என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ulundurpet bus glass
நீங்கள் தேடியது "Ulundurpet bus glass"
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே அரசு பஸ் கண்ணாடியை உடைத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரத்தில் இருந்து சேலத்துக்கு பயணிகளை ஏற்றி கொண்டு நேற்று இரவு 9 மணிக்கு அரசு பஸ் புறப்பட்டது.
இந்த பஸ்சில் சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ஆனந்தராஜ் (வயது 18), அப்துல்லா (19) ஆகிய 2 பேரும் பயணம் செய்தனர்.
உளுந்தூர்பேட்டை அருகே சின்னக்குப்பத்தில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவர்கள் வந்திருந்தனர். அந்த பஸ் சின்னக்குப்பம் அருகே வந்து கொண்டிருந்தபோது ஆனந்தராஜ், அப்துல்லா ஆகிய 2 பேரும் நாங்கள் சின்னக்குப்பத்தில் இறங்க வேண்டும் பஸ்சை நிறுத்துங்கள் என்று கூறினர்.
ஆனால் டிரைவர் சின்னகுப்பத்தில் பஸ் நிற்காது என்று கூறினார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் அடுத்த நிறுத்தமான பெரியகுப்பத்தில் பஸ் டிரைவர் இறக்கி விட்டார்.
சின்னக்குப்பத்தில் பஸ்சை நிறுத்தாததால் ஆத்திரம் அடைந்த 2 வாலிபர்களும் அந்த பஸ்சின் பின்பக்க கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்தனர்.
இது குறித்து திருநாவலூர் போலீசில் பஸ் டிரைவர் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பரணீதரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பஸ் மீது கல்வீசிய ஆனந்தராஜ், அப்துல்லா ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

×

X