என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Uthamapalayam"
தேனி:
உத்தமபாளையம் அருகே அணைப்பட்டியை சேர்ந்தவர் மூர்த்தி மகள் சுகந்தி (வயது17). 9-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். சம்பவத்தன்று தனது தோழியை பார்க்க செல்வதாக வீட்டில் கூறி சென்றுள்ளார்.
ஆனால் சுகந்தி அங்கு செல்லவில்லை. இரவு வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை மூர்த்தி, நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்காததால் ராயப்பன்பட்டி போலீசில் இது குறித்து புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சுகந்தி மாயமானாரா? அல்லது வேறு ஏதும் பிரச்சினையை என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தமபாளையம்:
ஏழை எளிய மக்களுக்காக தமிழக அரசு சார்பில் ரேசன் கடைகளில் இலவச அரிசி மற்றும் மலிவு விலையில் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தேனி மாவட்டத்தில் இருந்து கேரள பகுதிக்கு அதிகளவு ரேசன் அரிசி கடத்தப்படுகிறது.
அதிகாரிகள் சோதனையிட்டு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தபோதும் ரேசன் அரிசி கடத்தலை தடுக்க முடியவில்லை. தேனி மாவடத்தில் உத்தமபாளையம் 1,40,000 ரேசன் கார்டுகள் உள்ள பெரிய தாலுகாவாகும். இங்கு சுமார் 18 ஆயிரம் ஒரு நபர் ரேசன் கார்டுகள் உள்ளன.
அதிகாரிகள் ரேசன் கார்டுகளை ஆய்வு செய்யும் பணி நடந்தது. இதில் 106 பேர் இறந்த பின்பும் அவர்கள் பெயரில் ரேசன் கார்டை பயன்படுத்தி பொருட்கள் வாங்கியது தெரியவந்தது. அந்த கார்டுகளை அதிகாரிகள் ரத்து செய்தனர்.
மேலும் கூட்டு குடும்பத்தில் இருந்து கொண்டு தனிநபர் கார்டு பயன் படுத்துவோர் குறித்து பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களின் பெயரை குடும்பத்தில் உள்ள ரேசன் கார்டுகளுடன் சேர்த்து விட சிவில் சப்ளை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் மேற்குதொடர்ச்சிமலை அடிவாரத்தில் உள்ளது. இதனை ஒட்டியுள்ள வனப்பகுதியில் யானை, காட்டெருமை, மான், முயல் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் மக்னா யானை விவசாய நிலத்தில் புகுந்து அட்டகாசம் செய்து வந்தது.
மேலும் விவசாயிகளை தாக்கியதில் படுகாயமடைந்தனர். இதனால் இரவு காவலுக்கு செல்ல அச்சமடைந்தனர்.
போடி மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் குமார்(வயது47). தமிழக-கேரள எல்லையில் 18-ம் படி பகுதியில் உள்ள ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். ஓட்டல் அருகே நின்று கொண்டிருந்தபோது அவ்வழியே வந்த காட்டு யானை குமாரை விரட்டியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ஓட்டம் பிடித்தார். விடாமல் துரத்திய யானை குமாரை தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து கேரள வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். குமாரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது.
உத்தமபாளையம் அருகே முத்துலாபுரத்தை சேர்ந்த முருகன் மனைவி மலர்(வயது42). இவர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சத்துணவு ஊழியராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். முத்துலா புரம் அருகே சென்றபோது சாலையோரம் கேபிள் டிவி பராமரிப்பிற்காக வைக்கப்பட்டிருந்த ஏணி திடீரென சரிந்து இவர்கள் மீது விழுந்தது.
இதில் மலர் படுகாயமடைந்து உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சின்னமனூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்...
உத்தமபாளையம் அருகே அனுமந்தன்பட்டியை சேர்ந்த ஆறுமுகக்குமார், கபிலேஷ், கார்த்திக் ஆகியோர் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தனர். அப்பகுதியில் உள்ள தனியார் மதுக்கடை அருகே சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோர பள்ளத்தில் கவிழந்தது. இதில் ஆறுமுககுமார் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த மற்ற 2 பேரும் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:
உத்தமபாளையம் அருகே ஆனைமலையான்பட்டி கிழக்குத்தெருவை சேர்ந்தவர் மாரிச்சாமி. இவருடைய மனைவி ரேணுகாதேவி(வயது23). கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதனால் ரேணுகாதேவி கோவித்துக்கொண்டு அதேஊரில் உள்ள தாய்வீட்டிற்கு சென்றுவிட்டார்.
சம்பவத்தன்று அங்கு சென்ற மாரிச்சாமி ரேணுகா தேவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்பு அங்கிருந்த மண்வெட்டி கைப்பிடியால் ரேணுகாவை தாக்கியுள்ளார். படுகாயமடைந்த ரேணுகா உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே தேவாரம் கேரள எல்லையையொட்டி அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள தேவாரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தென்னை, வாழை, மரவள்ளிகிழங்கு, கரும்பு உள்ளிட்டவைகளை சாகுபடி செய்து வருகின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கேரளாவில் இருந்து வந்த மக்னா என்று அழைக்கப்படும் ஒற்றையானை சுற்றிதிரிகிறது. இரவு நேரங்களில் இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
மேலும் விவசாயிகளின் மோட்டார் அறைகளையும் தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது. கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இரவு காவலுக்காக சென்ற விவசாயி மற்றும் அவரது மகன் ஒற்றையானை தாக்கி பரிதாபமாக பலியானார்கள்.
தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் இந்த ஒற்றை யானையால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி வீசி வருகிறது. மற்ற பயிர்களையும் மிதித்து சேதப்படுத்துகிறது.
இதனால் மக்னா யானையை விரட்ட கும்கி யானை மூலம் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகள் இதனை வலியுறுத்தினர்.
தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். இருந்த போதும் ஒற்றையானையை இப்பகுதியில் இருந்து விரட்டினால் மட்டுமே விவசாயிகள் நிம்மதியாக சென்று வர முடியும்.
உத்தமபாளையம் அருகே சின்ன ஓவுலாபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜ் (வயது 31). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகள் சோபனா என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
சில நாட்களிலேயே கருத்துவேறுபாடு காரணமாக இருவருக்குமிடையே பிரச்சனை ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் சமரசம் செய்து வைத்த போதும் பிரச்சனை தொடர்ந்து கொண்டே இருந்தது. இதனால் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. சம்பவத்தன்று பிரச்சனை முற்றவே ஷோபனா கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு வந்து விட்டார்.
மகள் கோபத்துடன் திரும்பி வந்ததால் முருகேசன் ஆத்திரத்தில் இருந்தார். சாலையில் நடந்து சென்ற பாண்டியராஜை வழி மறித்து தகராறில் ஈடுபட்டார். மேலும் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மருமகன் என்றும் பாராமல் குத்தினார். இதில் காயமடைந்த பாண்டியராஜன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்