search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "UNGA 2018"

    ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள சுஷ்மா ஸ்வராஜ், ஸ்பெய்ன், கொலம்பியா, நேபாளம் உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். #UNGA2018 #SushmaSwaraj
    நியூயார்க் :

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் ஐ.நா. சபையின் பொதுக்கூட்டம் நடைபெறுவது வழக்கம். இரண்டு வாரம் நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினராக உள்ள 193 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்று நடப்பு ஆண்டில் உள்ள முக்கிய விவகாரங்கள் குறித்து பொதுவிவாதம் நடத்துவார்கள்.

    இந்த ஆண்டிற்கான ஐ.நா பொதுச்சபையின் 73-வது கூட்டம், இன்று துவங்கி அக்டோபர் 1 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் நியூயார்க் நகருக்கு சென்றுள்ளார்.

    இந்நிலையில், உலக போதை பொருள் விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதற்கான உலகளாவிய கூட்டம் ஒன்று டொனால்டு டிரம்ப் தலைமையில் நடந்தது. இதில் பங்கேற்ற சுஷ்மா சுவராஜ் கூட்டத்தின் முடிவில் ஸ்பெய்ன், கொலம்பியா, நேபாளம் மற்றும் மொராக்கோ உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகளை சந்தித்து பேசினார்.

    இந்த சந்திப்பின் போது, அந்நாடுகளுடனான இந்தியாவின் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் சுஷ்மா சுவராஜ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் என வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ராவேஷ் குமார் தெரிவித்துள்ளார். #UNGA2018 #SushmaSwaraj
    ×