என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » uprooted
நீங்கள் தேடியது "uprooted"
நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலை பணிக்காக சாலையோரம் நின்று இருந்த பழமையான ஆலமரம் பிடுங்கி பேருடன் வேறு இடத்தில் நடப்பட்டன.
ஆலங்குளம்:
நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலை பணிக்காக சாலையோரம் நின்று இருந்த பழமையான மரங்கள் வெட்டப்பட்டன. சில இடங்களில் மரங்கள் வேருடன் பிடுங்கி நடப்பட்டன.
நெடுஞ்சாலைத்துறை மற்றும் ஒப்பந்ததாரர்களால் சில மரங்கள் மாற்று இடங்களில் மறுநடவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆலங்குளம் பஸ் நிலையம் கீழ்புறத்தில் சுமார் 250 ஆண்டு பழமையான ஆலமரம் ஒன்று இருந்தது.
நெடுஞ்சாலை பணிக்காக இந்த மரத்தின் கிளைகள் வெட்டும் பணி கடந்த வாரம் தொடங்கியது. ஆலங்குளத்தின் பெருமையாக கருதப்படும் இந்த ஆலமரத்தை மறுநடவு செய்ய வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்தவர்கள் முடிவு செய்தனர்.
இதையடுத்து ஆலங்குளம் பசுமை இயக்கம், அசுரா நண்பர்கள் ஆகியோர் இணைந்து நெடுஞ்சாலை துறையினரிடம் அனுமதி பெற்றனர். தொடர்ந்து 2 கிரேன், 2 ஜே.சி.பி.க்களின் உதவியுடன் 16 டன் எடை கொண்ட அந்த ஆலமரம் வேருடன் பிடுங்கி ஆலங்குளம் தொட்டியான்குளத்தின் கரையோரம் நடப்பட்டது.
இந்த பணியில் ஆலங்குளத்தில் உள்ள பொதுமக்கள், இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். மரத்தை மாற்றி நடுவதற்கு முயற்சி எடுத்த ஆலங்குளம் பசுமை இயக்கம் மற்றும் அசுரா நண்பர்களை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.
ஜார்கண்ட் மாநிலத்தில் எஸ்.பி.ஐ வங்கியின் ஏ.டி.எம். இயந்திரத்தை இரவோடு இரவாக உடைத்து, சுமார் 17 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ராஞ்சி:
ஜார்கண்ட் மாநிலம் சத்ரா பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் இயந்திரம் சில நாட்களாக இணைய சேவை இல்லாமல் இருந்து வந்துள்ளது. அந்த ஏடிஎம் இயந்திரத்துக்கு பாதுகாப்பு பணியிலும் யாரும் இல்லை எனவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, நேற்று முன்தினம் இரவோடு இரவாக ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்த கொள்ளையர்கள், சுமார் 17 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றதாக போலீசார் கூறியுள்ளார். இச்சம்பவத்தின் தொடர்புடைய அனைத்து கொள்ளையர்களை பிடிப்பதற்காக காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். #ATMLoot

×

X