிரான்ஸ் நாட்டில் 6 நாட்கள் தங்கி இருக்கும் அவர் 14-ந்தேதி சென்னை திரும்புவார் என தெரிகிறது.

    • மூன்றாம் கலைஞர், இளம் தலைவர் என்று என்னை அழைக்க வேண்டாம்.
    • கலைஞர் என்றால் அது ஒரே ஒரு கலைஞர் தான்.

    புதுக்கோட்டை தி.மு.க. சார்பில் உசிலங்குளம் தடி கொண்ட அய்யனார் திடலில் முப்பெரும் விழா இன்று நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அக்கட்சியின் இளைஞர் அணி மாநில செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின், கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழிகளையும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் கடந்த 3 தேர்தல்களில் தி.மு.க. கூட்டணிக்கு தமிழக மக்கள் மிகப்பெரிய வெற்றியை தந்தார்கள். இந்தியாவிலேயே 3-வதாக பெரிய இயக்கமாக தி.மு.க. உள்ளது. கட்சியின் அடிமட்ட தொண்டர்களையும், மூத்த நிர்வாகிகளையும் அண்ணா, பெரியாரின் மறு உருவமாக நான் பார்க்கிறேன்.

    கட்சியில் உள்ள அனைவருக்கும் ஒரு அன்பு வேண்டுகோள். என் மீது பாசம், அன்பு காட்டுவதாக நினைத்துக்கொண்டு கோஷம் போடும் போது 3-ம் கலைஞர், இளம் தலைவர் என அப்படியெல்லாம் அழைக்கிறீர்கள். எனக்கு இதில் துளிக்கூட விருப்பம் கிடையாது.

    கலைஞர் என்றால் அது ஒரே ஒரு கலைஞர் தான். என்னை சின்னவர் என்று அழைக்கிறார்கள். அது மகிழ்ச்சியாக உள்ளது. பெரியவர்களோடு ஒப்பிடும் போது நான் சின்னவர் தான். இந்த திடலில் இதற்கு முன்பு நடந்த நிகழ்ச்சிகளில் பேசிய இந்திரா காந்தி பிரதமரானார், கருணாநிதி பல வெற்றிகளை கண்டுள்ளார், மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆனார்.

    இந்த திடல் ராசியான திடல் என்று எனக்கு முன்னால் பேசியவர்கள் சொன்னார்கள். எனக்கு ராசி மீது நம்பிக்கை கிடையாது. உழைப்பின் மீது நம்பிக்கை உண்டு. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×