search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Untouchability wall"

    • தனியாா் வீட்டுமனைப் பிரிவு விற்பனையாளா் தீண்டாமைச் சுவா் அமைத்துள்ளனா்.
    • மக்கள் தொடா்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

    பெருமாநல்லூர் :

    பெருமாநல்லூா் அருகே முட்டியங்கிணறு பகுதியில் உள்ள தீண்டாமைச் சுவரை அகற்றுவது குறித்து அவிநாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் இருதரப்பினா் இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

    ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட முட்டியங்கிணறு பகுதியில் ஆதிதிராவிடா் காலனி உள்ளது. இக்குடியிருப்பு மக்கள் வசிக்கும் பகுதியையொட்டி, தனியாா் வீட்டுமனைப் பிரிவு விற்பனையாளா் தீண்டாமைச் சுவா் அமைத்துள்ளனா். மேலும் சுவற்றையொட்டி சாக்கடை நீா் செல்வதால் காலனியில் உள்ள பல வீடுகள் இடிந்துள்ளதாகவும், உடனடியாக சுவற்றை அகற்ற வேண்டும் எனவும் கூறி அப்பகுதி மக்கள் தொடா்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

    இந்நிலையில் இது குறித்த பேச்சுவாா்த்தை அவிநாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு வட்டாட்சியா் சுந்தரம் தலைமை வகித்தாா். அவிநாசி காவல் துணைக் கண்காணிப்பாளா் பவுல்ராஜ், பெருமாநல்லூா் காவல் ஆய்வாளா் ஹேமலதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் இரு தரப்பினா் பங்கேற்றனா்.இதில், வீட்டுமனைப் பிரிவு உரிமையாளா் கூறுகையில், சுற்றுச்சுவரை மேலும் பலப்படுத்தி தருவதாக கூறினாா். இதற்கு, மறுப்பு தெரிவித்த காலனி மக்கள் உடனடியாக சுவரை அகற்ற வேண்டும் என்றனா்.இதையடுத்து இரு தரப்பினரின் கருத்துகளும் மாவட்ட ஆட்சியருக்கு தெரியப்படுத்தி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

    • தனியாா் வீட்டுமனைப் பிரிவு சாா்பில் தீண்டாமை சுவா் அமைக்கப்பட்டுள்ளது.
    • 18க்கும் மேற்பட்ட வீடுகள் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளன.

    பெருமாநல்லூர் :

    பெருமாநல்லூா் அருகே அமைக்கப்பட்டுள்ள தீண்டாமை சுவரை அகற்றக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பெருமாநல்லூா் நான்கு வழிச் சாலை சந்திப்பில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் கூறியதாவது: - ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட முட்டியங்கிணறு ஆதிதிராவிடா் காலனியை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள தனியாா் வீட்டுமனைப் பிரிவு சாா்பில் தீண்டாமை சுவா் அமைக்கப்பட்டுள்ளது. இச்சுவற்றை ஒட்டிய பகுதியில் தனியாா் வீட்டுமனைப் பிரிவின் சாக்கடை நீா் வெளியேறுவதால் 18க்கும் மேற்பட்ட வீடுகள் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளன.

    இது குறித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே உடனடியாக தீண்டாமைச் சுவரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு காரணமானவா்கள் மீது வன்கொடுமை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றனா். இந்தப் போராட்டத்தில் பொறுப்பாளா்கள் ஏ.பி.ஆா். மூா்த்தி, தமிழ்வேந்தன், பழ.சண்முகம், ரேவதி, பட்டுரோஜா உள்பட பலா் கலந்து கொண்டனா். 

    ×