என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » up rain kills 154
நீங்கள் தேடியது "UP Rain Kills 154"
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 154 ஆக அதிகரித்துள்ளது. #UPRain
லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பருவ மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாநிலத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. குறிப்பாக, மதுரா, ஆக்ரா, மீரட், முசாபர்நகர், காசியாபாத், ஜான்சி உள்பட பல்வேறு நகரங்கள் பெய்த மழையால் வெள்ளக் காடானது.
கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியும், வீடுகள் இடிந்தும், இடி, மின்னல் தாக்கியும் இதுவரை100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பெய்த கனமழையில் சிக்கி கடந்த ஒரு மாதத்தில் பலியானோர் எண்ணிக்கை 154 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், 131க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 1250க்கு மேற்பட்ட வீடுகள் பெருத்த சேதம் அடைந்தன. 187 கால்நடைகள் இறந்துள்ளன.
முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை விரைவில் செய்து தரும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதேபோல், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவைப்படும் வசதிகளை செய்து தரவேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். #UPRain
×

X