search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "uproar"

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து பேச, அவையை ஒத்திவைக்க வேண்டும் என்ற தி.மு.க.வின் தீர்மானத்தை சபாநாயகர் தனபால் ஏற்க மறுத்ததால் சட்டசபையில் தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். #DMK #adjournmentmotion
    சென்னை:

    தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டம் முடிந்த நிலையில், மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடத்தி அந்தந்த துறைக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடியது.

    இந்த கூட்டத்துக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர். மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக பேரவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர திமுக சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

    சட்டப்பேரவை விதி 56-ன் படி ஸ்டெர்லைட் விவகாரம், துப்பாக்கிச்சூடு ஆகியவற்றை பற்றி நாள் முழுவதும் விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் கோரி  ஸ்டாலின் நோட்டீஸ் கொடுத்தார்.



    இந்த ஒத்திவைப்பு தீர்மானத்தை சபாநாயகர் தனபால் ஏற்க மறுத்துவிட்டார். ஏற்கனவே இதுபற்றி விவாதிக்க கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டிருப்பதால், அதன்மீது பேசும்படி தி.மு.க. உறுப்பினர்களை கேட்டுக்கொண்டார். ஆனால், தங்கள் தீர்மானத்தை சபாநாயகர் நிராகரித்ததை தி.மு.க. உறுப்பினர்கள் ஏற்க மறுத்தனர். சபாநாயகரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். #DMK #adjournmentmotion

    ×