search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "US Snosw storm"

    அமெரிக்காவில் பனிப்புயல் வீசியதால் 500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் கடும் பனிப்புயலுக்கு 3 பேர் பலியாகினர். #Snowstorm #USWeather #FlightsCancelled
    சிகாகோ:

    அமெரிக்காவில் கடும் பனிப்புயல் வீசுகிறது. இதனால் ரோடுகள் மற்றும் வீடுகள் மீது பனி கொட்டுகிறது. டகோடா, மின்னெசோட்டா, கன்சாஸ் மற்றும் அயோவா மாகாணங்களில் பனி கொட்டிக் கிடப்பதால் ரோடுகள் மூடப்பட்டுள்ளன.

    விமான நிலையங்களில் 8 முதல் 18 அங்குலம் அளவுக்கு பனி உறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 5700 விமானங்கள் தாமதமாக வந்து சென்றன.


    கடும் பனிப்புயலுக்கு 3 பேர் பலியாகினர். லூசியானாவில் மின்னல் தாக்கி மரம் முறிந்து விழுந்ததில் 58 வயது பெண் பலியானார். கன்சாசில் ஏற்பட்ட கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இவர் தவிர மேலும் ஒருவர் இறந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. #Snowstorm #USWeather #FlightsCancelled
    அமெரிக்காவில் பனிப்புயல் வீசியதால் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் விடுமுறைக்காக வெளியூர் செல்ல திட்டமிட்ட பயணிகள் சிரமத்துக்குள்ளாகினர். #Snowstorm #USWeather #FlightsCancelled
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் தற்போது குளிர்காலம் என்பதால் பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. சாலைகளில் பனி சூழ்ந்து காணப்படுவதால் வாகனங்களை இயக்க முடியவில்லை. அதிக அளவில் பனி படர்ந்துள்ள சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதுதவிர அவ்வப்போது பனிப்புயலும் வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேற்று மத்திய அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் கடுமையான பனிப்புயல் வீசியது. இதன் காரணமாக 800 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 6500க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. குறிப்பாக வடக்கு டகோட்டாவில் உள்ள பார்கோ விமான நிலையம் மூடப்பட்டு, அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.


    மத்திய மற்றும் மேற்கு சமவெளிப் பகுதிகளில் மழை, பனிப்பொழிவு மற்றும் பலத்த காற்று வீசியது. இதனால் சாலைப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சில சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.  இன்றும் பனியின் தாக்கம் அதிகமாக இருந்தது.

    கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை என்பதால் ஏராளமான பயணிகள் வெளியூர் செல்வதற்கு திட்டமிட்டிருந்தனர். பனிப்புயல் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். #Snowstorm #USWeather #FlightsCancelled
    ×