search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Uthiriyamata Temple Festival"

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வானவேடிக்கையும், தாரைதம்பட்டங்கள் முழங்க புனித உத்திரியமாதா அன்னையின் மின்னொளி தேர் பவனி நடைபெற்றது.

    நத்தம்:

    திண்டுக்கல் மறைமாவட்டம் நத்தம் தாலுகா செந்துறையில் கத்தோலிக்க கிறஸ்தவ பங்கு ஆலயம் உள்ளது.கிளைப்பங்கு நல்லபிச்சன்பட்டியில் உள்ள புனித உத்திரியமாதா ஆலய திருவிழா கடந்த 14 -ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஆலயத்தில் நவநாள் திருப்பலி நடைபெற்றது.

    2 ம்நாள் நிகழ்ச்சியில் புனித உத்திரியமாதா வேண்டுதல், பொங்கல் வைத்தனர். அன்று இரவு புனித உத்திரியமாதா வேண்டுதல் தேர்பவனியும் வலம் வந்தது. 3-ம்நாள் மாலை பொதுபொங்கல், இரவு விருதுநகர் பள்ளி தாளாளர் லாரன்ஸ் மற்றும் பங்குத்தந்தையர்கள் இணைந்து திருவிழா ஆடம்பர பாடல் கூட்டுத் திருப்பலியை நடத்தினார்கள்.அன்று இரவு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வானவேடிக்கையும்,தாரைதம்பட்டங்கள் முழங்க புனித உத்திரியமாதா அன்னையின் மின்னொளி தேர் பவனி மற்றும் புனிதர்களின் 5 சப்பர தேர் பவனிகள் நடைபெற்றது.

    அனைவருக்கும் அன்பின் விருந்து நடைபெற்றது.தொடர்ந்து அன்று இரவு இன்னிசை கச்சேரி நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று மாலை புனிதர்களின் தேர்பவனியும், திப்பலியும்,கொடியிறக்கத்துடன் திருவிழா  நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை செந்துறை பங்குத்தந்தையர்கள் இன்னாசிமுத்து, மைக்கேல், பிரிட்டோ மற்றும் நல்லபிச்சன்பட்டி, கிளைப்பங்கு கிறிஸ்துவ இறைமக்கள் செய்திருந்தனர்.

    ×