search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Unacademy CEO"

    • சில மாதங்களுக்கு முன்பு இந்த நிறுவனம் 250 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது.
    • அன்அகாடமி ஊழியர்களுக்கு இந்த ஆண்டு சம்பள உயர்வு இல்லை என்று தலைமை நிர்வாக அதிகாரி கௌரவ் முஞ்சால் தெரிவித்து இருக்கிறார்.

    கடந்த 2015ஆம் ஆண்டில் ஹெமேஸ் சிங் மற்றும் கௌரவ் மஞ்சக் மற்றும் ரோமன் சைனி ஆகியோர் இணைந்து அன்அகாடமி என்ற எஜுடெக் நிறுவனத்தை தொடங்கினர். பெங்களூருவை அடிப்படையாகக் கொண்ட இந்த நிறுவனத்தில் சுமார் 91 ஆயிரம் ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளனர். 99 மில்லியன் பேர் பதிவு செய்து பாடங்களை கற்று வருகின்றனர்.

    இந்தியாவின் புகழ்பெற்ற கல்வி எஜுடெக் நிறுவனமான அன்அகாடமியில் தலைமை பதவிகளில் இருப்பவர்கள் தொடர்ந்து விலகி வருகின்றனர். இந்த நிறுவனத்தின் துணை நிறுவனர் மற்றும் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆகியோர் பதவியில் இருந்து சில தினங்களுக்கு முன் விலகினர். இதனிடையே, சில மாதங்களுக்கு முன்பு இந்த நிறுவனம் 250 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது.


    இந்நிலையில், அன்அகாடமி ஊழியர்களுக்கு இந்த ஆண்டு சம்பள உயர்வு இல்லை என்று தலைமை நிர்வாக அதிகாரி கௌரவ் முஞ்சால் தெரிவித்து இருக்கிறார். இதுதொடர்பாக அவர் பேசிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலான நிலையில் கௌரவ் முஞ்சால் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளார்.

    ஊழியர்களுக்கு ஆற்றிய உரையின் போது, முஞ்சால் ரூ.33 ஆயிரம் மதிப்பிலான டி-ஷர்ட் அணிந்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. வீடியோவை பார்த்த பயனர் ஒருவர், "இந்த CEO-க்கள் தங்கள் சொந்த வாழ்க்கைத் தரத்தை குறைக்க மாட்டார்கள். மாறாக தங்கள் வணிகங்களை நடத்தும் ஊழியர்களுக்கான சம்பள உயர்வை நிறுத்துவார்கள்" என்று கருத்து தெரிவித்துள்ளார்.

    ×