என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » us condemns
நீங்கள் தேடியது "US condemns"
பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் அடுத்தடுத்து நடத்திய தாக்குதல்களுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. #USCondemns #PakistanAttacks
வாஷிங்டன்:
இந்த தாக்குதல்களுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த துயரமான நேரத்தில், பயங்கரவாத நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ள பாகிஸ்தான் மக்களுக்கு அமெரிக்கா துணையாக இருக்கும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹீதர் நாவெர்ட் தெரிவித்தார்.
‘இந்த பிராந்தியத்தில் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிரான போரில், பாகிஸ்தான் அரசுக்கு அமெரிக்கா ஒத்துழைக்கும். இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறோம். சீன தூதரகம் மீதான தாக்குதலுக்கு பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் உடனடியாக பதிலடி கொடுத்ததால், மேலும் உயிர்ப்பலி ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது’ என்றும் அவர் கூறியுள்ளார். #USCondemns #PakistanAttacks
பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள சீன தூதரகத்தை குறிவைத்து நேற்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 2 போலீஸ்காரர்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகளையும் பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். இந்த தாக்குதல் நடந்த சிலமணி நேரத்தில், பழங்குடியின பிராந்தியமான ஒரக்சாய் பகுதியில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய வெடிகுண்டு தாக்குதலில் 32 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதல்களுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த துயரமான நேரத்தில், பயங்கரவாத நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ள பாகிஸ்தான் மக்களுக்கு அமெரிக்கா துணையாக இருக்கும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹீதர் நாவெர்ட் தெரிவித்தார்.
‘இந்த பிராந்தியத்தில் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிரான போரில், பாகிஸ்தான் அரசுக்கு அமெரிக்கா ஒத்துழைக்கும். இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறோம். சீன தூதரகம் மீதான தாக்குதலுக்கு பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் உடனடியாக பதிலடி கொடுத்ததால், மேலும் உயிர்ப்பலி ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது’ என்றும் அவர் கூறியுள்ளார். #USCondemns #PakistanAttacks
பாகிஸ்தானில் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. #PakistanAttacks #USCondemnsTerrorAttacks
வாஷிங்டன்:
பாகிஸ்தான் நாட்டின் பாராளுமன்றம் மற்றும் சில மாகாண சட்டசபைகளுக்கு வரும் 25–ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அங்குள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
தேர்தல் பிரச்சாரத்தின் போது சில அரசியல் கட்சி தலைவர்களது உயிருக்கு ஆபத்து உள்ளதாக பட்டியல் வெளியிட்டு, தேசிய பயங்கரவாத தடுப்பு ஆணையம் எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து முக்கிய தலைவர்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பையும் மீறி நேற்று இரண்டு இடங்களில் வெடிகுண்டு தாக்குதலை பயங்கரவாதிகள் நிகழ்த்தி உள்ளனர்.
இந்நிலையில், பாகிஸ்தானில் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் மீதான இந்த கொடூர தாக்குதல்களுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
“இந்த தாக்குதல்களானது பாகிஸ்தான் மக்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்கும் கோழைத்தனமான முயற்சிகளாகும். தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய பிரார்த்தனை செய்கிறோம்” என அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி வெளியிட்டுள்ளது. #PakistanAttacks #USCondemnsTerrorAttacks

மஸ்தாங் மாவட்டத்தில் பலுசிஸ்தான் அவாமி கட்சியின் பேரணியை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 128 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். வடக்கு வஜிரிஸ்தானில் உள்ள பன்னு என்ற இடத்தில் தேர்தல் பிரச்சார மேடை அருகே நடந்த குண்டுவெடிப்பில் 5 பேர் உடல் சிதறி இறந்தனர்.
இந்நிலையில், பாகிஸ்தானில் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் மீதான இந்த கொடூர தாக்குதல்களுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
“இந்த தாக்குதல்களானது பாகிஸ்தான் மக்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்கும் கோழைத்தனமான முயற்சிகளாகும். தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய பிரார்த்தனை செய்கிறோம்” என அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி வெளியிட்டுள்ளது. #PakistanAttacks #USCondemnsTerrorAttacks
×

X