search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "unknown sources"

    தேசிய கட்சிகளுக்கு பெயரை வெளியிட விரும்பாத நிறுவனங்கள், தனிநபர்கள் ரூ.689 கோடி நன்கொடை வழங்கி உள்ளனர். #Income #NationalPoliticalParties #UnknownSource
    புதுடெல்லி:

    நமது நாட்டில் உள்ள பாரதீய ஜனதா, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, பகுஜன் சமாஜ் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகிய 6 தேசிய கட்சிகள், கடந்த நிதி ஆண்டில் அளித்துள்ள வருமான வரி கணக்குகளை ஏ.டி.ஆர். என்று அழைக்கப்படுகிற ஜனநாயக சீர்திருத்த சங்கம் ஆராய்ந்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அந்த அறிக்கையில் அம்பலப்படுத்தப்பட்டுள்ள தகவல்கள் வருமாறு:-

    * 2017-18 நிதி ஆண்டில் 6 தேசிய கட்சிகளுக்கு வந்துள்ள மொத்த நன்கொடை ரூ.1,293 கோடியே 5 லட்சம் ஆகும்.

    * இந்த நன்கொடையில் ரூ.689 கோடியே 44 லட்சம், பெயர் வெளியிட விரும்பாத நிறுவனங்கள், தனி நபர்களிடம் இருந்து வந்தது ஆகும். மொத்த நன்கொடைகளில் இது 53 சதவீதம் ஆகும்.

    இதில் பாரதீய ஜனதா கட்சிக்கு மட்டும் வந்த தொகை ரூ.553 கோடியே 38 லட்சம் ஆகும்.

    * பெயர் வெளியிட விரும்பாதவர்கள் வழங்கிய ரூ.689 கோடியே 44 லட்சத்தில் தேர்தல் பத்திரங்கள் வாயிலாக வழங்கப்பட்ட தொகை ரூ.215 கோடி.

    * 6 தேசிய கட்சிகளும், ரூ.20 ஆயிரத்துக்கு குறைவாக தானாக வந்த இத்தகைய நன்கொடை மூலம் பெற்ற தொகை ரூ.354 கோடியே 22 லட்சம் ஆகும்.

    * தேசிய கட்சிகளுக்கு ‘பிற வகைகளில்’ என்ற பிரிவில் வந்த தொகை ரூ.4½ கோடிதான்.

    * 6 தேசிய கட்சிகளுக்கு பெயர் சொல்லி வழங்கிய நன்கொடையாளர்கள் மூலம் வந்த தொகை ரூ.467 கோடியே 13 லட்சம்.

    சொத்து விற்பனை, பத்திரிகை விற்பனை, உறுப்பினர் கட்டணம், வங்கி வட்டி உள்ளிட்டவை மூலம் வந்த தொகை ரூ.136 கோடியே 48 லட்சம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும், தேசிய கட்சி என்றாலும்கூட, அந்த கட்சியின் வருமான வரி கணக்கு விவரங்கள் கிடைக்கப்பெறாததால், இந்த பட்டியலில் அந்த கட்சிக்கு வந்த நன்கொடைகள் சேர்க்கப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.
    ×