என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » unjal urchavam
நீங்கள் தேடியது "unjal urchavam"
குறிஞ்சிப்பாடி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
குறிஞ்சிப்பாடி உடையார் வீதியில் பிரசித்திபெற்ற அங்காளபரமேஸ்வரி கோவில் உள்ளது. இக்கோவிலில் மாதந்தோறும் அமாவாசை அன்று ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி மார்கழி மாத அமாவாசை விழா நேற்று முன்தினம் நடந்தது.
இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கு பால், இளநீர், சந்தனம், மஞ்சள், தயிர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
அதைத்தொடர்ந்து இரவு அலங்கரிக்கப்பட்ட அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலை சுற்றி 3 முறை வலம் வந்து, கோவில் வளாகத்தில் உள்ள ஊஞ்சலில் எழுந்தருளினார்.
இதையடுத்து பூசாரிகள் தாலாட்டு பாட ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் குறிஞ்சிப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். இதேபோல் குறிஞ்சிப்பாடி சின்னக்கடை வீதியில் உள்ள அங்காளம்மன் கோவிலிலும் மார்கழி மாத அமாவாசையையொட்டி நேற்று முன்தினம் இரவு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள அங்காளம்மன் கோவிலில் மாதந்தோறும் அமாவாசை உற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி வைகாசி அமாவாசை உற்சவ விழா நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தங்க கவச அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
உற்சவ அம்மன் மயில் வாகனத்தில் அமர்ந்தவாறு அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் வைக்கப் பட்டிருந்தது. இரவு 11.45 மணியளவில் அங்கிருந்த உற்சவ அம்மனை வடக்கு வாயில் வழியாக பம்பை, மேளதாளம் முழங்க எடுத்து வந்து ஊஞ்சலில் அமர்த்தினர். தொடர்ந்து பூசாரிகள் பக்திப் பாடல்களைப் பாடினர். இரவு 12.45 மணியளவில் அம்மனுக்கு அர்ச்சனையும், தொடர்ந்து தீபாரதனையும் நடைபெற்றது.
விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர்.

×

X